05 September, 2009

சுட்டி சுட்டி IT செய்திகள்

ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) ஒரு சுதந்திர மென்பொருள் (Open Source Software) என்று தெரியாமலேயே நிறைய பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

அறிமுகமாகிய ஐந்து வருடத்திலேயே ஒரு பில்லியன் முறை (நூறுகோடிகள் - 1,000,000,000 - ஒன்னு போட்டு 9 சைபர். தலை சுத்துதுப்பா!) டவுன்லோடு செய்யப்பட்ட ஃபயர்ஃபாக்ஸ் அந்த சந்தோஷ தருணத்தை கொண்டாட http://www.onebillionplusyou.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறது.

மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் எதிரி No.1 நம்ம ஃபயர்ஃபாக்ஸ்தான்.

ஃபயர்ஃபாக்ஸை, மக்கள் தாமாகவே முன்வந்து ஆசையாக பயன்படுத்துவது, சுதந்திர மென்பொருட்களின் எதிர்காலத்தைப் பற்றி நமக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இப்பவே அடுத்த பில்லியன் டவுன்லோடுகளுக்கு ரெடியாகிக் கொண்டு இருக்கிறார்கள்.

நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்”னு லினக்ஸ், ஃபயர்ஃபாக்ஸை பார்த்து ஜாலியாக பாட்டு பாடிக் கொண்டு இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------

ஸ்மார்ட்ஃபோன் வாங்க போறீங்களா?
பாவம் பார்க்காமல் பேரம் பேசுங்கள்! ஏன்?


ஃபின்லாந்தை தலைமையிடமாக கொண்ட நோக்கியா 2008-ம் வருடம் செல்போன் விற்பனையில் 46 % (Unit terms) சந்தைப்பங்கை பெற்று 55% லாபத்தை அடைந்துள்ளது.

Smartphones என்று அழைக்கப்படும் ஐஃபோன் தயாரிக்கும் ஆப்பிளுக்கும், ப்ளாக்பெர்ரி (Blackberry) தயாரிக்கும் கனடாவின் ரிசர்ச் இன் மோஷன் (Research in Motion) கம்பெனிக்கும் மொத்த எண்ணிக்கையில் (Unit terms) வெறும் 3 % சந்தைப்பங்குதான். ஆனால் லாபத்தில் 35% பங்கு இந்த இரண்டே பேருக்குத்தான் (அவ்வ்வ்..) (Lion's Share). (எல்லா %-ம் உலக அளவில்).

Source: Wall Street Journal.

சில பேர் யார் தலையில் நன்றாக மிளகாய் அரைக்க முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.எல்லாம் "F" மயம்.

சோஷியல் நெட்வொர்க்கிங் தளமான Facebook.com-ன் உலக அளவிலான உறுப்பினர்கள் எண்ணிக்கை ஜூலை 2009-ல், 250 மில்லியனை (25 கோடிகள்) தொட்டுவிட்டது. மூன்றே மாதத்தில் 50 மில்லியன் பேர் (5 கோடி பேர்கள்) புதியதாக சேர்ந்து இருக்கிறார்கள்.


Facebook, சோஷியல் மீடியா மற்றும் உடனடி செய்தித் திரட்டி வகை வலைத்தளமான Friendfeed.com-ஐ சமீபத்தில் வாங்கியுள்ளது.

இரண்டு கம்பெனிகளின் லோகோவையும் பார்த்தால் ஒரே F-ஆ இல்லே இருக்கு. எது எப்படியோ! கம்பெனியை வாங்கிய பிறகு "E" ஓட்டாமல் இருந்தா சரி!

15 Comments:

SUMAZLA/சுமஜ்லா said...

டெக்னிக்கல் நியூஸ்னா அது உங்கள் சைட் தான்!

உங்க பெயர் பிழையை என் பதிவில் சரி செய்து விட்டேன்!

suthanthira.co.cc said...

//SUMAZLA/சுமஜ்லா said... டெக்னிக்கல் நியூஸ்னா அது உங்கள் சைட் தான்!//

அய்யோ! புல்லரிக்குதே! புல்லரிக்குதே!
நன்றி சுமஜ்லா

சிங்கக்குட்டி said...

நல்ல தகவல்கள் மிக்க நன்றி.

suthanthira.co.cc said...

//சிங்கக்குட்டி said... நல்ல தகவல்கள் மிக்க நன்றி.
//

எல்லா விதத்திலும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் திரு. சிங்கக்குட்டிக்கு நன்றிகள் பல.

Anonymous said...

உங்க பதிவை ரொம்ப நாளா படிச்சிட்டு வரேன்.. ரீடரில் உங்க பதிவை முழுவதுமாக படிக்க முடியலை.. அந்த வசதியை செய்ய முடியுமா? அலுவலகத்தில் blogspot தடை செய்யப்பட்டுள்ளது அதனால் தான் இப்படி..

suthanthira.co.cc said...

// Anonymous said... ரீடரில் உங்க பதிவை முழுவதுமாக படிக்க முடியலை.. அந்த வசதியை செய்ய முடியுமா? அலுவலகத்தில் blogspot தடை செய்யப்பட்டுள்ளது அதனால் தான் இப்படி..//

மன்னிக்க வேண்டுகிறேன். தற்போது அந்த வசதி கொடுப்பதாக இல்லை.

GEETHA ACHAL said...

மிகவும் நல்ல தகவல்.நன்றி

கிரி said...

சுவாராசியமான செய்திகள் :-)

அப்படியே பின்னூட்ட பெட்டிய full page ஆக மாற்றி விடுங்கள் ..எங்களுக்கு எளிதாக இருக்கும்

வலசு - வேலணை said...

//
”நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்”னு லினக்ஸ், ஃபயர்ஃபாக்ஸை பார்த்து ஜாலியாக பாட்டு பாடிக் கொண்டு இருக்கிறது.
//
இரசித்தேன்.

வாழ்த்துக்கள்

suthanthira.co.cc said...

வலசு - வேலணை,
கிரி,
Geetha Achal,
சிங்கக்குட்டி
அனைவருக்கும் நன்றிகள்.

suthanthira.co.cc said...

//கிரி said...அப்படியே பின்னூட்ட பெட்டிய full page ஆக மாற்றி விடுங்கள் ..எங்களுக்கு எளிதாக இருக்கும்//

திரு. கிரி அவர்களே! உங்கள் ஆலோசனைக்கு நன்றி. அதன்படி ஓரளவு நல்லபடியாக மாற்றி அமைத்து இருக்கிறேன்.

Ramarajan said...

நண்பரே.!
அனைத்தைய்யும் படித்தேன்.
அறிந்து கொண்டேன்.
மிகவும் அறுமை.
அதுக்காகவே இந்த கருத்து.!
வாழ்த்துக்கள்.

suthanthira.co.cc said...

நன்றி ராமராஜன்.

Jayadeva said...

ஃபயர்ஃபாக்ஸ் (Firefox)-4 பத்தி செய்திகளில் படித்தேன். என்னென்னவோ வசதிகள் இருக்குதாமே, அது வந்துச்சுன்ன மத்த எல்ல உலவிகளையும் மிஞ்சும் வகையில் இருக்கும்னு சொல்றங்கோ. எப்ப வரும்னு ஆவலோட காத்துகினு இருக்கேன்.

பிரபு said...

//Jayadeva said...ஃபயர்ஃபாக்ஸ் (Firefox)-4 எப்ப வரும்னு ஆவலோட காத்துகினு இருக்கேன்.//

அப்படித்தான் பில்டப் கொடுப்பாங்க. பார்க்கத்தானே போகிறோம்.
நன்றி.

back to top