19 June, 2009

இலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு


நீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா? உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க. என்ன ஒரே ஒரு பிரச்சனைன்னா மழை பெய்தால் Car top அப்பப்ப ஒழுகும். அதைப் பற்றி நீங்க கவலையேபட வேண்டாம். நாங்க இலவசமா Raincoat கொடுத்துடுவோமில்லே” என்றால் அந்த காரை நீங்கள் வாங்குவீர்களா என்ன?
புதியதாக இலவச ஆன்டிவைரஸ் புரோகிராம் (Codename Morro) (Formal name Microsoft Security Essentials) வெளியிடப் போவதாக மைக்ரோசாஃப்ட் சொல்லியிருப்பது, காசுக்கு ஆன்டிவைரஸ் புரோகிராம் விற்று பிழைக்கும் சைமாண்டெக்(Norton) போன்ற கம்பெனிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இலவச ஆன்டிவைரஸ் மட்டும் கொடுத்தா போதுமா?
Anti-Spyware,

Anti-Malware,

Anti-Rootkit,

Anti-Trojan,

Anti-Dialer,

Anti-Worm,

Anti-Adware,

Anti-Bot,

Anti-Keylogger,

Anti-Phishing இதுக்கெல்லாம் நாம எங்கே போவது?
மைக்ரோசாஃப்ட் விண்டோஸையே இலவசமா கொடுக்கிறதா பேச்சுக்கு வைச்சிக்கிட்டாலும், இந்த மேற்குறிப்பிட்ட Anti*.* இல்லாம விண்டோசை ஒழுங்கா ஓட்ட முடியுமா?

இதுங்களை வாங்கறதுக்கும், வருஷாவருஷம் அப்டேட் செய்யறதுக்கும் நாமதானே காசை எண்ணி வைக்கனும்.

தெரியாமதான் கேட்கிறேன். Anti-Virus எழுதத் தெரிந்தவர்களுக்கு, வைரஸே வராதமாதிரி Operating System கோட் செய்யத் தெரியாதா? அல்லது முடியாதா? அல்லது இஷ்டமில்லையா?

லினக்ஸ் வைரஸ் பாதிப்பு இல்லாமல் ஓடுதே. அது எப்படி?

விண்டோஸை இலவசமாக கொடுத்தாலும், personal and home use-க்குதான் தர வாய்ப்பு இருக்கிறது. Commercial use-க்கு காசு கொடுக்கனும்.

லினக்ஸ் personal and home use, commercial use-க்கு கூட இலவசம்தான். Linux Support contract தேவைப்பட்டா வாங்கிக் கொள்ளலாம்.

விண்டோஸ் இலவசமாக தந்தால்கூட எப்பவுமே அப்படி தருவார்கள் என்று அர்த்தம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இனிமேல் காசுக்குத்தான் என்று சொல்லிவிடலாம்.

லினக்ஸ் அப்படி இல்லை. இன்றைக்கு இலவசமா கிடைப்பது என்றைக்குமே இலவசம்தான்.


இலவசமாக கிடைக்கக் கூடிய விண்டோஸை உங்களுக்கு தகுந்தமாதிரி மாற்றி பயன்படுத்த வேண்டும் என்றால் முடியாது. ஏனென்றால் அது proprietory and closed source program.

லினக்ஸ் அப்படி இல்லை. லினக்ஸ் source code டவுன்லோடு செய்து உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மாற்ற நீங்கள் செய்த கோடிங்கை யாரிடமும் பகிர்ந்துகொள்ள தேவையில்லை. நீங்களே வைத்துக் கொள்ளலாம்.

அப்படி மாற்றப்பட்ட லினக்ஸை ஒரு distribution ஆக வெளியிடும்போது மட்டுமே அந்த மாற்றப்பட்ட கோடிங்கை கட்டாயமாக கொடுக்கவேண்டும்.

ஒரு operating system எப்படி இயங்குகிறது என்பதை விண்டோஸ் source code பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றால் முடியாது. Educational purpose என்று காரணம் சொன்னால்கூட பார்க்க கொடுக்கமாட்டார்கள்.

லினக்ஸ் source code-ஐ நீங்கள் educational purpose-க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் லினக்ஸ் ஒரு Free/Libre Open Source Software.

இதனால் கணினி பற்றிய ஆழ்ந்த அறிவு சமூகத்திற்கு கிடைக்கும். இது நல்ல விஷயம்தானே.

இந்த FOSS மென்பொருளை “கட்டற்ற மென்பொருள்” அல்லது ”திறப்பு மூல நிரலி” என்றெல்லாம் அழைத்து வந்தார்கள். இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும் மென்பொருளை “சுதந்திர மென்பொருள்” என்று ஏன் அழைக்கக்கூடாது?
நான் car-னு எதை சொல்றேன். Raincoat-னு எதை சொல்றேன் புரியுதா? லினக்ஸ் பயன்படுத்த Raincoat தேவையில்லை.

75 Comments:

Anonymous said...

முற்றிலும் உண்மை லினக்ஸ் விண்டோசை விட பல மடங்கு மேலானது

சூர்யா ௧ண்ணன் said...

// Anti-Virus எழுதத் தெரிந்தவர்களுக்கு, வைரஸே வராதமாதிரி Operating System கோட் செய்யத் தெரியாதா? அல்லது முடியாதா? தெரியாமதான் கேட்கிறேன்.

லினக்ஸ் வைரஸ் பாதிப்பு இல்லாமல் ஓடுதே. அது எப்படி?//

-சரியான கேள்வி

Tech Shankar said...

Now I am into Ubuntu Linux.

suthanthira.co.cc said...

//தமிழ்நெஞ்சம் said...

Now I am into Ubuntu Linux.
//

Thanks Tamilnenjam for voting in Tamilish and Oneindia.

Have you tried linux Mint. Better than Ubuntu

வடுவூர் குமார் said...

பல நேரங்களில் நானும் லினக்ஸ் பக்கமே.வீடியோ சேட் இன்னும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்.வெப் கேம் சப்போர்ட் இன்னும் முழுமையடையவில்லை.

mugunthkumar said...

"Any OS capable of running a 3rd party program can technically run a virus" - Wikipedia

மேக் இப்படி தான் சொன்னான்... அனால் இப்போ மார்க்கெட் ஷேர் அதிகம் ஆனதில் இருந்து... ஒன்னு ரெண்டு வைரஸ் வரத்தான் செய்யுது...
லினக்ஸ்/உநிக்ஸ்/மேக் விண்டோஸ் விட மேலான இயங்குதளம் ஆக இருந்தாலும், விண்டோஸ் use பண்றதுக்கு ரொம்ப cheap அதான் தல எல்லா கம்பெனியிலும் லினக்ஸ் use பண்றது இல்லை...
இன்றைக்கு லினக்ஸ்ஐ "educational/pedagogical purpose" க்கு மட்டுமே use பண்றாங்க...

