15 July, 2009

குட்டி குட்டி உபுன்டு 9.04 செய்திகள்!

JJ ....உபுன்டுக்கு JJ!

Jaunty Jackalope (JJ) என்று செல்லமாக பெயரிடப்பட்டுள்ள உபுன்டு லினக்சின் புதிய ரிலீஸ் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி வெளிவந்தது.

இது உபுன்டுவின் பத்தாவது ரிலீஸ். Jaunty-ன் முதல் எழுத்தான் "J" English alphabets-ல் பத்தாவது எழுத்து.


அது என்ன 9.04? 9.04 என்றால் 4-ஆவது மாதம், 2009-ஆவது வருடம் வந்த ரிலீஸ்.

Desktop edition, Server edition , Ubuntu Netbook Remix(UNR) என மூன்று விதமாக கிடைக்கும்.

இன்டெல் Atom பிராஸசருடன் வரும் சில பிரபல Netbook வகை கணினிகளுக்கு பொருத்தமான உபுண்டு நெட்புக் ரீமிக்ஸ் edition (UNR) புதுசு கண்ணா புதுசு!


இதில் ஓப்பன் ஆபீஸ் 3 சேர்ந்து வருகிறது.

அடுத்த version 9.10 (செல்லப் பெயர் ’கார்மிக் கோலா’) ஆறு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 2009-ல் வந்தாலும், இந்த 9.04 ரிலீசுக்கு 18 மாதங்கள் Software/Security updates கிடைக்கும்.

இத்தோடு சேர்த்து Kubuntu 9.04, Xubuntu 9.04 ரிலீஸ் ஆகியுள்ளன.


டவுன்லோடுக்கு மட்டும் செலவு செய்தால் போதும். லைசன்சுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. மற்றபடி முழுவதும் இலவசம்.

Booting நேரம், முந்தைய ரிலீஸை விட இன்னும் வேகமாக ஆக்கப்பட்டுள்ளது.


Ubuntu 9.04 இலவச சி.டி அனுப்பச் சொல்லி shipit.ubuntu.com-ல் தேவையை பதிவு செய்துகொண்டால் அதிகபட்சம் 10 வாரத்தில் அனுப்பி வைப்பார்கள்.

Kubuntu 9.04 இலவச சி.டி வேண்டும் என்றால் shipit.kubuntu.org-ல் தேவையை பதிவு செய்யவும்.


10 Comments:

Tech Shankar said...

நன்றி தல

Suresh said...

Nalla pakirthal,

வடுவூர் குமார் said...

நான் அப்படியே சாப்பிடுவேன் என்று சொல்கிற மாதிரி நேற்று இரவு பதிப்பு 8.10யில் இருந்து 9.04 மேம்பாடு செய்து முடிச்சிடேன்.இனிமேல் தான் அலசனும்.

Tech Shankar said...

Please visit

http://kumarlinux.blogspot.com
He is posting lots of article in Tamil about Linux.

suthanthira.co.cc said...

//தமிழ்நெஞ்சம் said...

Please visit

http://kumarlinux.blogspot.com
He is posting lots of article in Tamil about Linux.//

நன்றி தமிழ்நெஞ்சம். என் முதல் பதிவிலேயே நான் அவரைப்பற்றி சொல்லியிருக்கிறேன். இப்படி...

””””வடுவூர் குமார் வலைப்பூ போய் பார்த்தேன். அண்ணன் லினுக்சில் கடுமையாக உழைத்து இருக்கிறது நன்றாக தெரிகிறது. தமிழில் லினக்ஸ் எழுதுவதில் முன்னோடியாக திகழ்கிறார் என்பது என் கருத்து.””””

Subash said...

பதிய பதிப்பு சூப்பர்.
முந்தய பதிப்புபோல அப்டேட்டினால் எந்த சிக்கலும் இல்லை.
வயர்லெஸ் நெட்வேர்க்கிங் மிக எளிது

Ram Vibhakar said...

நல்ல பதிப்பு

ஹாலிவுட் பாலா said...

அப்படியே... தமிழ்ல லினக்ஸ் பத்தி யாராவது ஒரு தொடர் ஆரம்பிச்சீங்கன்னா நல்லா இருக்கும்! :)

பொன்மலர் said...

லினக்ஸ் பற்றிய நல்ல பதிவு

suthanthira.co.cc said...

நன்றி பொன்மலர்
நன்றி ஹாலிவுட் பாலா
நன்றி Ram Vibhakar!!!
நன்றி Subash
நன்றி தமிழ்நெஞ்சம்
நன்றி வடுவூர் குமார்

back to top