29 July, 2009

’Wait’ பார்ட்டிகள் போட்ட கோர்ட் கேஸ் + IT செய்திகள்

கணினியை ’On’ செய்துவிட்டு “இது Boot ஆவதுக்குள்ளே ஒரு காஃபி குடிச்சிட்டு வந்துடலாம்” என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா? உங்களுக்குத்தான் இந்த செய்தி.

"வைரஸ் Checking/வைரஸ் புரோகிராம் அப்டேடிங், Slow நெட்வொர்க் தொடர்பு, சர்வர் லோடு அதிகம் இப்படி உங்களுக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம்.”

”அதுக்குன்னு கம்பெனி கம்ப்யூட்டரை காலைலே Boot செய்யறதுக்கும், வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது Shut down செய்யறதுக்கும், கால் மணி, அரை மணி நேரம் ஆயிடுதே. ”


”இப்படி கொஞ்சம்கொஞ்சமா சேர்த்தா ஒரு வாரம், ஒரு மாசத்துக்கு நிறைய மணி நேரம் ஆகி விடுகிறாது. அந்த நேரத்தில் வேலையா செய்யறீங்கன்னு சொல்லி அந்த நேரத்துக்கு சம்பளம் கொடுக்க மாட்டேன்னா எப்படி?”

”இது எங்க தப்பா? நாங்க காத்திருக்கும் நேரத்திற்கும் சேர்த்து காசு கொடுக்கறதுதான் நியாயம்.”

இப்படி கேட்டு மணிநேரக் கணக்கில் (Hourly wages) சம்பளம் வாங்குவோர் அமெரிக்காவில் கோர்ட்டு கேஸ் போட்டு இருக்கிறார்கள்.


“நீ காலையிலே வந்து கணினி பட்டனை மட்டும்தான் “ON" பண்றே. புரோகிராம் எல்லாம் லோடு ஆகறவரைக்கும் மத்தவங்களோட ஊர்க்கதைதானே பேசிக்கொண்டு இருக்கிறே. இல்லேன்னா காஃபி குடிக்க போயிடறே. அதுக்கு எதுக்கு சம்பளம்?” இது சம்பளம் கொடுப்பவர்களின் வாதம்.

”சட்டப்படி ஆபீசுக்கு வரும் நேரம்தான் (Show up time) கணக்கு. ’ON’ செய்துவிட்டு சும்மாவா இருக்க முடியுது. மீட்டிங் அரேஞ்ச் செய்ய, வாடிக்கையாளர்களிடம் ஃபோனில் பேச , இப்படி எவ்வளவோ வேலை வந்த சூட்டோட ஆரம்பிச்சிடறோமே. வேறே யாரையாவது கால் மணி நேரம் முன்னாடியே வந்து ’ON’ செய்யச் சொல்லுங்களேன். இல்லாட்டி ராத்திரி முழுக்க 'Standby/Hibernate/Sleep' லேயே வையுங்க.” இது ஊழியர்களின் வாதம்.

கேஸ் போட்ட “Wait" பார்ட்டிங்களுக்கு நியாயம் கிடைத்ததா? என்று தெரியவில்லை. ஒருவேளை கோர்ட்டிலும் தீர்ப்புக்காக ”Wait ” செய்கிறார்களோ? என்னவோ? தெரிந்தால் சொல்லுங்களேன்.

10 Second Boot : அடுத்த ஆண்டு வரப்போகும் உபுண்டு லினக்ஸ் 10.04 (2010-வது வருடம், 4-வது மாதம்) ரிலீஸில், பத்தே நொடிகளில் கணினியை Boot (Start) செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


” உபுண்டு லினக்ஸ் போட்டுப் பார்த்தேன். பாட்டு கேட்க, படம் பார்க்க என்ன செய்யறதுன்னு தெரியலியே” என்று முழிப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.


http://www.videolan.org போய் VLC Player டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.”

சுதந்திர இலவச மென்பொருள் VLC Player வெர்ஷன் 1.0.0 ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதை வைத்து DVDs, VCDs, Audio CDs, MP3, DivX, etc பயன்படுத்தலாம்.

