16 July, 2009

Twitter Ten - அறிமுக செய்திகள்!


1. ஆரம்பித்த புதுசில் Twitter-ன் பெயர்

-னு இருந்தது. அப்புறம்தான்

-னு மாற்றப்பட்டது. இது எத்தனை பேருக்கு தெரியும்!


2. Twitter-ஐ “SMS of Internet" என்று சொல்கிறார்கள்.

Group Messaging System, இன்டெர்நெட்டின் தந்தி சேவை என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

3. Twitter வேலை செய்யலேன்னா அதை குறிக்கும் வகையில் browser-ல் இந்த படம் தெரியும்.


இதற்கு Fail whale-னு பேர்.

4. இப்போதெல்லாம் Twitter-லே தனக்கு இத்தனை followers இருக்குறாங்கன்னு சொல்லிக்கிறதை Status symbol-ஆக நினைக்கிறார்கள். Ashton Kutcher என்பவர் Twitter-ல் முதன்முறையாக 1 மில்லியன் (பத்து லட்சம்) followers-ஐ எட்டி சாதனை படைத்தார்.

5. இன்றுவரை Twitter பயன்படுத்துவது இலவசம்தான். SMS கட்டணம் நம் செலவு.

6. Twitter-ல் Message-ஐ குறிப்பிட Tweet என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.


7. ”ஒரு SMS-ல் அதிகபட்சம் 160 எழுத்து வரை அடிக்கலாமே. பின்னே ஏன் Twitter-க்கு 160 எழுத்து லிமிட் கொடுக்காமல் வெறும் 140 எழுத்து லிமிட் கொடுத்திருக்காங்கன்னு” எனக்குள் ரொம்ப நாளா ஒரு கேள்வி.

அப்புறம்தான் புரிந்தது. Followers-க்கு நம் மெசேஜ் SMS-ஆக போகும்போது Tweet-க்கு முன்னால் அனுப்புபவர் பேரை போட்டு அனுப்ப 20 எழுத்து reserved.

8. நீங்கள் செல்போனில் இன்டெர்நெட் பயன்படுத்தினால் அதற்கு

http://m.twitter.com (Mobile version of Twitter) பொருத்தமாக இருக்கும். இந்த வலைத்தளத்தை நம்ம PC browser-லே கூட பார்த்துக்கலாம்.

9. Twitter.com வேலை செய்யலேன்னா http://status.twitter.com (Twitter Service Status page) போய் தப்பு உங்க பக்கமா? Twitter பக்கமான்னு தெரிந்துகொள்ளலாம்.

10. Search என்றாலே கூகிள்தானா? Twitter-லேயும் Search இருக்கிறது. Tweets-ல் வந்துகொண்டு இருப்பதை, உடனுக்குடன் தேடிப்பிடித்து நமக்கு தருகிறது. நீங்களும் தேடிப்பாருங்கள். புதிய அனுபவமாக இருக்கும்.

என்னதான் வருதுன்னு பார்ப்போமேன்னு Twitter Search-ல் கூகிளை தேடினேன்! வந்த ரிசல்ட்களை Scroll down செய்து பார்த்துவிட்டு திரும்பியும் Home key அடித்தால் “8 more results since you started searching. Refresh to see them”-னு அலெர்ட் வந்தது.


இந்த வேகத்தை நான் கூகிளில்கூட பார்த்ததில்லை. "சுடச்சுட Search" என்பதை redefine செய்கிறார்கள். இதுதான் Twitter-ன் பலம்.

11 Comments:

வெங்கடேஷ் said...

நல்ல அறிமுகம் வாழ்த்துகள்!!

Suresh said...

அருமையான தகவல்

பனையூரான் said...

வணக்கம் அண்ணா நான் panaiyooran.blogspot என ஒரு blog வைத்திருந்தேன். அந்த blog இப்போது open ஆகுதில்லை. ஆனால் sign-in ஆகும்போது அங்கே ஒரு blog ஐயும் காணவில்லை.profile மாத்திரம் உள்ளது.மீண்டும் நான் எனது வலைப்பதிவை தொடர உங்களுடைய தொழில்நுட்ப ஆலோசனையை panaiyooran@gmail.com என்ற முகவ்ரிக்கு அனுப்பிவைக்குமாறு தழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

யூர்கன் க்ருகியர் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி

suthanthira.co.cc said...

நண்பரே. இந்த கேள்வியை http://wiki.pkp.in/forum:start -ல் கேளுங்கள். நிறைய பேர் வரும் இடம். சரியான பதில் கிடைக்க வாய்ப்பு உண்டு.

விஷ்ணு. said...

எங்க இருந்து தான் மேட்டர் புடிப்பீங்களோ

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல தகவல். நன்றி

suthanthira.co.cc said...

//விஷ்ணு. said... எங்க இருந்து தான் மேட்டர் புடிப்பீங்களோ//

எல்லாம் இன்டெர்நெட்டிலிருந்துதான்.

suthanthira.co.cc said...

நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நன்றி விஷ்ணு.
நன்றி ஜுர்கேன் க்ருகேர்
நன்றி Suresh
நன்றி வெங்கடேஷ்

A.Hari said...

Dear saidasan,

I am extremely happy to see your great service to tamil community. There is a big 'Digital Divide' in our tamil community among technies & common man who is forced use the computer for the first time. Ur blog serves in providing lot of useful info to users who are struggling to comprehend the fast changes in this field.

I request u to consider writing a book as it will reach ppl who do not have access to internet.

A.Hari

suthanthira.co.cc said...

//A.Hari said...
I request u to consider writing a book as it will reach ppl who do not have access to internet.//

நான் புத்தகம் போடவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

நன்றி.

back to top