08 December, 2009

என்.டி.டி.வி. ஹிந்துவுக்கு மில்லியன் பில்லியன் Thanks!!


நன்றி சொல்லும் நேரமிது!

NDTV Hindu டிவி சேனலில், சென்ற வெள்ளிக்கிழமை (4.12.2009) இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான "Reliance Big TV Byte It" நிகழ்ச்சியில் திரு.சைபர்சிம்மன், கெளதம் இன்ஃபோடெக் திரு. வடிவேலன் இவர்களுடன் என்னையும் பேட்டி எடுத்து வெளியிட்டு இருந்தார்கள்.தமிழ் மொழியில் கம்ப்யூட்டர்/இன்டர்நெட்/மென்பொருட்களைப் பற்றி எழுதும் வலைப்பூக்களைப் பற்றி அறிந்ததும், என்.டி.டி.வி ஹிந்து சேனல் உடனடியாக செயல்பட்டு, சென்னையில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப பதிவர்களைப் பற்றி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றோர், கிராமங்களில் வாழும் மக்கள், இதுவரை கம்ப்யூட்டரை முறையாக கற்க வசதி/நேரம் இல்லாமல் இருப்பவர்கள், இப்படி சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும், தொடந்து நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களால் கணினியை பயன்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.

உதாரணம் : ஆன்லைன் பேங்கிங், ஆன்லைன் டிரேடிங், ஆன்லைன் புக்கிங். ஆன்லைன் தேர்வுகள், இப்படி நிறைய.

கணினிகள் பெரும் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், ஒரு சாதாரண மனிதன் (Lay person) அதை புரிந்துகொண்டு முழுமையாக பயன்படுத்துவதும், எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் சீராக பராமரிப்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

இதற்கான பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து படித்தாலும், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ குறைந்த அளவே தெரிந்துகொள்ள முடிகிறது.

இப்படிப்பட்டவர்கள், நிறைய விஷயங்களை அனுபவத்தில்தான் கற்றுக் கொள்கிறார்கள். “என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் வைரஸ் வந்து டேட்டா அழிந்துவிடுகிறது”. இப்படி புலம்புவர்களை நாம் தினமும் பார்க்கிறோம்.

அதிலும் ஆங்கிலம் சரியாக தெரியாமல் இருப்பவர்களின் நிலைமை மேலும் கடினம்தான். ஏனென்றால் கணினி சம்பந்தமான அதிகபட்ச செய்திகள் இன்டெர்நெட்டில் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அதனால் நிறைய தேவையான விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.

தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் இப்படிப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளன.

தமிழர்கள் இதைப் பற்றி படிக்க, கேள்வி கேட்க, ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள இன்றியமையாத ஊடகமாக (Media) இவை வளர்ந்து வருகின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த வலைப்பூக்களைப் பற்றிய விழிப்புணர்வு, கணினிகளை பயன்படுத்தும் மக்களிடம் குறைவாகவே உள்ளது.

என்.டி.டி.வி ஹிந்து
வின் இந்த நிகழ்ச்சி, இந்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

என்.டி.டி.வி. ஹிந்துவுக்கு மில்லியன் பில்லியன் Thanks.

என்.டி.டி.வி ஹிந்துவின் சரித்ரா பார்த்தசாரதி, பிரதிபா மற்றும் ஒளிப்பதிவாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Youtube-ல் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் மேற்கண்ட வீடியோவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கடைசியாக நான் பார்த்தபோது 3200+ Views!

சக பதிவர்களுக்கு நன்றி தனி பதிவில் வருகிறது.

04 December, 2009

Fake Office - காட்டிக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! பட்டையைக் கிளப்பிய Zoho!!


சமீபத்தில் மைக்ரோசாஃப்ட், தன்னுடைய Cloud Computing புரோகிராம்களைப் பற்றி பேசும்போது , சும்மா இல்லாமல் கூகிள் அப்ஸ், Zoho, Zimbra போன்ற ”Fake Office” வசதிகளை கொடுக்கும் எவரும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீசுக்கு மாற்றாக வர முடியாது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது.

இன்னும் சொல்லப்போனால் கூகிள் டாக்ஸ் வழங்கும் Docs, Spreadsheets, Presentation ஆன்லைன் அப்ளிகேஷன்கள் போல் மைக்ரோசாஃப்ட் இன்னும் எதையும் அதிகாரபூர்வமாக வழங்கவில்லை.

2010 வருட முதல் பாதியில்தான், கூகிள் டாக்ஸ் போன்ற ஆன்லைன் ஆஃபீஸ் அப்ளிகேஷன்களை மைக்ரோசாஃப்ட் அளிக்க இருக்கிறது.