லினக்ஸ் க்கு எப்டி வைரஸ் இல்லையோ, அதே போல், சாப்ட்வீரும் இல்லை...

பிகு: நான் விண்டோஸ் use பண்றவன் அல்ல... முழு நேரம், மேக் தான் use பண்றேன்... The underlying architecture is hard core UNIX...

BTW, Nice post...

mugunthkumar said...

மேக் உம் open source தான்... goto
http://www.opensource.apple.com/ for downloading the mac darwin kernel...

I believe in open source. But someone should take care of providing a streamlined build quality. Whether it's apple or canonical, I don't care.

The Rebel said...

Nice Post.
If you wanna earn dont stick on to tamil blogs..Better create a domain too..

Anonymous said...

முகுந்த்குமார் அவர்களுக்கு மறுமொழி

லினக்சுக்கு சாப்ட்வேர் இல்லை என்று தாங்கள் கூறுவது முற்றிலும் தவறானது. முழு நேரம் மாக் பயனாளரான நீங்கள் பயன்படுத்தாத இயங்குதளம் பற்றி கூறுவது ஏற்புடையதல்ல. உலகிலேயே லினக்சுக்கு தான் அதிக சாப்ட்வேர் உள்ளது. உதாரணமாக ஒரு ஆடியோ அல்லது வீடியோ ப்ளேயருக்கே ஏகப்பட்ட options உள்ளன.
http://en.wikipedia.org/wiki/List_of_Linux_audio_software
http://en.wikipedia.org/wiki/Comparison_of_media_players
இந்த இரண்டு link இல் பாருங்கள் லினக்சிற்கு எவ்வளவு சாப்ட்வேர் உள்ளது என்று. இது வெறும் ஒரு சாம்பிள் தான்.
மாக் பயனர் நீங்கள் தான் அந்த நிறுவனத்தை நம்பி இருக்கிறீர்கள். லினக்ஸ் யாரையும் நம்பி இல்லை நம்பவும் தேவை இல்லை. உலகமே லினக்ஸாக மாறினாலும் வைரஸ் மற்றும் அது போன்ற பாதிப்பு அதற்க்கு கம்மியாகத்தான் இருக்கும் ஏனென்றால் லினக்ஸ் உலகம் முழுவதும் பல பேர் சொந்த ஆர்வத்தில் உருவாகிய இயங்குதளம். யாரும் காட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படவில்லை.

லினக்ஸ் என்பது நெல்லிக்கனி போன்றது. முதலில் கசக்கும் பின்பு இனிக்கும் உடலுக்கும் நல்லது.
விண்டோஸ் என்பது பர்கர் இனிப்பு போன்ற சுவை தரக்குடியது. உடலுக்கும் தீங்கு.
மாக் என்பது நல்ல சோறு ஆனால் அதை நீங்கள் எடுத்து சாப்பிட முடியாது. ஆப்பிள்காரனா பாத்து தந்தா உண்டு.

எப்படி பார்த்தாலும் லினக்ஸ் தான் நல்ல இயங்குதளம். மாக் அதற்க்கு அடுத்தது. விண்டோவ்சை குப்பையில் போடுவது உத்தமம்.

suthanthira.co.cc said...

ஓட்டு போட்டு இந்த பதிவை பாப்புலர் ஆக்கிய அனைவருக்கும் நன்றி.

பாப்புலர் ஆனாத்தான் நிறைய பேரிடம் போய் சேருகிறது.

அதனால்தான் வெறுத்துப் போய் ஒரே புலம்பல்.

ஆனாலும் தமிழிஷ் பாப்புலர் ஆக 20 ஓட்டு ஆக்கியது ரொம்ப ரொம்ப அதிகம்.

இன்னும் 25 மேட்டர் டிராஃப்ட்லே போட்டு வெச்சு இருக்கேன்.

உங்க ஆதரவு இல்லாமல் என்னால் எதுவும் எழுத முடியாத நிலைமை வந்துவிட்டது.

mugunthkumar said...

Mr Anony,
Audio players இருந்தால் நெறைய சாப்ட்வேர் இருக்கு என்று அர்த்தம் இல்லை... உபயோகபடுற மாதிரியான சாப்ட்வேர் மிகவும் குறைவு... Like, Adobe Photoshop, or video editing software, or AutoCAD like Engineering Drawing software, மைக்ரோசாப்ட் ஆபீஸ் (விண்டோஸ் குப்பையாக இருக்கலாம், அனால் ஆபீஸ் மிகவும் நல்ல சாப்ட்வேர்...) and don't compare openoffice or staroffice to Microsoft office pls... ஓசி யா இருந்தா மட்டும் போதாது... கொஞ்சம் "quality" உம் இருக்கணும்...

அப்துல் ரகுமான்(சாதிக் அலி) said...

லினக்ஸ் ல் இது வர வைரஸ் இல்லாதது உண்மைதான். வந்து விட்டால் என்ன பண்ணுவீர்கள்? எங்கே ஓடுவீர்கள்? புதிய லினக்ஸ் இன்ஸ்டால் பண்ணுவீர்களா? மைக்ரோசாப்ட் கொடுப்பதை போல் யார் உங்களுக்கு பேட்ச் கொடுப்பார்கள். இது வரை வைரஸ் இல்லாததால் தானே இத்தனை ஆட்டம்? வந்து விட்டால்? மைக்ரோசாப்ட் ல் இருக்கிற எத்தனையோ புதுமை லினக்ஸ் ல் இல்லை. இதுதான் உண்மை

CP said...

ur car example is super!!!! and then i'm also using ubuntu and kubuntu.

suthanthira.co.cc said...

//OpenID mugunthkumar said...
லினக்ஸ் க்கு எப்டி வைரஸ் இல்லையோ, அதே போல், சாப்ட்வீரும் இல்லை...//

மென்பொருளே இல்லை என்று சொல்ல முடியாது. Autocad, Photoshop போன்ற பிரபல மென்பொருட்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

suthanthira.co.cc said...

