என்ன பொருத்தம், நமக்குள் என்ன பொருத்தம்
காதலெனும் நாடகத்தில் கல்யாணம் சுபமே!
காதலெனும் நாடகத்தில் கல்யாணம் சுபமே!
என்று பாடிக்கொண்டிருந்த என்னிடம், ஓடி வந்தாள் என் மனைவி.
'என்னங்க.. நீங்க பாடறதைக் கேட்ட பிறகுதான் ஞாபகம் வருது. உங்க மொபைலைக் கொடுங்களேன்.'
'எதுக்குன்னு முதல்ல சொல்லு.'
‘காதல் பொருத்தம் பார்க்க ஜோடியின் பேரை SMS அனுப்பிச்சா, எவ்வளவு பொருத்தம்னு சொல்லுமாம். பேப்பரில் விளம்பரம் பார்த்தேன். என் அண்ணனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கே. போட்டுப் பார்க்கலாம்னுதான்.’
’ஜோடிப் பொருத்தம் இல்லேன்னு பதில் வந்தா, நிச்சயம் ஆன கல்யாணத்தை நிறுத்திடுவியா என்ன?’ என்றேன் கிண்டலாக.
’நீங்க எப்பவுமே இப்படித்தான். ஆசைக்குப் போட்டு பார்க்கிறேனே.’
’ஏதோ ஒரு சேனல்ல கூடதான் இப்படி விளம்பரம் வருது. நான் என்னிக்காவது நம்ம பொருத்தம் இப்படி பார்த்து, காசை கரியாக்கி இருக்கேனா? இன்டெர்நெட்டில் ஃப்ரீயா பார்த்துக்கலாமே.’
’அப்படியா! எனக்கு யாருமே சொல்லவே இல்லியே.’
அவளை http://www.lovecalculator.com/ கூட்டிக் கொண்டு போனேன்.
’வெள்ளித் திரையில்’ பிரபல ஜோடியான MGR & Saroja Devi போட்டு Calculate அழுத்தினால் பொருத்தம் 78 சதவீதம் வந்தது.
அவ்வாறே, MGR & Nambiar போட்டால் ’ஜீரோ’ சதவீதம் வந்தது.
மற்ற பொருத்தங்கள் பார்த்ததில் சில,
cat & rat 0%
India & Pakistan 1%
microsoft & open source software 1%
microsoft & monopoly 93%
இதற்குள், “ அப்படி என்னதான் இன்ட்ரெஸ்டா பார்த்துட்டு இருக்கீங்க”ன்னு பக்கத்து ஃப்ளாட் மாமி வந்து அவங்க பங்குக்கு ஃப்ரீயா பொருத்தம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
அரை மணி நேரத்தில் எல்லா ஃப்ளாட்டுக்கும் நியூஸ் பரவி, ஒரு குட்டி கும்பலே வந்துடுச்சின்னா பார்த்துக்குங்களேன்.
நிறைய ஒத்துக்கொள்ள முடியாத ரிசல்ட் கூட வந்தது.
எனக்கும், உங்களுக்கும், பலருக்கும் உடனே ஞாபகம் வரும் பல பிரபல ஜோடிகள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பகைவர்கள் லிஸ்ட்டை போட்டுப் பார்த்தாலும், ஹிட்சுக்கு ஆசைப்பட்டு தரம் தாழ்த்திக்க வேண்டாமேன்னு, ரிசல்ட்டை சென்சார் பண்ணிட்டேன்.
உங்களுக்கு இஷ்டமானதை நீங்களே போட்டு பார்த்துக்குங்க.
Disclaimer: குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் பொழுதுபோக்கிற்கும், விளையாடிற்கும்தான். அப்படியே நம்பி உங்கள் பொன்னான வாழ்வை நாசம் செய்துகொள்ள வேண்டாம்.



6 Comments:
Disclaimer: குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் பொழுதுபோக்கிற்கும், விளையாடிற்கும்தான். அப்படியே நம்பி உங்கள் பொன்னான வாழ்வை நாசம் செய்துகொள்ள வேண்டாம்.
வாழ்க உமது சமூக அக்கரை....
//வாழ்க உமது சமூக அக்கரை....//
இன்னும் என்னை மாதிரி அப்பாவிங்க இருக்கிறாங்கப்பா!! அதான்.
எனக்கும் பொழுது போக வில்லை என்றால் இந்த மாதிரி எதாவது இணையதளத்திற்கு தான் போய் பார்த்துக்கொண்டு இருப்பேன்...(இதுவரை என்பெயரையும்,என் கணவர் பெயரையும் சேர்த்து பார்த்ததில்லை.தேவையில்லாத (குழப்பம் ...)
அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
நன்றி hARIHARAN
நன்றி Ammu Madhu
இதயும் ஒரு பதிவாக போடணும் எனக்கு தோனல பாருங்க?!!!
:)
எனக்கு ஜாலியாக இருந்தது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் கதைதான். நன்றி.
Post a Comment