Zoho. Com, கூகிள் டாக்ஸ் போன்று
Zoho CRM,
Zoho Recruit,
Zoho Invoice உட்பட நிறைய ஆன்லைன் அப்ளிகேஷன்களை உருவாக்கி தனக்கென்று ஒரு நல்ல பேர் வாங்கி இருக்கிறது.


மைக்ரோசாஃப்டின் இந்த கருத்துக்கு Zoho-வின் பதிலடி முற்றிலும் எதிர்பாராத வகையில் இருந்தது.

”ஆஹா! ஆஹா!! நாங்க Fake Office-னு மைக்ரோசாஃப்டே மெடல் கொடுத்துவிட்டது! இது எங்களுக்கு பெரிய அங்கீகாரம் தெரியுமா!” என்று Zoho CEO தன் கம்பெனி ப்ளாகில் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

மேலும் அவர் “Zoho-வை பயன்படுத்த யாரும் காசு கொடுத்து சிடியோ டிவிடியோ வாங்க வேண்டாம். பெரிய சைஸ் ஃபைல் எதுவும் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். நூற்றுக்கணக்கான டாலர்கூட கொடுக்கத் தேவையில்லை. ”

”Zoho.com போய் லாகின் செய்தாலே போதும். உடனே எல்லா அப்ளிகேஷன்களையும் பயன்படுத்த துவங்கிவிடலாம்.”

”அதனால்தான் மைக்ரோசாஃப்டுக்கு நாங்கள் Fake Office-ஆக தெரியுது. ”

”ஒருவர் தனது ஃபீல்டில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதாலேயே, மற்ற போட்டியாளர்களை Fake என்று சொல்வது சரியென்றால், நாங்கள் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.”

”Search-ல் கூகிள் முதலிடத்தில் உள்ளது. அதனால் உங்கள் Bing-ஐ “Fake Search" என்று பெயரிட்டு அழைத்தால் சரியாக இருக்குமா?”


மைக்ரோசாஃப்ட் MS-Office-ல் 90% ஆபரேடிங் லாபம் அடிப்பதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.

அத்தோடு விட்டார்களா Zoho.com?

ட்விட்டரில் இதற்கு என்று ஒரு பக்கம்
http://twitter.com/fakeoffice

FakeOffice.Org என்று ஒரு வெப்சைட்.

Fake Office - The movie என்று ஒரு இசை டாக்குமென்டரி என்று பட்டையை கிளப்பிவிட்டார்கள்.அந்த ட்விட்டர் பக்கத்தை பார்த்தால் ”மைக்ரோசாஃப்ட் Zoho-வை Fake office என்று சொல்கிறது. அப்படி என்றால் மைக்ரோசாஃப்டின் Zune மீடியா பிளேயரை எப்படி அழைப்பது? ” என்று ஒரு ட்வீட் கேட்கிறது.

”இதுதான் Fake office-னா எனக்கு இன்னும் நிறைய வேண்டும்”- இப்படியும் ஒரு குரல்.

இந்தக் கூத்து, Zoho.com பற்றி தெரியாதவர்கள்கூட Zoho-வை பற்றி தெரிந்துகொள்ள ஒரு விளம்பரமாக அமைந்துவிட்டது.

Zoho.com CEO ஒரு தமிழர்.

பெயர் ஸ்ரீதர் வேம்பு.

ஓஹோ! Zoho என்றாலே மைக்ரோசாஃப்டுக்கு வேம்பா கசக்க இந்த பேர்கூட காரணமாக இருக்குமோ?

11 October, 2009

இந்தியாவிற்கு மென்பொருள் சுதந்திரம் கிடைப்பது எப்போது?


சுதந்திர மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும்போது ’அந்த’ இம்சை/அடிமை மென்பொருள் நமக்கு எதற்கு?  (சொல்லுங்க பார்க்கலாம்.  ’அந்த’ என்று நான் குறிப்பிடுவது ’எந்த?’)

இதை நன்றாக புரிந்துகொண்ட நாட்டுப் பற்று மிக்க அமெரிக்கர்கள், அமெரிக்க அரசின் செயல்பாடுகளில் சுதந்திர மென்பொருட்களின் பயன்பாட்டை கொண்டுவரவும், அதிகப்படுத்தவும் Open Source For America (http://opensourceforamerica.org/) என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சுதந்திர மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதால் அவை ஏழைபாழைகளுக்குத்தான் என்று நீங்கள் இதுவரை நினைத்து இருந்தால், அந்த எண்ணத்தை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவிடம் இல்லாத காசா? பணமா?  அவர்கள் ஏன் தங்கள் அரசிடம் சுதந்திர மென்பொருளை பயன்படுத்த வற்புறுத்துகிறார்கள்?