// Anonymous said
லினக்ஸ் என்பது நெல்லிக்கனி போன்றது. முதலில் கசக்கும் பின்பு இனிக்கும் உடலுக்கும் நல்லது.
விண்டோஸ் என்பது பர்கர் இனிப்பு போன்ற சுவை தரக்குடியது. உடலுக்கும் தீங்கு.
மாக் என்பது நல்ல சோறு ஆனால் அதை நீங்கள் எடுத்து சாப்பிட முடியாது. ஆப்பிள்காரனா பாத்து தந்தா உண்டு.//


சூப்பர்மா

suthanthira.co.cc said...

//அப்துல் ரகுமான்(சாதிக் அலி) said...

லினக்ஸ் ல் இது வர வைரஸ் இல்லாதது உண்மைதான். வந்து விட்டால் என்ன பண்ணுவீர்கள்? எங்கே ஓடுவீர்கள்? புதிய லினக்ஸ் இன்ஸ்டால் பண்ணுவீர்களா? . இது வரை வைரஸ் இல்லாததால் தானே இத்தனை ஆட்டம்? வந்து விட்டால்?//


வரட்டுமே? ஓட்டையை நாங்க உடனே அடைச்சிடுவோம். ஓட்டையை அடைக்காம Anti-Virus எழுதி உங்ககிட்டே பணம் புடுங்க மாட்டோம்.

suthanthira.co.cc said...

// imran said...

ur car example is super!!!!//

கார் example புரிந்தவர்களுக்கு இங்கு ரொம்ப நாளா நடந்து கொண்டு இருக்கும் கூத்தும் நன்றாக புரியும்.

நம்மை கேனயன்னு நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

suthanthira.co.cc said...

//OpenID mugunthkumar said. பிகு: நான் விண்டோஸ் use பண்றவன் அல்ல... முழு நேரம், மேக் தான் use பண்றேன்///

ஐயா. நான் வேர்வை சிந்தி நாள் முழுக்க கூலிக்கு உழைக்கும் மக்களில் ஒருவன். என்னால் Macintosh வாங்க முடியாது. வாங்கினால் சோறு இல்லாமல் நானும் என் குடும்பமும் நடுத்தெருவில் நிற்க வேண்டும்.
என்னை மாதிரி மக்கள் பயன்பெற வேண்டும் என்றுதான் இந்த வலைப்பூ எழுதுகிறேன்.

suthanthira.co.cc said...

//Blogger அப்துல் ரகுமான்(சாதிக் அலி) said...மைக்ரோசாப்ட் கொடுப்பதை போல் யார் உங்களுக்கு பேட்ச் கொடுப்பார்கள்.

லினக்ஸை ஒரு உலகளாவிய community-யே சேர்ந்து உருவாக்கி இருக்கிறது. அதே community “patches" கொடுக்கும். அதுவும் இலவசமாக.

suthanthira.co.cc said...

//OpenID mugunthkumar said...விண்டோஸ் use பண்றதுக்கு ரொம்ப cheap அதான் தல எல்லா கம்பெனியிலும் லினக்ஸ் use பண்றது இல்லை... //

கூகிள் தன் சர்வர்களில் முழுக்க முழுக்க லினக்ஸ் பயன்படுத்தி விண்டோஸை எழுதி பயன்படுத்தும் மைக்ரோசாஃப்டையே குலைநடுங்க வைத்துள்ளது. அதுதான் லினக்சின் power. புரிஞ்சுக்குங்க.

suthanthira.co.cc said...

//mugunthkumar said...don't compare openoffice or staroffice to Microsoft office pls... ஓசி யா இருந்தா மட்டும் போதாது... கொஞ்சம் "quality" உம் இருக்கணும்...//

தானமா கிடைத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்கக் கூடாது என்று தமிழில் பழமொழி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

Vista மட்டும் ரொம்ப "quality"-யோட வந்துதோ? காசு கொடுத்து vista வாங்கிய எவ்வளவோ பேர் வெறுத்துப் போய் XP திரும்பி போயிட்டாங்க.

ஒரு பைசா கூட எதிர்பார்க்காமல் இவ்வளவு தூரம் program செய்து லினக்ஸை improve செய்து இருக்கிறார்களே. அதை பாராட்டக் கூடிய நல்ல மனது உங்களுக்கு இல்லையா?

பொருத்திருந்து பாருங்கள்.
Open source will rule the world.

suthanthira.co.cc said...

//mugunthkumar said...இன்றைக்கு லினக்ஸ்ஐ "educational/pedagogical purpose" க்கு மட்டுமே use பண்றாங்க...//

அப்படின்னா ஏன் மைக்ரோசாஃப்ட், லினக்ஸை பார்த்து பயந்து லட்சக்கணக்கான டாலர் செலவு செய்து "Get the Facts" advertisement campaign நடத்தி, லினக்சை விட விண்டோஸ்தான் பெட்டர்னு டமாரம் அடிக்குது.

educational/pedagogical purpose-க்கு மட்டுமே பயன்படும் ஒரு மென்பொருளை commercial companies யாராவது முதலில் சட்டை செய்வார்களா பாருங்கள்.

Tech Shankar said...

Yes. Sai.. I am quoting it again here.

//The Rebel said...

Nice Post.
If you wanna earn dont stick on to tamil blogs..Better create a domain too..

Anonymous said...

I'm a long time windows user until i started using Linux. Nowadays i's not even using windows... :)
Mr. Mac user, i mean mugunthkumar, u have all softwares for linux. All alternate softwares are available in linux for your windows or mac proprietory softwares.

http://www.linuxalt.com/

Anonymous said...

One more thing i would love to say.
"The open source community is busy in working instead of marketing"

Open source community - ithu thaana serntha kuutam, Bill gates maari aalvaichu sertha kutam kidaiyathu..........

suthanthira.co.cc said...

//Anonymous said... Open source community - ithu thaana serntha kuutam, Bill gates maari aalvaichu sertha kutam kidaiyathu..........//

ஆஹா! ஓஹோ! Super Remix!

Anonymous said...

ஐயோ ஐயோ முகுந்துகுமார்
உங்களை நினைத்தால் பாவமா இருக்கு.
Adobe Photoshop = GIMP (http://www.gimp.org)
Video editing software = FFMPEG, MENCODER, AVIDEMUX இன்னும் எவ்வளவோ உள்ளது.
Autocad software = Qcad ( http://www.ribbonsoft.com/qcad.html)
pythoncad = http://www.pythoncad.org/

இன்னும் எவ்வளவோ. ஒன்றை உபயோகப்படுத்தாமலே எப்படி கருத்து சொல்றீங்க நீங்க. இது எல்லாத்தையும் ப்ளஸ் விண்டோஸ், மாக் எல்லாம் பயன்படுத்தி தான் நாங்க சொல்றோம்.
உங்களுக்கு தெரியாத பிற விஷயங்களை சொல்கிறேன்.
FFMPEG - hall of shame ( http://ffmpeg.org/shame.html )

இது FFMPEG எனும் இலவச வீடியோ எடிட்டிங் தளத்தை கொண்டு உருவாக்கி தற்சமயம் கமர்சியலாக உள்ள மென்பொருள்களின் அட்டவணை. இவை எல்லாமே விண்டோஸ் தளத்தில் இயங்குபவை.
இதற்க்கு ஏன் hall of shame என்று பெயர் வைத்தார்கள் ? GNU விதிப்படி இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களை பயன் படுத்தும் பொது அதன் சோர்ஸ் கோடை கொடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை.

