Blogger-ல் (Blogspot) நமக்கு தேவையான வலைப்பூவை இரண்டு விதமாக Follow செய்யலாம்.
1. வெளிப்படையாக (Publicly)
2. இரகசியமாக ( Privately or Anonymously or Secretly)
எந்த விதமாக Follow செய்தாலும், அந்த வலைப்பூவின் புதிய பதிவுகளை Blogger Dashboard-ல் உள்ள ‘Reading List' வழியாக Follow செய்பவர் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
’Public Followers" எத்தனை என்பதை Followers Widget-ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் “Secret Followers" எத்தனை என்பதை நேரடியாக தெரிந்துகொள்ள வழி இல்லை.
குறிப்பிட்ட Follower நமக்கு தேவையில்லை என்றால் அவரை Block செய்துவிடலாம். அவர் ”Blocked Followers" லிஸ்ட்டுக்கு போய்விடுவார்.
ஆராய்ச்சியில் இறங்கியது ஏன்?
”யாராவது என் வலைப்பூவை இரகசியமாக Follow செய்கிறார்களா? அப்படி என்றால் அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியுமா? ”
இது எனக்கு ரொம்ப நாளாகவே இருக்கும் ஒரு சந்தேகம். அதிர்ஷ்டவசமாக அந்த சந்தேகத்தில் பாதியை நானாகவே Solve செய்துவிட்டேன்.
எனக்கு தெரிந்து இதற்கு முன் யாரும் இதை Solve செய்யவில்லை. (தற்பெருமை அடித்துக்கொள்ள இதுதான் சரியான சமயம். சான்ஸை விட்டுடாதே! சரி.... டும் டும் டும்).
இதற்கு விடை கூகிளில் எவ்வளவு நேரம் தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால் நான்தான் முதலில் கண்டுபிடித்தேன்.
அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவு தமிழில் முதல்முதலாக வெளிவருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
துப்பறியும் காண்டம்.
முதலில் உங்கள் கூகிள் கணக்கில் Login செய்துகொள்ளவும்.
"Blocked Followers" எண்ணிக்கையை (If any) தெரிந்துகொள்ள Blogger Dashboard-ல் உள்ள Followers கிளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் Show Blocked Followers கிளிக் செய்து Blocked Followers எண்ணிக்கையை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
உங்கள் வலைப்பூவின் "Secret Followers"-ன் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள உங்கள் "Public Followers" எண்ணிக்கையையும், “Blocked Followers" எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்ளவும் (SUM1).
அடுத்து http://www.google.com/friendconnect செல்லவும்.
உச்சகட்டம் (Climax)
Google FriendConnect இடது பக்கத்தில் உங்கள் பிளாக் பெயரை கிளிக் செய்து Community Data கிளிக் செய்யவும். மேலும் Membership Tab கிளிக் செய்யவும். Total Members என்று ஒரு எண்ணிக்கை வரும். அதில் SUM1 கழித்துவிட்டால் மீதி வருவதுதான் உங்கள் வலைப்பூவின் Secret Followers-ன் எண்ணிக்கை.
எடுத்துக்காட்டாக எனக்கு
Total Members கூகிள் FriendConnect-படி .... 129
Public Followers ................................................118
Blocked Followers................................................. 7
அப்படியானால் ஃபார்முலா பின்வருமாறு
Total Members - Public Followers - Blocked Followers = Secret Followers.
129 - 118 - 7 = 4 Secret Followers.
நானே என்னை இரகசியமாக Follow செய்து கொள்கிறேன். (Blogger Reading List-லே என் பதிவுகள் ஒழுங்கா வருதான்னு செக் பண்ண வேணாமா?). அப்படின்னா என்னை கழித்த பிறகு 3 வருகிறது.
இப்ப கண்டுபிடிச்சுட்டேன்!! என் வலைப்பூவை 3 பேர் இரகசியமாக Follow செய்கிறார்கள் என்று.
எங்கேப்பா Claps / விருது / பட்டம் / ஓட்டு?
இப்படிக்கு துப்பறியும்



68 Comments:
//இப்ப கண்டுபிடிச்சுட்டேன்!! என் வலைப்பூவை 3 பேர் இரகசியமாக Follow செய்கிறார்கள் என்று.
எங்கேப்பா Claps / விருது / பட்டம் / ஓட்டு?//
செம ஆராய்ச்சி !
கலக்கல் !
விருது பட்டம் என்ன கொடுக்கலாம்,
வலைப்பூ வித்தகர் !
ஓகே ?
கலக்கிட்டீங்க... :-)
எப்படி இப்படியெல்லாம்? கூகிளையே டபாய்ச்சிட்டீங்களே?
super 100%
தென்னக ஜேம்ஸ்பாண்டுக்கு வாழ்த்துக்கள்.
