11 April, 2009

குட்டி குட்டி ஐ.டி செய்திகள் 10!

1. சுதந்திர மென்பொருள் ஓபன் ஆபீஸ் 3.0 டவுன்லோடு லிங்க் இது வரை 5 கோடி முறை கிளிக் செய்யப்பட்டு இருக்கிறது.

2. கூகிள் மேப்ஸ் போன்றே, மைக்ரோசாஃப்ட், தான் வழங்கும் Live Maps சர்வீசுக்காக விமானத்தில் இருந்து பூமியை படம் பிடிக்க வசதியாக, 196 Mega Pixel திறனுள்ள ஒரு கேமராவை உருவாக்கியுள்ளது.

3. சுமார் 200 மில்லியன் (20 கோடி) பேர், சோஷியல் நெட்வொர்கிங் வலைதளமான “Facebook.com"-ஐ

பயன்படுத்துவதாக அந்த கம்பெனி அறிவித்துள்ளது. FaceBook வார்த்தையில் 8 எழுத்துக்கள் இருப்பதால் அதை ’F8’ என்றுகூட அழைக்கிறார்கள்.

4. Recession-ல் அடி வாங்கிய கம்பெனிகள், செலவைக் குறைக்க சுதந்திர மென்பொருட்களை (Free and Open Source Software)
பயன்படுத்தலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். Recession வந்ததிலிருந்து ஓபன் ஆபீஸ் டவுன்லோடு எண்ணிக்கை எகிறிக் கொண்டு இருக்கிறது. இப்ப புரியுதா?

5. United States of America-வில் மட்டும் சுமார் 1 கோடி பேர், ஓபன் ஆபீஸை பயன்படுத்துவதாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.

6. ஃப்ரான்ஸ் நாட்டு போலீஸ் டிபார்ட்மெண்ட், சுமார் 1 லட்சம் கணினிகளில் சுதந்திர இலவச மென்பொருளை பயன்படுத்துகிறது. ஓபன் ஆபீஸ், ஃபயர்ஃபாக்ஸ் ருசி கண்ட இவர்கள் போட்ட புது உத்தரவு - “புது கணினி வேணுமா, உபுண்டு லினக்ஸோடுதான் வரும். சரியா?”

7. மலேசிய அரசு சுமார் 10,000 கணினிகளில் ஓபன் ஆபீஸ் பயன்படுத்தி US $ 12 மில்லியனை சேமித்துள்ளது.

8. வியட்நாம் அரசு தன் அரசு அலுவகங்களில், 2009 வருட முடிவுக்குள் சுதந்திர மென்பொருட்களை அதிகமாக பயன்படுத்த முடிவு எடுத்து உள்ளது.

9. அமெரிக்க அரசுக்கு ஐடியா கொடுக்கும் ஒரு வலைத்தளத்தில், சாஃப்ட்வேருக்கு பேடண்ட் கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தாலும் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு source code-ஐ பொதுச் சொத்து ஆக்கி விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

10. ஓபன் ஆபீஸை அடிப்படையாகக் கொண்டு Lotus Symphony, Oxygen Office, Neo Office, Go-oo, Red Office, Euro Office போன்ற office suites வருகின்றன.


4 Comments:

விக்னேஷ்வரி said...

Recession-ல் அடி வாங்கிய கம்பெனிகள், செலவைக் குறைக்க சுதந்திர மென்பொருட்களை (Free and Open Source Software)
பயன்படுத்தலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். //

நல்ல தகவல்கள்.
Free என்பது இந்த இடத்தில் சுதந்திரம் என்னும் பொருளாகாது. அது "இலவச மென்பொருட்களை".

Veera said...

இந்தப் பொருளாதார மந்த நிலை, ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களுக்கு சந்தை கதவுகளை அகலத் திறந்துள்ளது. பெரிய நிறுவனங்களும் ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களில் ஆர்வம் காட்டுவதால், தரமான மென்பொருட்களை எதிர்பார்க்கலாம். இதற்கு, ஓப்பன் ஆபிஸ், உபுண்டு இயங்குதளம் இரண்டுமே சிறந்த உதாரணங்கள்!!

butterfly Surya said...

Good informations.

Very nice.

Thanx.

Cheers

Surya

suthanthira.co.cc said...

//
Blogger விக்னேஷ்வரி said...
நல்ல தகவல்கள்.
Free என்பது இந்த இடத்தில் சுதந்திரம் என்னும் பொருளாகாது. அது "இலவச மென்பொருட்களை".//

Free என்பது Libre என்ற French சொல்லை அடிப்படியாகக் கொண்டது.

Libre-க்கு இரண்டு அர்த்தம். ஒன்று Free. இரண்டாவது Do as you wish (சுதந்திரம்).

back to top