சும்மா கருத்து சொல்லணும்னு சொல்ல கூடாது.

Anonymous said...

// லினக்ஸ் ல் இது வர வைரஸ் இல்லாதது உண்மைதான். வந்து விட்டால் என்ன பண்ணுவீர்கள்? எங்கே ஓடுவீர்கள்? புதிய லினக்ஸ் இன்ஸ்டால் பண்ணுவீர்களா? மைக்ரோசாப்ட் கொடுப்பதை போல் யார் உங்களுக்கு பேட்ச் கொடுப்பார்கள். இது வரை வைரஸ் இல்லாததால் தானே இத்தனை ஆட்டம்? வந்து விட்டால்? மைக்ரோசாப்ட் ல் இருக்கிற எத்தனையோ புதுமை லினக்ஸ் ல் இல்லை. இதுதான் உண்மை //

பெடோராவிற்கு ரெட் ஹேட் பேட்ச் தரும்
உபுண்டுவிற்கு கனோனிகல் பேட்ச் தரும்
ஸ்லாக்க்வெருக்கு அவர்களே பேட்ச் தருகிறார்கள். லினக்ஸின் பெயரும் நிறுவனத்தின் பெயரும் ஒன்று.

உலகில் உள்ள மற்ற அனைத்து லினக்சும் இந்த மூன்றில் இருந்தே நிறுவப்படுகின்றன. ஆனால் லினக்ஸ் பேட்ச் என்பது தலைவலி போய் திருகுவலி வந்தா மாதிரி மொக்கையா இருக்காது. சூப்பரா இருக்கும்.

அதே போல் லினக்சுக்கு வைரஸ் இல்லை என்று கூறாதீர். வைரஸ் உண்டு. ஆனால் அவை செயல் பட வேண்டும் என்றால் நீங்களா போய் ஏதாவது முட்டாள்தனமாக செய்தால் தான் உண்டு.
ஒண்ணுமே தெரியாம கறுத்து கூறுவதை எல்லாரும் நிறுத்துங்கள். என்னையும் சேர்த்துதான் ;)

Ajith said...

உண்மை லினக்ஸ் ஒரு வரப்பிரசாதம் எமக்கு. ஆனால் எல்லா software உம் open source ஆனா IT industry படுத்து விடாதா???

Anonymous said...

அஜித் கவலை வேண்டாம்.

உலகில் எல்லாருக்கும் பிரோகிராமிங் தெரியாது. பிரோகிராமிங் தெரியாதவனும் கணினி பயன்படுத்துகிறான். இவ்வுலகில் ஒருவன் இன்னொருவனை ஏதாவது ஒரு விதத்தில் நம்பி தான் இருக்கிறான்.

எல்லாமே ஓபன் சோர்ஸ் ஆவதால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது. உதாரணம்
நம்முடைய தமிழக அரசு தலைமையகத்தை சுசீ லினக்ஸ் ஆக்கியதன் மூலம் மட்டுமே ஆண்டிற்கு எண்பது கோடி மிச்சம் பிடிக்கிறது. மேலும் தகவலுக்கு http://www.elcot.in என்ற இணையதளத்தை நாடவும்.

தன்னுடைய சிவப்பு தொப்பி லினக்சை (RHEL அல்ல) ஓபன் சோர்ஸ் ஆக்கி தற்பொழுது fedora என பெயரிட்டுள்ளது அந்நிறுவனம்.
முன்பை விட இப்பொழுது அந்நிறுவனத்திற்கு அதிக வருமானம் தெரியுமோ ?

ஸ்டீவ் பால்மரும் பில் கேட்சும் ஊரை ஏமாற்றுகின்றனர். அவர்கள் விண்டோஸ் மற்றும் வேறு பலவற்றை காசுக்கு விற்பது குற்றமில்லை. அவர்களின் பாலிசி மற்றும் சாப்ட்வேர் தான் தரக்குறைவாக உள்ளது. குடுத்த காசுக்கு நல்லது வேண்டாமோ ?

Ajith said...

Thankz; itz clear nw.
by the way im using ubuntu in my lap feeling better than ever.

ராஜசுப்ரமணியன் S said...

thanks for the comparison.now i know the pros and cons. i use windows and my son uses linux.
good post. i pressed the vote button but it shows 'error on page'

nkashokbharan said...

உங்கள் லினக்ஸ் மோகத்துக்கு நான் எதிரியல்ல மாறாக இலவச மென்பொருட்களை வரவேற்கின்றேன். ஆனால் ஒரு நன்றிக்கடனை நாம் மறக்க இயலாது - கூடாதும் கூட. மைக்ரோசொஃபட்டும், விண்டோசும் இல்லாவிட்டால் இன்று நாங்கள் கணணியில் கலக்கிக்கொண்டிருந்திருப்போமா? விண்டோஸ் வந்திருக்காவிட்டால் கணணி விஞ்ஞானிகளுக்குச் சொந்தமானதாக மட்டுமிருந்திருக்காதா? ஆக லினக்ஸைப் புகழுங்கள் - விண்டோஸை மறந்துவிடுங்கள் ஆனால் இகழாதீர்கள்!

Anonymous said...

// உங்கள் லினக்ஸ் மோகத்துக்கு நான் எதிரியல்ல மாறாக இலவச மென்பொருட்களை வரவேற்கின்றேன். ஆனால் ஒரு நன்றிக்கடனை நாம் மறக்க இயலாது - கூடாதும் கூட. மைக்ரோசொஃபட்டும், விண்டோசும் இல்லாவிட்டால் இன்று நாங்கள் கணணியில் கலக்கிக்கொண்டிருந்திருப்போமா? விண்டோஸ் வந்திருக்காவிட்டால் கணணி விஞ்ஞானிகளுக்குச் சொந்தமானதாக மட்டுமிருந்திருக்காதா? ஆக லினக்ஸைப் புகழுங்கள் - விண்டோஸை மறந்துவிடுங்கள் ஆனால் இகழாதீர்கள்!
//

நன்றிக்கடன் படும் அளவு மைக்ரோசாப்டோ அல்லது அதனை சார்ந்த எதுவுமே நமக்கு கொடுத்த காசுக்கு நல்ல பொருளை தரவில்லை. இந்த கோபம் காசு கொடுத்து விண்டோஸ் மாதிரி ஒரு குப்பையை பயன்படுத்தி இருக்கும் என்னை போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும். திருட்டு சிடி மென்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புரியாது. காசு கொடுத்து வாங்கித்தான் விண்டோசை புகழுகிறேன் என்று சொன்னால் அது சுத்த பொய். அது காசு கொடுத்து புழுத்து போன அரிசி வாங்கிவிட்டு நன்றாக இருக்கு என்று சொல்வதற்கு ஈடானது.