இந்த புது வெர்ஷன் டவுன்லோடு லிங்க்கை இன்றுவரை சுமார் 1.3 கோடி பேர் கிளிக் செய்து இருக்கிறார்கள். VLC Player Download Statistics.

இந்த VLC Player விண்டோசுக்கும் கூட கிடைக்கிறது (சுமார் 18MB).

இந்த மென்பொருளை உங்கள் நாட்டில் legal ஆக பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். லிங்க்1, லிங்க்2Novell ஆதரவில் செயல்படும் OpenSUSE லினக்சின் வெர்ஷன் 11.2 தயாரிப்பில் இருக்கிறது. இதன் செல்லப் பெயர் Fichte. உபுண்டு லினக்ஸ் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரிலீஸ் ஆவது போல் ஓப்பன்சுசி லினக்ஸ் இனிமேல் எட்டு மாதத்திற்கு ஒரு முறை ரிலீஸ் ஆகும்.


Fedora Linux 12 தயாரிப்பில் இருக்கிறது. இதன் செல்லப் பெயர் Constantine. இது ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரிலீஸ் செய்யப்படுகிறது.

சன் மைக்ரோசிஸ்டம்ஸ் கம்பெனியின் Virtualization மென்பொருள் VirtualBox வெர்ஷன் 3.0 வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு சுதந்திர மென்பொருள்.

7 Comments:

RR said...

நல்ல தகவல்கள்! வாழ்த்துகள் நண்பா!

dondu(#11168674346665545885) said...

என்னை வரச்சொன்ன நேரம் அல்லது வேலைக்கு ரிப்போர்ட் செய்யும் நேரம் (எது பின்னால் வருகிறதோ) அதுதான் கணக்கு என்பதில் நான் எப்போதுமே உறுதியாக இருப்பேன். உதாரணத்துக்கு என்னை வாடிக்கையாளர் அவரது அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு கூப்பிட்டால், நான் ஒன்பதுக்கே சென்று ரிசப்ஷனில் காத்திருந்தால் ஒன்பதரைக்குத்தான் எனது மீட்டர் ஆன் ஆகும். லேட்டாக பத்து மணிக்கு சென்றாலோ அப்போதுதான் மீட்டர் ஆன் ஆகும்.

ஆனால் அதே சமயம் ஒன்பது மணிக்கு வந்ததுமே வாடிக்கையாளர் வேலை கொடுத்து விட்டால் அப்போதே மீட்டர் ஸ்டார்ட் ஆகி விடும்.

இதையெல்லாம் நான் விலாவாரியாக சொல்லிவிட்டு வாடிக்கையாளர் அதற்கெல்லாம் ஒத்து கொண்டால் மட்டுமே வேலைக்கு செல்வதால் இது சம்பந்தமாக எனக்கு பிரச்சினையிருந்ததில்லை.

கணினி கோளாறு அவர் பாடு. என் பிரச்சினை அல்ல.

இது சம்பந்தமாக ஒரு உண்மை நிகழ்ச்சி பற்றி நான் இட்ட ஒரு பதிவு http://dondu.blogspot.com/2007/02/blog-post_06.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Maximum India said...

சுவாரஸ்யமான தகவல்கள் நண்பரே!

நன்றி.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

பிரவின்குமார் said...

அருமையான மிகவும் பயனுள்ள தகவல் ஐயா. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்..!!

suthanthira.co.cc said...

//dondu(#11168674346665545885) said... இது சம்பந்தமாக ஒரு உண்மை நிகழ்ச்சி பற்றி நான் இட்ட ஒரு பதிவு http://dondu.blogspot.com/2007/02/blog-post_06.html
//

படித்தேன் சார். நன்றாக இருந்தது. சுட்டி க்கொடுத்ததற்கு நன்றி.

suthanthira.co.cc said...

நன்றி RR
நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)
நன்றி பிரவின்குமார்
நன்றி Maximum India

back to top