என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் முழித்துக் கொண்டு இருந்தேன்.
மீண்டும் ஒரு முறை முயற்சி செய்தபோதுதான் கவனித்தேன். Firefox Search bar-க்கு கீழே Install missing Plugins... என்று படத்தில் இருப்பது போல் ஒரு அறிவிப்பு வருகிறது என்று.

மேலும் அதே லைனின் இடது பக்கத்தில் Additional plugins are required to display all the media on this page என்று இருந்தது.

அதை முதலில் நான் கவனிக்கவில்லை. ஆதலால்தான் அந்த தடுமாற்றம்.
ஏன் அதை கவனிக்கவில்லை என்று யோசித்தபோது காரணம் புரிந்தது.
அந்த அறிவிப்பு மஞ்சள் Background-ல் இருந்தது. சிவப்பு மாதிரி வண்ணம் இருந்தால்கூட உடனே கவனித்திருக்க வசதியாக இருந்திருக்கும். அல்லது Blink ஆகி இருந்தால்கூட உடனே கவனித்து இருப்பேன். Dialog பாக்ஸ் கூட போட்டு இருந்திருக்கலாம். எளிதாக கவனத்தை ஈர்த்து இருக்கும். ஆனால் அப்படி இல்லை.
எப்படி இருந்தாலும் அது Firefox-ன் Usability Issue. உபுண்டுவின் பிரச்சனை அல்ல.

உடனே Do you want to install package 'flashplugin-installer' என்று ஒரு விண்டோ வந்து கேட்டது. Install பட்டனை கிளிக் செய்தேன்.

Password கேட்டு ஒரு விண்டோ வந்தது. Password கொடுத்தேன்.
Installing Software என்று ஒரு விண்டோ வந்தது.

இன்டர்நெட் தொடர்பு இருந்ததால் உடனே டவுன்லோடு செய்ய ஆரம்பித்தது. Details-க்கு முன்னால் இருந்த Arrow-வை கிளிக் செய்தபோது படத்தில் உள்ளவாறு Progress காண்பித்தது. டவுன்லோடு அளவு சுமார் 3.8 MB இருந்தது.

எல்லாம் முடிந்த பிறகு Successfully applied all changes என்றும்

Adobe Flash Player (Installer) Installed என்றும் அறிவிப்பு வந்தது.

இப்போது கூகிள் அனலிடிக்ஸில் Graph வருகிறது.

உபுண்டுவில் நான் செய்த இந்த Installation எளிதாகத்தான் இருந்தது. பிறகு ஏன் லினக்ஸ் User friendly இல்லை என்று சொல்கிறார்கள்? வந்த ஒரு பிரச்னையும் Firefox-ன் குறை. அதை லினக்ஸ் தலையில் கட்டினால் நியாயமில்லை.
இப்போது நிறைய வலைத்தளங்கள் Flash பயன்படுத்துவதால் இந்தக் கட்டுரை உபுண்டுவிற்கு வரும் அனைவருக்கும் பயன்படும்.
இந்த Step-by-step விளக்கம், லினக்ஸ் பற்றி உள்ள தவறான கருத்துகளை ஓரளவாவது குறைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
படங்களை Print Screen key தட்டி சேமித்து GIMP-ல் (GNU Image Manipulation Program) தேவையான பகுதிகளை வெட்டி எடுத்தேன்.


10 Comments:
முன்பெல்லாம் உபுண்டுவில் இந்த Flash ஓடு பெரிய பிரச்சனையாக இருந்தது,இப்போது பரவாயில்லை என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு ஒரு சிறிய விருது
http://svttechnologya.blogspot.com/2009/08/blog-post_27.html
www.puthumai.weebly.com
இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்
உங்கள் விளம்பர அளவு
170 pix x 100 pix
GIF Image or JPEG Image
எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்
puthumai@ymail.com
என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.
http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html
என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி
இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது
இனையமுகவரி :
டெக்னாலஜி.காம்
பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.
http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view¤t=singakkutti-awad.gif
நன்றி.
//வடுவூர் குமார் said... முன்பெல்லாம் உபுண்டுவில் இந்த Flash ஓடு பெரிய பிரச்சனையாக இருந்தது,இப்போது பரவாயில்லை என்று நினைக்கிறேன்//
லினக்ஸ் தினம் தினம் improvement ஆகிக் கொண்டே இருக்கிறதே.
வடுவூர் குமார்,
தமிழ்,
Puthumai,
சிங்கக்குட்டி,
அனைவருக்கும் என் நன்றிகள்.
வணக்கம்,
நான் முதன் முதலில் "தொடர்பவனாக" என்னை இணைத்துக்கொண்ட முதல் வலைபூ இது தான். ஏனெனில் எனக்கு நிறைய சந்தேகங்கள் வலைபூ நிர்வகிப்பது தொடர்பாக இருக்கிறது அதை உங்களிடம் கேட்கலாம் என்றும், நான் கொஞ்ச நாட்களுக்கு முன் எழுதிய "பதிவுலகம் பற்றிய ஒரு பதிவு" என்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தமைக்காகவும் தான். அதான் இந்தியாவிலேயே தமிழை தவிர வேறெந்த மொழிக்காவது இத்தனை வலைப்பூக்கள் இருகின்றனன்வா..? சரி என்னுடைய முதல் சந்தேகம் "இந்தமாதிரி பதிளிடுகைகளை தமிழ் படுத்துவது எவ்வாறு..?"
உங்கள் பதிவை படித்தேன். அட சரவணன் நாம இரண்டு பேரும் ஒரே மாதிரியா யோசிச்சு இருக்கோம் இல்லே. ஆச்சரியமா இருக்கு. இருந்தாலும் நீங்க முந்திகிட்டீங்க.
//என்னுடைய முதல் சந்தேகம் "இந்தமாதிரி பதிளிடுகைகளை தமிழ் படுத்துவது எவ்வாறு..?//
மன்னிக்கவும். எனக்கு கேள்வியே புரியவில்லை. நீங்கள் தமிழில்தானே கமெண்ட் அடித்து இருக்கிறீர்கள்.
தமிழில் மாற்ற இதே பக்கத்தில் Google Indic Transliterator கொடுத்து இருக்கிறேனே. அதை பயன்படுத்தி தமிழில் அடிக்கலாம்.
Post a Comment