22 June, 2009

பில் கேட்ஸ் வீட்டில் iPod, iPhone-க்கு தடை+ மற்ற IT செய்திகள்


1. உலகமே விருப்பத்துடன் பயன்படுத்தும் ஆப்பிளின் ஐபோட்(iPod), ஐஃபோன்(iPhone) மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் பசங்க (2 பெண்கள், ஒரு பையன்) ஆசைப்பட்டு கேட்டாகூட கிடையாது.

இதை நான் சொல்லலைங்க! பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸே Vogue பத்திரிகைக்கு கொடுத்த ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க!

தன் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருக்கும் ஐஃபோன்களை திருமதி. பில் கேட்ஸ் பார்த்துட்டு, நமக்குன்னு ஒன்னு இல்லையே என்று ரொம்பத்தான் ஏங்கிப் போய் கிடக்கறாங்க.

2. இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பயன்படுத்துபவர்களுக்கு $10,000 பரிசை தர மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளது. IE8-ல் மட்டுமே தெரியும் மாதிரி ஒரு web page-ஐ உருவாக்கி மறைத்து வைத்துள்ளது.


Twitter-ல் அது தொடர்ந்து தரும் clue-க்களை வைத்து அந்த webpage-ஐ முதலில் கண்டுபிடிப்பவருக்கே அந்த $10,000 சொந்தம். 19 ஜூனில் இருந்து அந்த போட்டி நடந்துகொண்டு இருக்கிறது.

மேற்கொண்டு விவரங்களுக்கு http://www.tengrandisburiedhere.com/ பாருங்கள்.

“சொக்கா! இந்த பரிசு எனக்கில்லே. எனக்கில்லே.”


3. ஒரு ஆய்வில், சுமார் மூன்றில் இரண்டு பேர், கம்பெனி கொடுத்த லாப்டாப்பை அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போட (sincerely) பயன்படுத்துவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


4. இன்டெர்நெட்டில் தற்போது சுமார் 500 பில்லியன் GB அளவுக்கு data கொட்டிக் கிடப்பதாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். விலை குறைந்து போச்சுன்னு டபுள் டிஜிட் மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா வாங்கி நாம இஷ்டத்துக்கு சுட்டுத் தள்ளிய ஃபோட்டோக்களும், வீடியோக்களும் இதில் சேர்த்தி.


5. இன்னும் சில மாதங்களில் Unix Operating System தனது 40-ஆவது பிறந்த நாளை கொண்டாடப் போகிறது. நம்ம லினக்சுக்கு சுமார் 18 வயது ஆகப்போகிறது. மேஜர் ஆகப்போகும் லினக்சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!


6. Redhat ஸ்பான்சர் செய்யும் ஃபெடோரா(Fedora) லினக்ஸ் புதியதாக Fedora 11 பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 20 நொடியில் booting ஆக முயற்சிப்பது, default ஃபைல் சிஸ்டமாக புதிய ext4, ஓப்பன் ஆபீஸ் 3.1, KDE 4.2.2 ஆகியவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில சிறப்பு அம்சங்கள். செல்லப் பெயர் Leonidas.

7. V1*GRA வாங்கலியோ.. இப்படி இதை வாங்கு. அதை வாங்குன்னு அழையா விருந்தாளியா வந்து தொல்லை கொடுக்கும் குப்பை ஈமெயில்களைத்தான் Spam என்கிறார்கள். மைக்ரோசாஃப்ட் தன் அறிக்கையில் உலகின் மொத்த ஈமெயிலில் 97 சதவீதம் spam என்று சொல்கிறது. அவ்வளவு ஒன்னும் என் inbox-க்கு வரலியேன்னா அதுவும் சரிதான். Mail server-லியே Spam filter வைத்து அதிகபட்சம் ஸ்பாமை நசுக்கிடறாங்களே!

11 Comments:

யூர்கன் க்ருகியர் said...

Nice information.Thanks!

Tech Shankar said...

Thanks Buddy..

//இன்னும் சில மாதங்களில் Unix Operating System தனது 40-ஆவது பிறந்த நாளை கொண்டாடப் போகிறது. நம்ம லினக்சுக்கு சுமார் 18 வயது ஆகப்போகிறது. மேஜர் ஆகப்போகும் லினக்சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

dondu(#11168674346665545885) said...

//இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பயன்படுத்துபவர்களுக்கு $10,000 பரிசை தர மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளது.//

ஆனா நாங்கதான் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரையே தொடறதில்லையே, அப்புறம்தானே இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பதியெல்லாம் பேச முடியும்?

ரொம்பத்தான் desperate ஆயிட்டாங்க போலிருக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bhuvanesh said...

Good Informations.. Thanks:)

SUFFIX said...

//இன்டெர்நெட்டில் தற்போது சுமார் 500 பில்லியன் GB அளவுக்கு data கொட்டிக் கிடப்பதாக மதிப்பிட்டு இருக்கிறார்கள்//

நானும் இத பலமுறை யோசிச்சு இருக்கேன், இப்படி அநியாயத்துக்கு நாம அப்லோட் பன்ரோமேன்னு, அதனால யாருக்கும் குத்தம் குறையோ இல்லைனா சரித்தான்.

மகேஷ் : ரசிகன் said...

Nice Info!

அப்பாவி தமிழன் said...

நீங்க சொன்ன மாதிரியே tamilwares தளத்த மாத்திட்டேன் இப்போ எப்டி இருக்குன்னு சொல்லுங்க

Gokul said...

இருப்பதிலேயே கேவலமான ஒரு ப்ரவ்சர் என்றால் அது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 தான் ..விஸ்டாவில் இதை உபயோகபடுத்தவே முடியவில்லை, எப்போது restart ஆகும் என்று அதற்கே தெரியவில்லை.

நான் உபயோகிப்பது நெருப்பு நரியை ...

suthanthira.co.cc said...

//dondu(#11168674346665545885) said...
ரொம்பத்தான் desperate ஆயிட்டாங்க போலிருக்கு?//

போட்டி அதிகமாகிவிட்டது சார். போன வெர்ஷன் ஆப்பிள் சஃபாரி பயன்படுத்திப் பார்த்தேன். எழுத்துகள் அவ்வளவு அழகாக இருக்கிறது. அவ்வளவு அழகு தீநரியில்கூட இல்லை.

Anonymous said...

good very good

Siraj said...

Nice information, Keeeeeeep it up

back to top