எது எப்படியோ, எலி சோம்பேறியில்லை, நல்ல உழைப்பாளி என்று தெரிகிறது!
இரண்டு வெங்காய மசால் வடை பரிசாக....!
சுவாரஸ்யமான பதிவு. என்னுடைய பதிவிலும் சோதனை செய்து பார்த்தேன். சரியாகவே வந்தது.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
எடுத்துவிடு மச்சி
மிகவும் அருமையான தகவல் இது எல்லா பதிவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
எனக்கு முன்னாடியே தெரியும் ...... எப்புடீ ..!!
கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்க நீயி.
சிரமப்பட்டு ஏதோதோ கண்டுபிடித்து எழுதி இருக்கிறீங்க. நீங்க எதை புதுசா கண்டுபிடிச்சீங்க என்பதைவிட எப்படி அதை கண்டுபிடிச்சீங்க என்கிற புத்திசாலித்தனத்தை அறிந்து கொள்வதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
சபாஷ்.
வலையுலக புலி, தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் அண்ணன் ஷிர்டி சாய்தாசன் அவர்களே.. கலக்கி விட்டீர்கள் அய்யா....
மிகவும் பயனுள்ள தகவல்...இன்றே இப்பொழுதே என்னுடைய ப்ளாகிலும் செய்து விட்டு சொல்லுகிறேன்.
நன்றி....நல்ல பதிவு. Keep it up.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!
நல்ல பயனுள்ள தகவல் நண்பரே
thanks
நல்லதோர் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு! பாராட்டுக்கள் நண்பரே!
hello my friend..today only i found your blog spot.and i came to know,this will give the wast information about IT.thanks a lot for you.
and i am also trying to creat one blogspot..
can u guide me...
how i can create one blog spot?
how can i publish this to every one?
how u feed videos in it.
how u include your id in thats tamil.?
i have lots of questions...
further i ask,
please guide me...
razin..
சூப்பர் சாய்!
ஆனா, ப்ளாக்டு பாலோவர்ஸ் இல்லாட்டி?
என் ப்ளாகில் 7 சீக்ரெட் பாலோவர்ஸ்!
//Blogger கோவி.கண்ணன் said...செம ஆராய்ச்சி ! கலக்கல் !
விருது பட்டம் என்ன கொடுக்கலாம்,
வலைப்பூ வித்தகர் ! ஓகே ?//
டபுள் ஓகே!!
நன்றி கோவி.கண்ணன்.
// பாஸ்கர் said... super 100%//
நன்றி பாஸ்கர்
//Blogger சரவணகுமரன் said... கலக்கிட்டீங்க... :-) எப்படி இப்படியெல்லாம்? கூகிளையே டபாய்ச்சிட்டீங்களே?
கூகிள் இதில் தோற்றுப் போய்விட்டது. அதனால்தான் இது ஆராய்ச்சி என்று தைரியமாக சொல்லலாம்.
நன்றி சரவணகுமரன்
//Blogger blogpaandi said... தென்னக ஜேம்ஸ்பாண்டுக்கு வாழ்த்துக்கள்.
இது என் முதல் Investigative Journalism. நன்றி. உங்கள் இந்த கருத்தை என் மனைவியிடம் காட்டி சந்தோஷப்பட்டேன்.
//Blogger கிருஷ்ணமூர்த்தி said... எது எப்படியோ, எலி சோம்பேறியில்லை, நல்ல உழைப்பாளி என்று தெரிகிறது! இரண்டு வெங்காய மசால் வடை பரிசாக....!
என்னை சரியாக எடை போட்டு இருக்கிறீர்கள். நன்றி. வெங்காய மசால் வடைகளை அனுபவித்து சுவைத்துக்கொண்டு இருக்கிறேன்.
//Blogger Maximum India said... சுவாரஸ்யமான பதிவு. என்னுடைய பதிவிலும் சோதனை செய்து பார்த்தேன். சரியாகவே வந்தது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!//
நன்றி சார். உங்களுக்கு சரியாக வந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.
//Blogger தாயகம் said... எடுத்துவிடு மச்சி//
நன்றி சார்.
//Blogger ஜி எஸ் ஆர் said...
மிகவும் அருமையான தகவல் இது எல்லா பதிவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை//
நன்றி சார். கஷ்டப்பட்டு எழுதுறோமே. இது கூட தெரியவில்லையென்றால் எப்படி?
//Blogger Arul said... எனக்கு முன்னாடியே தெரியும் ...... எப்புடீ ..!!//
நான் அதை மறுக்கவில்லை. இருந்தாலும் முதலில் பதிவுலகத்திற்கு வெளிப்படையாக சொன்னது யார்? அதுதான் கேள்வி?