இலவசம் என்பது சுதந்திர மென்பொருட்களின் பல முகங்களில் ஒரு முகம்தான்.  இலவசம் என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைத்துக்கொண்டு அதை மட்டம் தட்டுவது தவறு.

இலவசம் என்ற நன்மையையும் தாண்டி Freedom, Transparency, Choice, Security, Fast Updates  -  இப்படி மேலும் பல நன்மைகள் அரசு இயந்திரத்திற்கு/மக்களுக்கு சுதந்திர மென்பொருட்களால் கிடைக்கும்.


அமெரிக்கர்கள், மென்பொருள் பயன்பாட்டில் தனியார் உரிமை மென்பொருட்களையும் (Proprietory Software) தாண்டி, அடுத்த கட்டத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

நாம்தான் ‘அந்த’ மென்பொருளைக் கட்டிகொண்டு அழுதுகொண்டு இருக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் ’அந்த’ இயங்குதளத்தைதான் பயன்படுத்துவேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு பிறந்து வந்திருக்கிறோமா. என்ன?

எந்த நாட்டிலாவது ‘அந்த’ மென்பொருள்தான் பயன்படுத்தவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன?


மென்பொருள் துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே!

அவர்களே சுதந்திர மென்பொருட்களின் அருமை தெரியாமல் ‘அந்த’ அடிமை மென்பொருளைத்தானே தினசரி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நாட்டுப் பற்று இருந்தால், இந்திய மக்கள் அனைவரும் விரும்பி எளிதாக பயன்படுத்தும் வகையில் லினக்ஸ் போன்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களை அவர்கள் மேம்படுத்திகொண்டே இருக்கவேண்டும்.  மக்களிடையே விழிப்புணர்ச்சியை பரப்பவேண்டும்.

நம் நாட்டிற்கு ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை கிடைத்து விட்டது.  ஆனால் மென்பொருள் சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை.

அதே மாதிரி OpenSourceForIndia.Org வலைத்தளத்தை இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து ஆரம்பிக்கும் தருணம் வந்துவிட்டது.  செய்வார்களா?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் இந்த அடிமை மென்பொருள் மோகம்?
இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையுடன்,

+மென்பொருள் பிரபு 

13 July, 2009

வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி?

EMI (Equated Monthly Instalments) கணக்கு போடுவது இன்னும் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. எனக்கு மட்டும் இல்லை. உங்களில் பலருக்கும் இதே நிலைமை இருக்கலாம்.

சாதாரண கால்குலேட்டர், scientific கால்குலேட்டர், spreadsheet புரோகிராம் இப்படி எதிலும் எனக்கு EMI கண்டுபிடிக்கத் தெரியாது. B.Com, 3 வருஷம் படித்த என் நண்பனுக்கே அதை கணக்கு போட வழி தெரியலே.

மீதி இன்ஸ்ட்டால்மென்டை கிரெடிட் கார்டுலே EMI-ஆ போட்டுக்கலாம்னு சேல்ஸ்மேன் சொல்லும்போது, அவங்க சொல்லும் EMI சரிதானான்னு சந்தேகம் வருது. வீட்டு லோன் வாங்க போனாலும் இதே பிரச்சனைதான்.

Cross check செய்ய வழி தேடினேன். கிடைத்தது.

Bankbazaar.com என்ற வலைத்தளத்தில் EMI Calculator பார்த்தேன்.

அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள இந்த பக்கத்தில், கடன் தொகை, வட்டி, கடன் திருப்பிச் செலுத்தும் காலம், பிராஸஸிங் ஃபீஸ் இவற்றை செலக்ட் செய்துவிட்டால், உடனே EMI, செலுத்தப் போகும் வட்டி என்று மொத்த விஷயத்தையும், கணக்கு போட்டு சொல்லி விடுகிறது.


’என் பிரச்சனை அது இல்லீங்க. வீட்டுக்கடனை prepayment அல்லது வேறே வங்கிக்கு மாற்றினால் லாபம் உண்டா? என்று எனக்கு தெரிந்தால் போதும்’ என்றால், அதற்கும் Refinance Calculator இருக்கிறது. மாற்றினால் லாபமா? நஷ்டமான்னு (Cost benefit analysis) தெரிஞ்சுக்கலாம்.தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நான் நினைக்கிறேன். நீங்களும் அவ்வாறே நினைத்தால், இந்த பதிவின் கீழே உள்ள Email Post Icon-ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தெரிந்தவர்களின் email முகவரிக்கு இந்த பதிவை அனுப்பி நல்ல பேர் வாங்கிக்குங்க.

