07 July, 2009

இன்டெலின் Broadband ஸ்பீட் டெஸ்ட்!

இந்த வலைப்பூவின் ’மேல்-வலது’ பகுதியில் ஷீரடி சாய் பாபாவின் படம் போட்டு கிளிக் செய்தால், மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள ஷீரடி பாபா கோவிலிலிருந்தே Live Relay தர்ஷன் தெரியும்படி செட் செய்தேன்.

அந்தப் பக்கம் ’Windows Media Player 9 or above’ வேண்டும் என்று கேட்டது. லிங்க் ரெடியாக கொடுத்து இருந்தார்கள்.

உடனே, லைன் ஸ்பீட் check செய்து ஸ்பீடா இருந்தா, இப்பவே டவுன்லோடு செஞ்சுக்கலாம். ஸ்லோவா இருந்தா ராத்திரி பார்த்துக்கலாம்னு, கூகிள்லே போய் ”Broadband Speed Test"ன்னு அடிச்சேன்.

வந்த links திருப்தியாக இல்லை. முழித்துக் கொண்டு இருந்தபோது, Intel கூட Broadband Speed Test சர்வீஸ் கொடுக்கிறதா எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தது.

அப்படி பிடித்ததுதான் இந்த Link -


டெஸ்ட்டுக்காக upload/download பண்றேன்னு, பேர் தெரியாத வெப்சைட் malware, virus-னு கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணிட்டா, நான் எங்கே போறது.

அதுக்குத்தான், Intel மாதிரி நம்பகமான வெப்சைட்களை பயன்படுத்துவது நல்லது என்று தோன்றுகிறது.

கொசுறா, இன்னொரு சுட்டியில்  File Size கொடுத்துட்டா, அது டவுன்லோடு ஆக எந்த டைப் கனெக்‌ஷனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னும் கணக்கு போட்டு சொல்லிடுது.


ஜாலி, ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்!

இந்தப்  பதிவில் விவாதிக்கப்பட்ட சுட்டிகள்

8 Comments:

KayKay said...

Useful Information. Thanks Nanba

suthanthira.co.cc said...

நன்றி Kay Kay

Srikanth On the Web said...

Thank you very much for giving us the good informations...keep it up...

suthanthira.co.cc said...

நன்றி Srikanth On the Web

suthanthira.co.cc said...

பழைய லின்க் வேலை செய்யவில்லை. புதிய லின்க் கொடுத்துள்ளேன். அதை ட்ரை செய்யவும்.

MANASAALI said...

நான் உபயோகிப்பது wi-5 வழங்கும் 256 Kbps வேகம் கொண்ட அகலப்பட்டை. அதிக seeds உள்ள torrent பைல் download செய்யும் போது 32KBps வேகத்தில் download ஆகிறது.(32KBps = 256Kbps. 32 X 8 = 256 . 1byte = 8bit) சில சமயம் 36KBps வரை செல்கிறது. ஆனால் நீங்க கொடுத்துள்ள லிங்கில் சோதனையிடும் பொது அது என் அகலப்பட்டை வேகம் 38Kbps என்று சொல்கிறது.

மென்பொருள் பிரபு said...

எனக்கு வேகம் சரியாக காட்டுகிறது. வேகம் சரிபார்க்கும்போது வேறு எதுவும் டவுன்லோட், அப்லோட் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வேகம் சரியாக காட்டும்.

அவ்வாறு செய்துபார்த்துவிட்டு சொல்லவும். நன்றி.

மென்பொருள் பிரபு said...

@ Manasaali

wi-5 தவறு. Wifi சரி.

back to top