// Anonymous said... கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்க நீயி.//
நீங்கள் பாராட்டுகிறீர்களா? அல்லது குறைபட்டுக் கொள்கிறீர்களா?
// மாசிலன் said... சிரமப்பட்டு ஏதோதோ கண்டுபிடித்து எழுதி இருக்கிறீங்க. நீங்க எதை புதுசா கண்டுபிடிச்சீங்க என்பதைவிட எப்படி அதை கண்டுபிடிச்சீங்க என்கிற புத்திசாலித்தனத்தை அறிந்து கொள்வதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள். நன்றி.//
எல்லாரும் கண்டுபிடிக்கக்கூடிய விஷயம்தான். இருந்தாலும் I just connected the dots to get the big picture.
எவனோ ஒருவன், R.Gopi, கீதா ஆச்சல், Mrs.Menagasathia, தமிழ், சிவனேசு
அனைவருக்கும் நன்றி.
//Blogger H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...
how i can create one blog spot?
please guide me...//
Please post your question in wiki.pkp.in.
People will help you.
//Blogger SUMAZLA/சுமஜ்லா said... சூப்பர் சாய்! ஆனா, ப்ளாக்டு பாலோவர்ஸ் இல்லாட்டி?//
Blocked Followers இல்லையென்றால் Formula-வில் Blocked Followers = 0 என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
நன்றி.
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக நன்றி.. வாழ்த்துக்கள்.. மேலும் இது போன்று நிறைய பயனுள்ள தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும்...
|அதிரை அபூ
மிகவும் அருமையான கண்டுபிடிப்பு
சாய்தாசன் ஐயா,
பாராட்டுகள் பல.
இது எல்லா பதிவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும்.
(எனக்கு அலுவலகத்தில் மிகைபணி காரணமாக அனைத்து பதிவுகளையும் காண தாமதம் ஐயா)
நன்றி வணக்கம்.
உங்களுக்கு ஒரு சிறிய விருது
http://suryakannan.blogspot.com/2009/08/blog-post.html
சபாஷ் சரியான கண்டு பிடிப்பு
சூப்பர் ஐடியா
வாழ்த்துக்கள்
எவனோ ஒருவன்,
R.Gopi,
கீதா ஆச்சல்,
Mrs.Menagasathia,
தமிழ்,
சிவனேசு ,
SUMAZLA/சுமஜ்லா,
அதிரை அபூபக்கர் ,
பிரவின்குமார்,
சூர்யா ௧ண்ணன் ,
Jaleela
அனைவருக்கும் என் நன்றிகள்.
இதுதான் உங்கள் தளத்துக்கு என்னுடைய முதல் வருகை. அட்டகாசமா இருக்கு. நீங்கள் சொல்லியபடி சோதனை செய்தால், ஹ்ம்ம், 14 பேர்வழிகள் என்னை ரகசியமாகத் தொடர்வது தெரிகிறது :). ஒரு 300-400 பேர் அப்படி இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் :( .
Very good work dude. Congrats.
அனுஜன்யா
இருவர் என்னை மறைந்து நின்று பின் தொடர்கிறார்கள் எனக் கண்டு கொண்டேன். மிக்க நன்றி.
துப்பறியும் புலியே தாங்களின் பணி வெகு சிறப்பு:
தொடர்ந்து புலி தன்பணியை செய்யட்டும்
வாழ்த்துக்கள்
அருமை..கலக்கிட்டீங்க...
வாழ்த்துக்கள்!
//அனுஜன்யா said... 14 பேர்வழிகள் என்னை ரகசியமாகத் தொடர்வது தெரிகிறது :). ஒரு 300-400 பேர் அப்படி இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் :(\//
ஆசைய பாரு!
நன்றி கபிலன்
நன்றி அன்புடன் மலிக்கா
நன்றி வலசு - வேலணை
நன்றி அனுஜன்யா
நலமாய் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்.
புது விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி!
இப்ப நானும் கண்டுபிடிச்சுட்டேன்!! என் வலைப்பூவை 11 பேர் இரகசியமாக Follow செய்கிறார்கள் என்று
Total Members கூகிள் FriendConnect-படி .... 60
Public Followers ................................................48
Blocked Followers................................................. 1
கலக்கிட்டீங்க... அப்பு
நன்றி ஜோதிஜி. தேவியர் இல்லம்.
நன்றி r.selvakkumar.
