13 July, 2009

வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி?

EMI (Equated Monthly Instalments) கணக்கு போடுவது இன்னும் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. எனக்கு மட்டும் இல்லை. உங்களில் பலருக்கும் இதே நிலைமை இருக்கலாம்.

சாதாரண கால்குலேட்டர், scientific கால்குலேட்டர், spreadsheet புரோகிராம் இப்படி எதிலும் எனக்கு EMI கண்டுபிடிக்கத் தெரியாது. B.Com, 3 வருஷம் படித்த என் நண்பனுக்கே அதை கணக்கு போட வழி தெரியலே.

மீதி இன்ஸ்ட்டால்மென்டை கிரெடிட் கார்டுலே EMI-ஆ போட்டுக்கலாம்னு சேல்ஸ்மேன் சொல்லும்போது, அவங்க சொல்லும் EMI சரிதானான்னு சந்தேகம் வருது. வீட்டு லோன் வாங்க போனாலும் இதே பிரச்சனைதான்.

Cross check செய்ய வழி தேடினேன். கிடைத்தது.

Bankbazaar.com என்ற வலைத்தளத்தில் EMI Calculator பார்த்தேன்.

அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள இந்த பக்கத்தில், கடன் தொகை, வட்டி, கடன் திருப்பிச் செலுத்தும் காலம், பிராஸஸிங் ஃபீஸ் இவற்றை செலக்ட் செய்துவிட்டால், உடனே EMI, செலுத்தப் போகும் வட்டி என்று மொத்த விஷயத்தையும், கணக்கு போட்டு சொல்லி விடுகிறது.


’என் பிரச்சனை அது இல்லீங்க. வீட்டுக்கடனை prepayment அல்லது வேறே வங்கிக்கு மாற்றினால் லாபம் உண்டா? என்று எனக்கு தெரிந்தால் போதும்’ என்றால், அதற்கும் Refinance Calculator இருக்கிறது. மாற்றினால் லாபமா? நஷ்டமான்னு (Cost benefit analysis) தெரிஞ்சுக்கலாம்.தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நான் நினைக்கிறேன். நீங்களும் அவ்வாறே நினைத்தால், இந்த பதிவின் கீழே உள்ள Email Post Icon-ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தெரிந்தவர்களின் email முகவரிக்கு இந்த பதிவை அனுப்பி நல்ல பேர் வாங்கிக்குங்க.

கூகிளில் EMI Calculator என்று தேடினால் இன்னும் நிறைய கிடைக்கிறது.

நன்றி.

10 July, 2009

காதலை கணக்குப் பண்ணலாம் வாங்க!


என்ன பொருத்தம், நமக்குள் என்ன பொருத்தம்
காதலெனும் நாடகத்தில் கல்யாணம் சுபமே!

என்று பாடிக்கொண்டிருந்த என்னிடம், ஓடி வந்தாள் என் மனைவி.

'என்னங்க.. நீங்க பாடறதைக் கேட்ட பிறகுதான் ஞாபகம் வருது. உங்க மொபைலைக் கொடுங்களேன்.'

'எதுக்குன்னு முதல்ல சொல்லு.'

‘காதல் பொருத்தம் பார்க்க ஜோடியின் பேரை SMS அனுப்பிச்சா, எவ்வளவு பொருத்தம்னு சொல்லுமாம். பேப்பரில் விளம்பரம் பார்த்தேன். என் அண்ணனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கே. போட்டுப் பார்க்கலாம்னுதான்.’
’ஜோடிப் பொருத்தம் இல்லேன்னு பதில் வந்தா, நிச்சயம் ஆன கல்யாணத்தை நிறுத்திடுவியா என்ன?’ என்றேன் கிண்டலாக.

’நீங்க எப்பவுமே இப்படித்தான். ஆசைக்குப் போட்டு பார்க்கிறேனே.’

’ஏதோ ஒரு சேனல்ல கூடதான் இப்படி விளம்பரம் வருது. நான் என்னிக்காவது நம்ம பொருத்தம் இப்படி பார்த்து, காசை கரியாக்கி இருக்கேனா? இன்டெர்நெட்டில் ஃப்ரீயா பார்த்துக்கலாமே.’

’அப்படியா! எனக்கு யாருமே சொல்லவே இல்லியே.’

அவளை http://www.lovecalculator.com/ கூட்டிக் கொண்டு போனேன்.

வெள்ளித் திரையில்’ பிரபல ஜோடியான MGR & Saroja Devi போட்டு Calculate அழுத்தினால் பொருத்தம் 78 சதவீதம் வந்தது.

அவ்வாறே, MGR & Nambiar போட்டால் ’ஜீரோ’ சதவீதம் வந்தது.

மற்ற பொருத்தங்கள் பார்த்ததில் சில,

cat & rat 0%
India & Pakistan 1%

microsoft & open source software 1%
microsoft & monopoly 93%


இதற்குள், “ அப்படி என்னதான் இன்ட்ரெஸ்டா பார்த்துட்டு இருக்கீங்க”ன்னு பக்கத்து ஃப்ளாட் மாமி வந்து அவங்க பங்குக்கு ஃப்ரீயா பொருத்தம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

அரை மணி நேரத்தில் எல்லா ஃப்ளாட்டுக்கும் நியூஸ் பரவி, ஒரு குட்டி கும்பலே வந்துடுச்சின்னா பார்த்துக்குங்களேன்.
நிறைய ஒத்துக்கொள்ள முடியாத ரிசல்ட் கூட வந்தது.

எனக்கும், உங்களுக்கும், பலருக்கும் உடனே ஞாபகம் வரும் பல பிரபல ஜோடிகள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பகைவர்கள் லிஸ்ட்டை போட்டுப் பார்த்தாலும், ஹிட்சுக்கு ஆசைப்பட்டு தரம் தாழ்த்திக்க வேண்டாமேன்னு, ரிசல்ட்டை சென்சார் பண்ணிட்டேன்.

உங்களுக்கு இஷ்டமானதை நீங்களே போட்டு பார்த்துக்குங்க.

Disclaimer: குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் பொழுதுபோக்கிற்கும், விளையாடிற்கும்தான். அப்படியே நம்பி உங்கள் பொன்னான வாழ்வை நாசம் செய்துகொள்ள வேண்டாம்.
back to top