08 April, 2009

அண்ணே.. ஒரு நிமிஷம் வந்துட்டு போங்க! Hot IT News 10!

1. இன்னும் தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகாத "X-Men Origins: Wolverine" என்ற ஆங்கில படத்தை திருட்டுத்தனமாக இன்டெர்நெட்டில்
இருந்து டவுன்லோடு செய்து, Review வேறு செய்த ஒரு FoxNews.com நிருபரின் வேலை பறிக்கப்பட்டது.

2. இன்டெல் அறிமுகப்படுத்திய கடைக்குட்டி "ATOM Processor"
மார்கெட்டுக்கு வந்து, இன்று ஒரு வருடம் ஆகிறது

3. Web Browser மார்க்கெட் ஷேர், மார்ச் 2009 :
ஃபயர்ஃபாக்ஸ் 22%,
ஆப்பிள் சஃபாரி 8%
கூகிள் க்ரோம் 1%
ஓபரா 0.7%
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 67%

4. இன்டர்நெட்டில் தற்போது சுமார் 23 கோடி வலைத் தளங்கள்
இருப்பதாக, நெட்கிராஃப்ட் நிறுவனம் தன் ஏப்ரல் 2009 வெப் சர்வர் survey-யில் அறிவித்துள்ளது.

5. அடுத்து வரப் போகும் ஓபன் ஆபீஸ் 3.1 சுமார் 100 மொழிகளை
support செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் ஃபயர்ஃபாக்ஸின் மார்க்கெட் ஷேர்
35 சதவீதத்தைத் தொட்டது.

7. 2008 CPU மார்க்கெட் ஷேர்: இன்டெல் 82 %, AMD 12 %.

8. நெட்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் இன்டெலின் ATOM
வகை CPU-வின் புதிய மாடலின் வேகம் 2.0 Ghz-ஐ எட்டியுள்ளது.

9. குட்டிக் கம்பெனிகளுக்கு குட்டி சர்வர் - வெறும் 15 user லைசன்ஸோடும், குறைக்கப்பட்ட வசதிகளோடும், "Windows Server Foundation" என்று பெயரிடப்பட்ட
ஒரு மலிவு விலை விண்டோஸ் சர்வரை, மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்து உள்ளது.

10. Send கொடுத்த ஈமெயிலை திரும்பி வா என்றால் வருமா? வரும் என்கிறது ஜீமெயில் லேப்ஸ்!
ஜீமெயிலில் Settings போய் Labs கிளிக் செய்து undo send எனேபில் செய்ய வேண்டும். Send கொடுத்ததிலிருந்து 5 வினாடிக்குள், மேலிருக்கும் படத்தில் வரும் மாதிரி undo கிளிக் செய்தால் மெயில் போகாது.

11. உங்கள் வெப் ஈமெயிலில் POP3 support இருந்தால், மெயிலை Thunderbird போன்ற ஈமெயில் client மூலம் டவுன்லோடு செய்துவிட்டு நெட் கனக்‌ஷனை கட் செய்து கொள்ளலாம். அப்புறம் அந்த மெயிலை கனக்‌ஷன் இல்லாமலேயே படித்துக் கொள்ளலாம். Dial up கனக்‌ஷன் இருப்பவர்களுக்கு இந்த feature உதவும்.Windows Live Hotmail பயன்படுத்தும் அனைவருக்கும், இந்த வசதியை மைக்ரோசாஃப்ட் இப்போது வழங்கியுள்ளது.

நான் மணிக்கணக்காய் browse செய்து சேர்த்த விஷயங்களை ஒரே நிமிடத்தில் படித்து விட்டீர்கள். அறிவாளி அண்ணே நீங்க !

13 Comments:

சென்ஷி said...

//நான் மணிக்கணக்காய் browse செய்து சேர்த்த விஷயங்களை ஒரே நிமிடத்தில் படித்து விட்டீர்கள். அறிவாளி அண்ணே நீங்க !//

:-)))

அதற்கான நன்றிகளை பின்னூட்டமாக தெரிவித்துக்கொள்கின்றேன்

butterfly Surya said...

சூப்பர். நல்ல தகவல்கள்.

நிறைய browse செய்யுங்கள்.

தகவல் தாருங்கள்.

நன்றி.

Rajaraman said...

Very useful and informative article. Thanks lot.

sarathy said...

excellent...

செல்வமுரளி said...

நன்றி!! நண்பரே!!

CVR said...

Undo send is a rocking idea!
Thanks a lot for all the info! :-)

சுகுமார் said...

thanks machi
ennai arivalinu sollittingale

Vijay said...

All your short news are damn good.

Keep looking for more such posts...

Thatchai Kannan said...

Very good blog.... Thanks for all information...

CM ரகு said...

thanks a lot

நாஞ்சில் பிரதாப் said...

//நான் மணிக்கணக்காய் browse செய்து சேர்த்த விஷயங்களை ஒரே நிமிடத்தில் படித்து விட்டீர்கள். அறிவாளி அண்ணே நீங்க !//

ஹீஹீஹீ... நீங்கதாண்ணே அறிவாளி...நாங்க படிப்பாளி மட்டும்தான்... தகவலுக்கு நன்றி..

எஸ்.ராஜாபாபு said...

Hi! brother
me to like to write many thinks but not very proficient in Tamil ( I mean very dead slow and mistakes) you are god grace to us. thanks to you like blogger's cheers.
ஏவளவு அறிவை தேடி தரும் ஒன்கழுக்கு நன்றி.

suthanthira.co.cc said...

//எஸ்.ராஜாபாபு said...
Hi! brother. you are god grace to us.//

நன்றி. ராஜாபாபு.

back to top