நன்றி தெய்வமகன்
very interesting!!!
http://susricreations.blogspot.com
நன்றி Suvaiyaana Suvai
அன்பின் சாய்
நானும் கண்டு பிடித்தேன் - இரண்டு பதிவர்கள் என்னை இரகசியமாக பின் தொடர்கிறார்கள் - அவர்கள் யார் என எப்படிக் கண்டு பிடிப்பது ? பிறகு தொடர மறுக்கப்பட்ட பதிவர்கள் ( பிளாக்டு ) யார் ? இவர்களுக்கு யார் அனுமதி மறுத்தது ? இவ்விபரங்கள் அளித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.
கண்டுபிடிப்பிற்கு பாராட்டுகள்
//cheena (சீனா) said... இரண்டு பதிவர்கள் என்னை இரகசியமாக பின் தொடர்கிறார்கள் - அவர்கள் யார் என எப்படிக் கண்டு பிடிப்பது ?//
எத்தனை பேர் நம்மை இரகசியமாக பின்தொடர்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதால், யாருடைய பிரைவசியும் கெட்டுப்போகப் போவதில்லை.
ஆனால் அவர்கள் யார் என்று குறிப்பாக கண்டுபிடித்தால் அவர்கள் பிரைவசி பாதிக்கும்.
அதனால், அவ்வாறு கண்டுபிடிப்பது எப்படி என்று எனக்கு பிறகு தெரியவந்தால்கூட, நான் யாருக்கும் சொல்லமாட்டேன்.
//cheena (சீனா) said..தொடர மறுக்கப்பட்ட பதிவர்கள் ( பிளாக்டு ) யார் ? இவர்களுக்கு யார் அனுமதி மறுத்தது ? //
தமிழே தெரியாத வெளிநாட்டவர், சில சொந்த காரணங்களுக்காக ஃபாலோயராக சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களையும் சேர்த்து என் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காண்பிக்க விருப்பமில்லை. அதனால் அவர்களை Block செய்துவிட்டேன்.
வலைப்பூவின் சொந்தக்காரருக்கு மட்டுமே Block செய்ய உரிமை இருக்கிறது.
சில profile படங்கள் ஆபாசமாக இருக்கலாம். அல்லது அவர்கள் profile-ல் உள்ள சுட்டிகள் அவ்வகை தளங்களாக இருக்கலாம்.
இந்த காரணங்களால், சட்டப்படி நம்மை காத்துக்கொள்ள அவர்களை பிளாக் செய்வது நலம்.
அருமையான ஆராய்ச்சி தொடரட்டும் உங்கள் சேவை
நன்றி ரகுமான்.
how can i get linux latest version dvd's via postal without payment...?
தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ:)
செம்ம கண்டுப்பிடிப்பு உங்களுக்கு இதற்கு என்றே தனியே விருது கொடுக்க வேண்டும் சாய் சார்!
//Anonymous said...
how can i get linux latest version dvd's via postal without payment...?//
என்னை ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும். முடிந்தால் நானே அனுப்புகிறேன்.
..imran said...
தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ:)
செம்ம கண்டுப்பிடிப்பு உங்களுக்கு இதற்கு என்றே தனியே விருது கொடுக்க வேண்டும் சாய் சார்!//
நன்றி இம்ரான்.
உங்கள் வலைப்பூவிற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்தது, மிக பயனுள்ள தகவல்களை பதிந்திருக்கிறீர்கள் . . . வாழ்த்துகள் . . .
இந்த கண்டுபிடிப்பிற்கு தகுந்த பட்டம் 'கம்ப்யூட்டர்/கணினி சங்கர்' எவ்வளவு நாள் தன சங்கரை வெறும் கேபிளாக வைத்திருப்பது . . . தொடருங்கள் 'கம்ப்யூட்டர்/கணினி சங்கர்', உங்கள் கணினி சகாப்தத்தினை
//மார்கண்டேயன் said...
உங்கள் வலைப்பூவிற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்தது, மிக பயனுள்ள தகவல்களை பதிந்திருக்கிறீர்கள் . . . வாழ்த்துகள் //
நன்றி மார்கண்டேயன்.
உங்கள் வலைப்பூவிற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்தது, மிக பயனுள்ள தகவல்களை பதிந்திருக்கிறீர்கள். புது விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.மிகவும் அருமையான தகவல் இது. எல்லா பதிவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
நன்றி
thanks dear Prabhu
உங்கள விட நான் தான் பெரிய ஆள் :-)
என்னைய 6 பேரு ரகசியமா பாலோவ் பண்றாங்களாக்கும்... ஹே...ஹே... நானும் பிரபல(??!!) பதிவர்..
ஓவர் பில்டப்பா இருக்கோ :-)
எனிவே
மிக்க நன்றி சகோ
@ ஆமினா.. தேடிவந்து படித்ததற்கு நன்றி.
@ andkm, IT Tweets நன்றி.
good
Post a Comment