கண்டிப்பாக லினக்சால் மட்டுமே நான் கலக்கி கொண்டிருக்கிறேன். என் வேலை மற்றும் மூளையை மழுங்கடித்த பெருமை மட்டுமே விண்டோசை சாரும். தேவை என்று வந்தால் எல்லாம் மாறும். விஞ்ஞானிகளுக்கு என்று இருந்த லினக்ஸ் இப்போது சாமானியனும் பயன்படுத்துவது போல் மாறியிருக்கிறது. விண்டோஸ் எனும் குப்பை வராமல் இருந்தால் இது என்றோ நடந்திருக்கும்.

ரொம்பவும் காயப்படுத்துவது போல் பேசியிருந்தால் மன்னியுங்கள். உண்மை கசக்கத்தான் செய்யும்.

Arul said...

you are correct... open source will rule the world...

suthanthira.co.cc said...

//வடுவூர் குமார் said...வீடியோ சேட் இன்னும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்.வெப் கேம் சப்போர்ட் இன்னும் முழுமையடையவில்லை./

இன்னும் அடுத்தடுத்த லினக்ஸ் ரிலீஸ்களுக்கு காத்திருங்கள். Webcam Support அதிகரிக்கும்.

suthanthira.co.cc said...

//OpenID mugunthkumar said...

அதான் தல எல்லா கம்பெனியிலும் லினக்ஸ் use பண்றது இல்லை.//

எல்லா கம்பெனியிலும் லினக்ஸ் பயன்படுத்தாவிட்டால் பரவாயில்லை. ஓரளவு கம்பெனிகளில் பயன்படுத்தினாலே அதுவே வெற்றிதான்.

suthanthira.co.cc said...

//mugunthkumar said...விண்டோஸ் use பண்றதுக்கு ரொம்ப cheap //

Cheap எனறு யார் சொன்னது? Legal copy of windows என்ன விலை தெரியுமா? ஒரு காப்பியே சில ஆயிரங்கள்.

கம்பெனியில் இருக்கும் எல்லா கம்ப்யூட்டர்களுக்கும் legal copy வாங்கி install செய்த பிறகு கம்பெனிக்கு லாபம் கையளவாவது வருவது சந்தேகம்தான்.

நான் இன்னும் MS-Office செலவை கணக்கில் எடுக்கவில்லை. எடுத்தால் நிறைய கம்பெனி நஷ்டத்தில்தான் ஓடும்.

suthanthira.co.cc said...

//Ajith said...

உண்மை லினக்ஸ் ஒரு வரப்பிரசாதம் எமக்கு. ஆனால் எல்லா software உம் open source ஆனா IT industry படுத்து விடாதா???//

அந்த மாதிரி ஆக எங்கே வழி விடறாங்க.

கிட்டத்தட்ட எல்லாத்துக்கும் பேடண்ட் வாங்கிடறாங்களே.

மைக்ரோசாஃப்ட் 10,000 பேடண்ட் வாங்கி வைத்து இருக்கிறது. IBM 20,000-க்கும் மேல் மென்பொருள் பேடண்ட்ஸ் வாங்கி வைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த பேடண்ட் எல்லாம் expire ஆன பிறகுதான் நாம் அதை ஓப்பன் சோர்ஸாக புரோகிராம் செய்ய முடியும். அதெல்லாம் expire ஆக வருடக் கணக்கில் ஆகும் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் மென்பொருட்களுக்கு பேடண்ட் கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தாலும் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு அதை பொது சொத்தாக ஆக்கிவிடுங்கள் என்று குரல் எழுந்துள்ளது.

அப்படி அரசாங்கம் செய்துவிட்டால் நாம் ஒரு/சில மென்பொருள் நிருவனங்களுக்கு காலம்காலமாக அடிமையாக இருக்கத் தேவையில்லை.

அப்படி எல்லாம் ஓப்பன் சோர்ஸா ஆனால்கூட, IT industry சுதந்திர மென்பொருட்களுக்கு சப்போர்ட் காண்ட்ராக்ட் போட்டு காசு பார்த்துக் கொள்ளும்.

suthanthira.co.cc said...

//மைக்ரோசொஃபட்டும், விண்டோசும் இல்லாவிட்டால் இன்று நாங்கள் கணணியில் கலக்கிக்கொண்டிருந்திருப்போமா?//

கணினியில் கலக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பது தவறு.

எந்த வைரஸ் எப்போது வந்து நம் டேட்டாவை Corrupt செய்துவிடுமோ என்ற பயத்தில் --கலங்கிக்-- கொண்டு இருக்கிறோம்.

suthanthira.co.cc said...

//உங்கள் லினக்ஸ் மோகத்துக்கு நான் எதிரியல்ல மாறாக இலவச மென்பொருட்களை வரவேற்கின்றேன்//

முதலில் சுதந்திர மென்பொருட்களுக்கும் இலவச மென்பொருட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்.

இரண்டும் வேறுவேறு.

suthanthira.co.cc said...

//Ajith said...

Thankz; itz clear nw.
by the way im using ubuntu in my lap feeling better than ever.//

உபுண்டுவை விட லினக்ஸ் மிண்ட்(Linux Mint) பயன்படுத்துங்கள். அப்புறம் உபுண்டுக்கு திரும்பி வரமாட்டீர்கள்.

suthanthira.co.cc said...

//ஆனால் ஒரு நன்றிக்கடனை நாம் மறக்க இயலாது - கூடாதும் கூட.//

நம் மக்களில் நிறைய பேரை வேறு வழி இல்லாததால் Software pirates ஆக மாற்றியதற்கு நாம் நன்றிகடன் படவேண்டும். அப்படித்தானே. நீங்கள் அந்த அர்த்தத்தில்தானே சொல்கிறீர்கள்.

suthanthira.co.cc said...

