1. இலவச மென்பொருள் ஓப்பன் ஆபீசின் சரியான பெயர் OpenOffice.Org. நாம் சுருக்கமாக ஓப்பன் ஆபீஸ்னு குறிப்பிடுகிறோம். இன்னும் சுருக்கனும்னா OOo அல்லது OO.o-ன்னு ”ஓ போடு ஹ ஓ போடு”.
2. வேறே எவனோ ஒருத்தன் Openoffice என்கிற வார்த்தையை Trademark செய்துவிட்டதால் இந்த வம்பே வேண்டாம்னு Open office-உடன் .Org சேர்த்து Openoffice.Org ஆக்கிவிட்டார்கள்.
3. ஓப்பன் ஆபீஸ் 3.0 டவுன்லோடு லிங்க் இதுவரை 6 கோடி முறை கிளிக் செய்யப்பட்டுள்ளது.
4. ஓப்பன் ஆபீஸ் 3.1 புதிதாக வெளிவந்துள்ளது. இங்கே கிளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.
5. OOo 3.1-ல் Right to Left-ஆக எழுதப்படும் அரபிக் போன்ற மொழிகளுக்கு support அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 நாடுகளில் அரபி மொழி official மொழியாக இருக்கிறது.

6. Underlining தெரியும். Overlining தெரியுமா? இந்த ரிலீஸில் புதிதாக படத்தில் உள்ளவாறு எழுத்தின் மேல் கோடு போட்டுக்கலாம்.

7. Anti-aliasing என்கிற ஒரு டெக்னிக்கைப் பயன்படுத்தி graphics “பளிச்”னு தெரியறா மாதிரி மாற்றி இருக்கிறார்கள். Graphics-ஐ drag செய்வது Ooo-3.1-ல் ரொம்ப ஈஸி.

இந்தப் படத்தில் right சைடில் இருப்பது anti-aliased image.
8. Spreadsheet புரோகிராம் Calc-ஐ வேகப்படுத்தி உள்ளார்கள். Calc-ல் function அடிக்கும்போது அதன் பக்கத்திலேயே படத்தில் உள்ளவாறு syntax-ம் காட்டும்.

சில புது functions சேர்த்திருக்கிறார்கள். Charting-ல் மேலும் புது வசதிகள். Sorting மேம்படுத்தப்பட்டுள்ளது.
9. இதை C++ மற்றும் Java மொழிகளில் உருவாக்கியிருக்கிறார்கள்.
10. ஓப்பன் சோர்ஸில் பலவகை லைசன்ஸ் உண்டு. லினக்சுக்கு GPL Version 2 (GPL2) லைசன்ஸ் என்றால், ஓப்பன் ஆபீஸ்.Org-க்கு Version 3-லிருந்து Lesser GPL Version 3 (LGPL3) லைசன்ஸ்.
11. ஓப்பன் ஆபீஸ் default-ஆக OpenDocument Format (ODF)-ஐ file format-ஆக பயன்படுத்துகிறது.
12. Equation, Formula அடிக்கனும்னா அதற்கு பொருத்தமா ஓப்பன் ஆபீஸில் Math இருக்கிறது. படத்தைப் பார்த்தாலே புரியும்.

13. Firefox-க்கு extension இருப்பது போல் ஓப்பன் ஆபீசுக்கும் extensions இருக்கின்றன. அதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

14. ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களில் என்ன special-னா upgrade செய்ய காசு கொடுக்க வேண்டாம். அதனால் புதிய version-க்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
என் மனைவியிடம் சென்று பெருமையுடன் இந்த வலைப்பூக்கு 20,000 ஹிட்டு வந்தது என்று சொன்னேன். எவ்வளவு துட்டு வந்தது என்று கேட்டாள். என்னை கடவுள்தான் காப்பாத்தனும்.

6 Comments:
M$ office க்கு போக வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிடும் மென்பொருள் எனபதில் சந்தேகமே இல்லை.
//என் மனைவியிடம் சென்று பெருமையுடன் இந்த வலைப்பூக்கு 20,000 ஹிட்டு வந்தது என்று சொன்னேன். எவ்வளவு துட்டு வந்தது என்று கேட்டாள். என்னை கடவுள்தான் காப்பாத்தனும்//
இதே கேள்விதான் எங்க வீட்டிலும்...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்ப்பார்ப்பு, எனக்கு எப்போ 20,000 ஹிட் வருமோ..இது ஓவர் எதிர்ப்பார்ப்பு. keep it up Shirdi!!
பதிவுக்கு நன்றி. இதைப் பயன்படுத்த ஆரம்பித்த நாள்முதல் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை -- ஒரு வார்த்தையின் மீது மட்டும் மேற்கோடு இட முடிவது முடியவில்லை. அதைத் தேர்வு செய்தால் தொடர்ந்து எல்லா வார்த்தைகள் மீதும் மேற்கோடு தொடர்கிறது. என்ன தவறு செய்கிறேன் சொல்லுங்கள்.
நல்ல பதிவு அண்ணா. என்ன தான் இருந்தாலும் ஓபன் ஆபீஸ் எம்.எஸ். ஆபீஸ்'கு இணையா வராது.
அப்டியே இன்னொரு விஷயம். உபுண்டு இலவச cd வந்துடுச்சு. மத்த 3ம் வரவே இல்ல. நீங்க myfreecopyright.com தளத்துல பதிவு பண்ணி இருக்கிங்களா?
என்னோட வலைபூல favicon சேத்து இருக்கேன். எப்பிடி இருக்குன்னு உங்க கருத்த சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்.
www.crickettamil.blogspot.com
// thiruthiru said...
பதிவுக்கு நன்றி. இதைப் பயன்படுத்த ஆரம்பித்த நாள்முதல் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை -- ஒரு வார்த்தையின் மீது மட்டும் மேற்கோடு இட முடிவது முடியவில்லை. அதைத் தேர்வு செய்தால் தொடர்ந்து எல்லா வார்த்தைகள் மீதும் மேற்கோடு தொடர்கிறது. என்ன தவறு செய்கிறேன் சொல்லுங்கள்.//
இன்னும் ஓப்பன் ஆபீஸ் 3.1 எனக்கு கிடைக்கவில்லை. அதனால் பதில் தெரியாது.
//எவனோ ஒருவன் said...உபுண்டு இலவச cd வந்துடுச்சு. மத்த 3ம் வரவே இல்ல.
உபுண்டுவே போதும். மற்றது வராவிட்டால் பரவாயில்லை.
இருந்தாலும் இன்னொரு முறை முயற்சிக்கவும்.
Post a Comment