கூகிளில் EMI Calculator என்று தேடினால் இன்னும் நிறைய கிடைக்கிறது.

நன்றி.

10 July, 2009

காதலை கணக்குப் பண்ணலாம் வாங்க!


என்ன பொருத்தம், நமக்குள் என்ன பொருத்தம்
காதலெனும் நாடகத்தில் கல்யாணம் சுபமே!

என்று பாடிக்கொண்டிருந்த என்னிடம், ஓடி வந்தாள் என் மனைவி.

'என்னங்க.. நீங்க பாடறதைக் கேட்ட பிறகுதான் ஞாபகம் வருது. உங்க மொபைலைக் கொடுங்களேன்.'

'எதுக்குன்னு முதல்ல சொல்லு.'

‘காதல் பொருத்தம் பார்க்க ஜோடியின் பேரை SMS அனுப்பிச்சா, எவ்வளவு பொருத்தம்னு சொல்லுமாம். பேப்பரில் விளம்பரம் பார்த்தேன். என் அண்ணனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கே. போட்டுப் பார்க்கலாம்னுதான்.’
’ஜோடிப் பொருத்தம் இல்லேன்னு பதில் வந்தா, நிச்சயம் ஆன கல்யாணத்தை நிறுத்திடுவியா என்ன?’ என்றேன் கிண்டலாக.

’நீங்க எப்பவுமே இப்படித்தான். ஆசைக்குப் போட்டு பார்க்கிறேனே.’

’ஏதோ ஒரு சேனல்ல கூடதான் இப்படி விளம்பரம் வருது. நான் என்னிக்காவது நம்ம பொருத்தம் இப்படி பார்த்து, காசை கரியாக்கி இருக்கேனா? இன்டெர்நெட்டில் ஃப்ரீயா பார்த்துக்கலாமே.’

’அப்படியா! எனக்கு யாருமே சொல்லவே இல்லியே.’

அவளை http://www.lovecalculator.com/ கூட்டிக் கொண்டு போனேன்.

வெள்ளித் திரையில்’ பிரபல ஜோடியான MGR & Saroja Devi போட்டு Calculate அழுத்தினால் பொருத்தம் 78 சதவீதம் வந்தது.

அவ்வாறே, MGR & Nambiar போட்டால் ’ஜீரோ’ சதவீதம் வந்தது.

மற்ற பொருத்தங்கள் பார்த்ததில் சில,

cat & rat 0%
India & Pakistan 1%

microsoft & open source software 1%
microsoft & monopoly 93%


இதற்குள், “ அப்படி என்னதான் இன்ட்ரெஸ்டா பார்த்துட்டு இருக்கீங்க”ன்னு பக்கத்து ஃப்ளாட் மாமி வந்து அவங்க பங்குக்கு ஃப்ரீயா பொருத்தம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

அரை மணி நேரத்தில் எல்லா ஃப்ளாட்டுக்கும் நியூஸ் பரவி, ஒரு குட்டி கும்பலே வந்துடுச்சின்னா பார்த்துக்குங்களேன்.
நிறைய ஒத்துக்கொள்ள முடியாத ரிசல்ட் கூட வந்தது.

எனக்கும், உங்களுக்கும், பலருக்கும் உடனே ஞாபகம் வரும் பல பிரபல ஜோடிகள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பகைவர்கள் லிஸ்ட்டை போட்டுப் பார்த்தாலும், ஹிட்சுக்கு ஆசைப்பட்டு தரம் தாழ்த்திக்க வேண்டாமேன்னு, ரிசல்ட்டை சென்சார் பண்ணிட்டேன்.

உங்களுக்கு இஷ்டமானதை நீங்களே போட்டு பார்த்துக்குங்க.

Disclaimer: குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் பொழுதுபோக்கிற்கும், விளையாடிற்கும்தான். அப்படியே நம்பி உங்கள் பொன்னான வாழ்வை நாசம் செய்துகொள்ள வேண்டாம்.