//Blogger ராஜசுப்ரமணியன் S said...

good post. i pressed the vote button but it shows 'error on page'//

No problem. This post has already become popular. Please vote for next posts regularly.

suthanthira.co.cc said...

////mugunthkumar said...விண்டோஸ் use பண்றதுக்கு ரொம்ப cheap //

திருடி பயன்படுத்தினால்தான் cheap.

அதை நாம் செய்யாமல் இருப்போம்.

அப்பகூட antivirus-க்கு காசு செலவாகும்.

suthanthira.co.cc said...

//ஆனால் ஒரு நன்றிக்கடனை நாம் மறக்க இயலாது - கூடாதும் கூட.//

விண்டோசுக்கு நம் சமூகத்தையே/வரும் தலைமுறைகளைக் கூட அடிமைப்படுத்தி வைத்து இருப்பதற்கு நாம் நன்றி நினைக்க வேண்டும். அப்படித்தானே நினைக்கிறீர்கள்?

suthanthira.co.cc said...

//mugunthkumar said...இன்றைக்கு லினக்ஸ்ஐ "educational/pedagogical purpose" க்கு மட்டுமே use பண்றாங்க...//

தப்பு. தப்பு. தப்பு.

கூகிளும் ஆரகிளும் இன்னும் மற்ற பலரும் முழுக்க முழுக்க Commercial purpose-க்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

suthanthira.co.cc said...

//OpenID mugunthkumar said...
லினக்ஸ் க்கு எப்டி வைரஸ் இல்லையோ, அதே போல், சாப்ட்வீரும் இல்லை...//

இன்னிக்கு லினக்சுக்கு சாஃப்ட்வேர் இல்லேன்னா எதிர்காலத்திலும் வராதுன்னு அர்த்தமா என்ன?

suthanthira.co.cc said...

//OpenID mugunthkumar said...
லினக்ஸ் க்கு எப்டி வைரஸ் இல்லையோ, அதே போல், சாப்ட்வீரும் இல்லை...//

இன்னிக்கு லினக்சுக்கு சாஃப்ட்வேர் இல்லேன்னா எதிர்காலத்திலும் வராதுன்னு அர்த்தமா என்ன?

Anonymous said...

//இன்னிக்கு லினக்சுக்கு சாஃப்ட்வேர் இல்லேன்னா எதிர்காலத்திலும் வராதுன்னு அர்த்தமா என்ன?//

இதன் அர்த்தம் இல்லை என்பதாகும். அது தவறு. உள்ளது. நமக்கு தெரியவில்லை அவ்வளவே.

Anonymous said...

லினக்சை பழிப்பவர்களுக்கும் விண்டோசை தூக்கி பிடிப்பவர்களுக்கும்

http://www.networkworld.com/news/2009/072009-microsoft-linux-source-code.html
-------
http://www.tuxradar.com/content/microsoft-contributes-linux-kernel

புருனோ Bruno said...

MS Office has more facilities than Open Office

But the question in Are those facilities needed by 90 % of Office Users

The answer is known to everyone

--

How many % of the computers run Auto Cad

Is it more than 1 %

--

suthanthira.co.cc said...

//புருனோ Bruno said...

MS Office has more facilities than Open Office

But the question in Are those facilities needed by 90 % of Office Users//

....Thanks to Dr. Bruno for visiting and contributing his valuable comments.

மைக்ரோசாஃப்ட் ஆபீசின் எல்லா அடிப்படை வசதிகளையும்கூட நம்மால் முழுமையாக தெரிந்துகொள்ள/ பயன்படுத்த முடிவதில்லை.

பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் அடிப்படைதானே சொல்லித் தருகிறார்கள்.

அதற்கு பள்ளிக்கூடங்களில் ஓப்பன் ஆபீஸே போதுமே.

அதிக வசதிகள் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் best என்று சொல்வது சரியல்ல.

ஓப்பன் ஆபீஸில் இல்லாத குறிப்பிட்ட வசதி/வசதிகள் மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் இருக்கிறது என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அதை காசு கொடுத்து பெறவும்.

இது சரியான அணுகுமுறைதானே?

suthanthira.co.cc said...

//Blogger புருனோ Bruno said...

How many % of the computers run Auto Cad

Is it more than 1 %
//

அருமையான வாதம்!.

AutoCad லினக்ஸில் தற்போது இல்லை என்பதற்காக AutoCad-ஏ
தேவைப்படாதவர்கள் கூட லினக்ஸ் பயன்படுத்தக் கூடாது/தேவையில்லை என்று சொல்வதில் கொஞ்சம்கூட நியாயமே இல்லை.

வைரஸ் இல்லா இன்டர்நெட் browsing-க்கு லினக்ஸே போதும்.

கிரி said...

பின்னூட்ட சண்டைகளை பார்த்து லினக்ஸ் உபயோகித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் ஆகி விட்டது :-)

நல்ல சண்டை :-))

sivakumar said...

நீங்கள் சொவது சரி தான் ஆனால் ஒரு மென்பொருளை லினக்ஸ்-ல் install செய்வது மிகவும் கடினமாக உள்ளது .ஏன் லினக்ஸ் user friendly ஆக தயாரிக்க முடியாதா?. windows போலவே லினக்ஸ் எளிமையாக இயங்கினால் எல்லோரும் தானாகவே லினுக்ஸ்கு மாறிவிடுவார்கள் ...

அலிபாபவும் அவரது தமிழ் நண்பர்களும் said...

நம்ம siva kumar sir சொன்னது போல இருந்தால் நல்லா இருக்கும் . user friendly அப்புறம் தான் security

அலிபாபவும் அவரது தமிழ் நண்பர்களும் said...

நம்ம siva kumar sir சொன்னது போல இருந்தால் நல்லா இருக்கும் . user friendly அப்புறம் தான் security

Anonymous said...

//நம்ம siva kumar sir சொன்னது போல இருந்தால் நல்லா இருக்கும் . user friendly அப்புறம் தான் security//

security அப்புறம் தான் user friendly. உல்டாவா இருந்தா அது லினக்ஸ் அல்ல, விண்டோஸ்.
ஒரு டெர்மினலை திறந்து அதில் ஒரே ஒரு கமான்ட் அடிக்க முடியாத அளவு சோம்பேறியாக இருப்பவர்கள் விண்டோசை பயன்படுத்துங்கள். வைரசுடன் வாழுங்கள். உங்கள் ஆதரவு லினக்சிற்கு தேவை இல்லை.

Navanee said...

நான் பெடோரா-க்கு மாறிட்டேன். விண்டோஸ்-அ விட பெட்டெர்.

