09 June, 2009

வெறும் 8 AA பேட்டரிகளில் ஓடும் நெட்புக்.


உலகின் முதல் எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் ENIAC-ஐ ஓட்ட ஒரு சிறிய மின் நிலையமே (Power Station) தேவைப்பட்டது.

இப்ப என்னடான்னா வெறும் 8 standard NiMh AA பேட்டரியில் (Rechargeable) 4 மணி நேரம் வரை ஓடும் நெட்புக் (Norhtech Gecko EduBook) மார்க்கெட்டுக்கு சில மாதங்களில் வரப்போகுது.

அடுத்து பட்டன் செல்லில் ஓடும் சூப்பர் கம்ப்யூட்டர் வந்தா ஆச்சரியப்படாதீங்க!


இந்த NiMh AA பேட்டரிகள் எலக்ட்ரானிக் கடைகளில் நியாயமான விலையில் எளிதாக கிடைக்கும்.

இந்த நெட்புக்கில் விண்டோஸ் XP, லினக்ஸ் இரண்டும் ஓட்டலாம்.

1024 x 600 ரிசல்யூஷனோடு 8.9 இன்ச் ஸ்க்ரீன், 1 GHz பிராஸசர், 1 GB வரைக்கும் DDR2 மெமரி, SD Card, 3 external USB 2.0 போர்ட், டச் பேட், நெட்வொர்க் கார்டு, இன்டர்னல் மைக் & ஸ்பீக்கர் எல்லாம் இருக்கிறது. விலை சுமார் $200-ல் இருந்த்து ஆரம்பம்.

Replacement பேட்டரி விற்பதில் கொழுத்த லாபம் பார்க்கும் லாப்டாப் கம்பெனிகளிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைத்தால் சரி.

அதைப்பற்றி ஒரு வீடியோ..

9 Comments:

ஆ! இதழ்கள் said...

Replacement பேட்டரி விற்பதில் கொழுத்த லாபம் பார்க்கும் லாப்டாப் கம்பெனிகளிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைத்தால் சரி.//

கரீகட்டா சொன்னீங்க.

வரட்டும் வரட்டும்.

கலையரசன் said...

உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/index.asp

suthanthira.co.cc said...

நன்றி கலையரசன் அவர்களே!

இது நம்ம ஆளு said...

அடுத்து பட்டன் செல்லில் ஓடும் சூப்பர் கம்ப்யூட்டர் வந்தா ஆச்சரியப்படாதீங்க!

Replacement பேட்டரி விற்பதில் கொழுத்த லாபம் பார்க்கும் லாப்டாப் கம்பெனிகளிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைத்தால் சரி.

அருமை வரவேற்போம்

SUFFIX said...

மிக்க நன்றி நன்பரே, நல்ல பயனுள்ள தகவல்களா தருகிறீர்கள், வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

இந்த நெட்புக் இந்தியாவுக்கு வந்து விட்டதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

suthanthira.co.cc said...

//இந்த நெட்புக் இந்தியாவுக்கு வந்து விட்டதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

ஐயா, தங்கள் வருகைக்கு நன்றி.

இன்னும் வரவில்லை. கூடிய சீக்கிரம் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

CP said...

ur posts r really good!!keep posting..n one thing r u using linux????

suthanthira.co.cc said...

//one thing r u using linux????//

லினக்ஸ் பயன்படுத்தாமல் இதெல்லாம் எப்படி தெரியும்.

back to top