19 June, 2009

இலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு


நீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா? உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க. என்ன ஒரே ஒரு பிரச்சனைன்னா மழை பெய்தால் Car top அப்பப்ப ஒழுகும். அதைப் பற்றி நீங்க கவலையேபட வேண்டாம். நாங்க இலவசமா Raincoat கொடுத்துடுவோமில்லே” என்றால் அந்த காரை நீங்கள் வாங்குவீர்களா என்ன?
புதியதாக இலவச ஆன்டிவைரஸ் புரோகிராம் (Codename Morro) (Formal name Microsoft Security Essentials) வெளியிடப் போவதாக மைக்ரோசாஃப்ட் சொல்லியிருப்பது, காசுக்கு ஆன்டிவைரஸ் புரோகிராம் விற்று பிழைக்கும் சைமாண்டெக்(Norton) போன்ற கம்பெனிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இலவச ஆன்டிவைரஸ் மட்டும் கொடுத்தா போதுமா?
Anti-Spyware,

Anti-Malware,

Anti-Rootkit,

Anti-Trojan,

Anti-Dialer,

Anti-Worm,

Anti-Adware,

Anti-Bot,

Anti-Keylogger,

Anti-Phishing இதுக்கெல்லாம் நாம எங்கே போவது?
மைக்ரோசாஃப்ட் விண்டோஸையே இலவசமா கொடுக்கிறதா பேச்சுக்கு வைச்சிக்கிட்டாலும், இந்த மேற்குறிப்பிட்ட Anti*.* இல்லாம விண்டோசை ஒழுங்கா ஓட்ட முடியுமா?

இதுங்களை வாங்கறதுக்கும், வருஷாவருஷம் அப்டேட் செய்யறதுக்கும் நாமதானே காசை எண்ணி வைக்கனும்.

தெரியாமதான் கேட்கிறேன். Anti-Virus எழுதத் தெரிந்தவர்களுக்கு, வைரஸே வராதமாதிரி Operating System கோட் செய்யத் தெரியாதா? அல்லது முடியாதா? அல்லது இஷ்டமில்லையா?

லினக்ஸ் வைரஸ் பாதிப்பு இல்லாமல் ஓடுதே. அது எப்படி?

விண்டோஸை இலவசமாக கொடுத்தாலும், personal and home use-க்குதான் தர வாய்ப்பு இருக்கிறது. Commercial use-க்கு காசு கொடுக்கனும்.

லினக்ஸ் personal and home use, commercial use-க்கு கூட இலவசம்தான். Linux Support contract தேவைப்பட்டா வாங்கிக் கொள்ளலாம்.

விண்டோஸ் இலவசமாக தந்தால்கூட எப்பவுமே அப்படி தருவார்கள் என்று அர்த்தம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இனிமேல் காசுக்குத்தான் என்று சொல்லிவிடலாம்.

லினக்ஸ் அப்படி இல்லை. இன்றைக்கு இலவசமா கிடைப்பது என்றைக்குமே இலவசம்தான்.


இலவசமாக கிடைக்கக் கூடிய விண்டோஸை உங்களுக்கு தகுந்தமாதிரி மாற்றி பயன்படுத்த வேண்டும் என்றால் முடியாது. ஏனென்றால் அது proprietory and closed source program.

லினக்ஸ் அப்படி இல்லை. லினக்ஸ் source code டவுன்லோடு செய்து உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மாற்ற நீங்கள் செய்த கோடிங்கை யாரிடமும் பகிர்ந்துகொள்ள தேவையில்லை. நீங்களே வைத்துக் கொள்ளலாம்.

அப்படி மாற்றப்பட்ட லினக்ஸை ஒரு distribution ஆக வெளியிடும்போது மட்டுமே அந்த மாற்றப்பட்ட கோடிங்கை கட்டாயமாக கொடுக்கவேண்டும்.

ஒரு operating system எப்படி இயங்குகிறது என்பதை விண்டோஸ் source code பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றால் முடியாது. Educational purpose என்று காரணம் சொன்னால்கூட பார்க்க கொடுக்கமாட்டார்கள்.

லினக்ஸ் source code-ஐ நீங்கள் educational purpose-க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் லினக்ஸ் ஒரு Free/Libre Open Source Software.

இதனால் கணினி பற்றிய ஆழ்ந்த அறிவு சமூகத்திற்கு கிடைக்கும். இது நல்ல விஷயம்தானே.

இந்த FOSS மென்பொருளை “கட்டற்ற மென்பொருள்” அல்லது ”திறப்பு மூல நிரலி” என்றெல்லாம் அழைத்து வந்தார்கள். இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும் மென்பொருளை “சுதந்திர மென்பொருள்” என்று ஏன் அழைக்கக்கூடாது?
நான் car-னு எதை சொல்றேன். Raincoat-னு எதை சொல்றேன் புரியுதா? லினக்ஸ் பயன்படுத்த Raincoat தேவையில்லை.
back to top