நித்தி said...

வலை நண்பர்கள் அனைவருக்கும் ,....லினக்ஸை விரும்புவர்களில் நானும் ஒருவன் என்னுடைய கணினியிலும் உபுண்டு( ubuntu 9,04) பயன்படுத்தி வருகிறேன்....என்னுடைய கருத்தை தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

லினக்ஸை பொருத்தவரை இலவசமாகவே உபயோகித்துக்கொள்ள வழி செய்கின்றன எல்லோரும் லினக்ஸை பற்றி பெருமையாகவே பேசுகின்றீர்கள் நானும் அதை அப்படியே ஆமோதிகின்றேன் நண்பர்களே!!!எனக்கும் லினக்ஸை முழுமையான பயன்பாட்டிற்க்கு பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருக்கிற‌து.. ஆனால் என்னால் பயனடைய முடியவில்லை...நீங்கள் அனைவரும் வெறும் ஆப்பரேடிங் சிஸ்டம் மற்றும் இணைய இணைப்பை, வைரஸை பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்..

நான் கணினியில் மல்டிமீடியா பயன்படுத்துகின்றேன். அதாவது சுப நிகழ்ச்சிகளை DVDயாகவும் HD டிஸ்க்குகளாகவும் உருவாக்கி தரவேண்டும்..
மேலும் நான் Canopus Capturing Cardஉபயோகிக்கிறேன் இதனுடைய Canopus procoderஎன்கோடர் அடோபி பிரிமியரில் பிளகின்னாக வேலை செய்கிறது இதனை நான் லினக்ஸில் பயன்படுத்த முடியுமா? அல்லது லினக்ஸில் இருக்கின்ற வீடியோ எடிட்டரைக்கொண்டு நான் நான் தனியாக விலை கொடுத்து வாங்கியுள்ள Boris FXஐ லினக்ஸில் பயன்படுத்த முடியுமா? அல்லது எவரேனும் லினஸுக்கு என்று பிளக்கின்ஸ் தயாரித்து விற்கின்றார்களா? மேலும் புகைப்பட எடிட்டிங் சாப்ட்வேரான போட்டோஷாப்பில் செய்ய முடிகின்ற அத்தனை வேலைகளையும் லினக்ஸில் உள்ள GIMP இல் பயன்படுத்தலாம். ஆனால் இன்று எத்த‌னை ஸ்டுடியோக்களில் GIMPஐ பயன்படுத்தி புகைபடங்களை எடிட்டிங் செய்கிறார்கள்? மேலும்போட்டோஷாபிற்க்கு பிளக்கின்ஸ் தரும் ஏதாவது ஒரு நிறுவனம் GIMPக்கு பிளகின்ஸ் தயாரிக்கின்றார்களா?

எனவே சாதாரண மக்களுக்கு லினக்ஸ் பயன்பாடு என்பது சரிப்பட்டு வரலாம்..ஆனால் மல்டிமீடியா துறையில் லினக்ஸின் வளர்ச்சி என்பது இன்னும் திருப்தி அளிக்குமாறு இல்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து..இந்நிலை மாறவேண்டும் எனவும் வேண்டுகிறேன்.

பிழை இருந்தால் மன்னிக்கவும்
என்றும் அன்புடன்,
நித்தியானந்தம், பிரான்ஸ்

bharathi said...

தம்பி அதிகமா பேச கூடாது.லினக்ஸ்க்கு game கம்மியாக இருக்குது. சாப்ட்வேர் கம்மியாக இருக்குது. வைரஸ் கம்மிதான். visual basic வேலை செய்யுமா?. மொபைல்-கு softwere இருக்கா?. internet ok office ok film ok photo ok. but linux கு softwere இல்லப்பா.... ok?...........

Chandru said...

//bharathi said...
தம்பி அதிகமா பேச கூடாது.லினக்ஸ்க்கு game கம்மியாக இருக்குது. சாப்ட்வேர் கம்மியாக இருக்குது. வைரஸ் கம்மிதான். visual basic வேலை செய்யுமா?. மொபைல்-கு softwere இருக்கா?. internet ok office ok film ok photo ok. but linux கு softwere இல்லப்பா.... ok?...........//எல்லோரும் விண்டோசை தூக்கி குப்பையில் போட்டிருந்தால் game, mobile softwares னு எல்லாமே Linux platform க்கு எழுதி கொடுத்திருப்பங்க...

ஆனால் Linux பிற்காலத்தில் வெல்ல போவது உறுதி..

கிருஷ்ணா (Krishna) said...

//எல்லோரும் விண்டோசை தூக்கி குப்பையில் போட்டிருந்தால் game, mobile softwares னு எல்லாமே Linux platform க்கு எழுதி கொடுத்திருப்பங்க...

ஆனால் Linux பிற்காலத்தில் வெல்ல போவது உறுதி..//

நானும் பத்து வருசமா பார்க்கிறேன். விண்டோஸ் தொட முடியாத தூரத்திற்கு சென்று விட்டது. லினக்ஸ் யிலும் இருந்தாலும் என்னால் முழுமையாக விண்டோஸ் ஐ துறக்க முடியவில்லை.
லினக்ஸ் வென்றால் நல்லது தான்.

mnalin said...

இங்க நிறைய comments ; லினக்ஸ் இக்கு software இல்ல என்று நினைகின்றகள் அதுக்கு alternative உள்ளது இதை http://www.winehq.org use பண்ணி நீங்கள் பொதுவாக எல்லா windows application linux இல் use பண்ணலாம் (eg: photoshop ) , application list http://appdb.winehq.org/ இல்லாவிடின் graphic லினக்ஸ் என்றே software உள்ளது (eg:gimp) தற்போது linux பொதுவாக நிறைய hardware support பண்ணுது. 30 million user உள்ளார்கள் இது இன்னும் அதிகரிக்கும் ஏன் என்றால் சில வருட்ங்களுக்கு முன்பு window தான் ஒரே தெரிவு ஆனால் இப்போது அப்படிஇல்லை;
virus விண்டோஸ்கு உண்டு linux இல்ல என்பது ; உண்மையில் யாருமே இன்னும் வைரஸ் linux எழுதவில்லை

வனம் said...

வணக்கம் சாய்தாசன்

நான் என் மடி கணினியில் உபுன்டு 9.1 நிறுவியுள்ளேன், ஆனால் அதில் ஒலி அமைப்பு (sound drive )வேலை செய்யவில்லை, இதை எப்படி சரி செய்வது என தெரியத்தந்தால் உதவியாக இருக்கும்

என் மடிகணினி compaq 610

நன்றி
இராஜராஜன்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வணக்கம்.

TamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.

நன்றி.

Amarnath said...

நானும் சென்ற வாரம் தான் உபுண்டு நிறுவினேன். சாதாரண வேலையில் இருந்து DVD coding வரை இலவச மென்பொருள்களை பயன் படுத்தி செய்ய முடிகிறது. உபுண்டு வில் மாற்றம் செய்து Ultimate Edition 2.4 என ஒரு குழு வெளிட்டுள்ளது. இதில் நீங்கள் கேட்ட அணைத்து மென்பொருள்களும் இணைத்து நீங்கள் OS install செய்யும் போதே சேர்த்து விடுகிறது. http://ultimateedition.info/
முடிந்தால் இந்த தலத்தில் சென்று மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்ய விரும்புவர்கள் http://forumubuntusoftware.info/viewtopic.php?f=10&t=4034
இந்த இணைப்பை தொடருங்கள். இதை பயன் படுத்திய பார்த்த பிறகு உங்களது லினக்ஸ் குறித்த கண்ணோட்டம் மாறுபடும் என எண்ணுகிறேன்.

எனது சோனி மடிகணினி இல் web cam செயல் பட Ricoh firmwire மற்றும் ricoh-webcam-r5u870_0.11.4-0arakhne0_i386.deb ஆகிய இணைப்பு மென்பொருள்களை install செய்த வுடன் வீடியோ சாட் ஸ்கைப் மென்பொருள் மூலம் செய்ய முடிகிறது.

sound driver தேவை பட்டால் device and vendor id கிடைத்தால் அது குறித்து தேடி தர முயற்சிக்கிறேன்.

Anonymous said...

Car example is fine for buying OS but for driving? i.e usage ?? Windows is much much friendlier than Linux or Mac. Layman can can use windows within 15 mins hands-on training.But Linux or Mac is not like that.
Everybody need not to pc only for official use like prgramming. but most of the users are using pc for their personal use.

Because of its usability Windows is sustaining this longer. Linux or Mac cant beat MS Windows till they make more much more user friendliness in their OS.

Better example is using Linux or Mac is like driving car in much traffic in india just for commutation.But using windows is like driving car in US for the same communtation.

Anonymous said...

The no of people using Windows is more than 90% in this world. So, Virus creators target Windows. If lots of people start using Linux, these hackers will surely release virus for Linux also. It is absurd to say Linux is better than Windows because Linux has no Virus. No hacker will write and spread a Virus that can run in less than 2% of PCs in the world. And your car example is also not correct. Ubuntu Car also will leak [will be affected by Virus], when the user group increases.

சுட்டி said...

லினக்சிற்கு வைரஸ்களும், ஆன்டிவரஸ்களும் இருக்கின்றன. ஆனால் குறைவாகவே இருக்கின்றன.

suresh said...

எனது கனினியில் ஏற்கெனவே Windows 7 and Ubuntu Linux இரண்டையும் வைத்திருந்தேன். உபுன்டுவில் Flash, Java, Gtalk போன்றவற்றை install செய்ய முயன்று முடியாமல் மீன்டும் வின்7 க்கு செண்றுவிட்டேன்.
இந்த பதிவில் லினக்ஸ் மின்ட் குறித்து அறிந்து அதை ட்வுன்லோட் செய்து உபுன்டுவை அகற்றிவிட்டு இதை install செய்தேன்.
ஸ்க்ரீன் கூட ஒழுங்காக வேலை செய்யவில்லை.
horizantal ல் நான்கு மடங்காகவும் vertical ல் கால் பகுதியும் மட்டுமே தெரிந்தது. display ல் சென்று screen resolution ஐ மாற்றலாம் என்று mouse ஐ எங்கெங்கோ க்ளிக்கி பார்த்தேன் அரை மணி நேரம் முடியவில்லை.

இப்போழுது மீன்டும் விண்டோவ்ஸ்7

windows 7 ஒன்றுதான் ஆனால் லினக்சிற்கு ubuntu, kubuntu, linux mint, xubuntu, debian, pardus,Red hat, mandriva, gentoo, suse இப்படி ஏகப்பட்ட distributions இருந்தும் personnel computer தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏதவது ஒன்றாவது வேலை செய்தால்....

என்னை போன்ற சாதாரன மக்கள் pirated Windows ku செல்ல மாட்டார்கள்.

அட போங்கய்யா நீங்களும் உங்க லினக்சும்

Anonymous said...

பரிசோதனைக்காக தரவிறக்கம் செய்து பார்த்து நொந்து விட்டேன். லினக்ஸ் வேஸ்ட். நேரம் கெட்டது தான் மிச்சம். திருட்டு விண்டோஸ் போதும்.

சரவணன் குமார் said...

நானும் உபுண்டு லினக்ஸ் முயற்சி செஞ்சு கடுப்பாயிட்டேன். Open source மென்பொருள் பயன்படுத்தனும்னு ஆச இருக்கு ஆனா அதுகேத்த வழிகாட்டுதலோ இல்ல வழிமுறைகளோ இன்னும் சரியான முறையில் கிடைக்கல. அழகி மென்பொருள் லினக்ஸ் ல பயன்படுத்த முடியுமானு தெரியல. Installation கூட ரொம்ப கஷ்டமா இருக்கு. linux பயன்படுத்துர தமிழ் community வழிகாட்ட தயாரா இருந்தா நானும் லினக்ஸ்க்கு மாற தயாரா இருக்கோம்.

மென்பொருள் பிரபு said...

@ சரவணன் குமார்

லினக்ஸ் பயன்படுத்துவதில் சிலபல நடைமுறை பிரச்சனைகள் உண்டு என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

முயற்சி செய்யலாம். நான் விடாமுயற்சி செய்துதான் லினக்சுக்கு மாறமுடிந்தது.

எல்லோரும் என்னை மாதிரி இருப்பார்கள் என்று சொல்லமுடியாதுதான்.

சிலருக்கு சுதந்திர லினக்ஸ் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு மற்ற அடிமை மென்பொருள் இயக்குதளங்கள் இன்னும் அதிகமாக கசக்கிறதே!

அழகி மென்பொருள் சுதந்திர மென்பொருள் இல்லை. தமிழ் கோர்க்க லினக்சிலேயே iBus இருக்கிறது.

எடுத்தவுடனே உபுன்டுவை சோதனை செய்து பார்க்காமல் லினக்ஸ் மின்ட் சோதிக்கவும்.

kaniyam.com, askubuntu.com உங்களுக்கு உதவும்.

என்னையும் கைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

நன்றி.

back to top