11 October, 2009

இந்தியாவிற்கு மென்பொருள் சுதந்திரம் கிடைப்பது எப்போது?


சுதந்திர மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும்போது ’அந்த’ இம்சை/அடிமை மென்பொருள் நமக்கு எதற்கு?  (சொல்லுங்க பார்க்கலாம்.  ’அந்த’ என்று நான் குறிப்பிடுவது ’எந்த?’)

இதை நன்றாக புரிந்துகொண்ட நாட்டுப் பற்று மிக்க அமெரிக்கர்கள், அமெரிக்க அரசின் செயல்பாடுகளில் சுதந்திர மென்பொருட்களின் பயன்பாட்டை கொண்டுவரவும், அதிகப்படுத்தவும் Open Source For America (http://opensourceforamerica.org/) என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சுதந்திர மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதால் அவை ஏழைபாழைகளுக்குத்தான் என்று நீங்கள் இதுவரை நினைத்து இருந்தால், அந்த எண்ணத்தை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவிடம் இல்லாத காசா? பணமா?  அவர்கள் ஏன் தங்கள் அரசிடம் சுதந்திர மென்பொருளை பயன்படுத்த வற்புறுத்துகிறார்கள்?

இலவசம் என்பது சுதந்திர மென்பொருட்களின் பல முகங்களில் ஒரு முகம்தான்.  இலவசம் என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைத்துக்கொண்டு அதை மட்டம் தட்டுவது தவறு.

இலவசம் என்ற நன்மையையும் தாண்டி Freedom, Transparency, Choice, Security, Fast Updates  -  இப்படி மேலும் பல நன்மைகள் அரசு இயந்திரத்திற்கு/மக்களுக்கு சுதந்திர மென்பொருட்களால் கிடைக்கும்.


அமெரிக்கர்கள், மென்பொருள் பயன்பாட்டில் தனியார் உரிமை மென்பொருட்களையும் (Proprietory Software) தாண்டி, அடுத்த கட்டத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

நாம்தான் ‘அந்த’ மென்பொருளைக் கட்டிகொண்டு அழுதுகொண்டு இருக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் ’அந்த’ இயங்குதளத்தைதான் பயன்படுத்துவேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு பிறந்து வந்திருக்கிறோமா. என்ன?

எந்த நாட்டிலாவது ‘அந்த’ மென்பொருள்தான் பயன்படுத்தவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன?


மென்பொருள் துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே!

அவர்களே சுதந்திர மென்பொருட்களின் அருமை தெரியாமல் ‘அந்த’ அடிமை மென்பொருளைத்தானே தினசரி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நாட்டுப் பற்று இருந்தால், இந்திய மக்கள் அனைவரும் விரும்பி எளிதாக பயன்படுத்தும் வகையில் லினக்ஸ் போன்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களை அவர்கள் மேம்படுத்திகொண்டே இருக்கவேண்டும்.  மக்களிடையே விழிப்புணர்ச்சியை பரப்பவேண்டும்.

நம் நாட்டிற்கு ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை கிடைத்து விட்டது.  ஆனால் மென்பொருள் சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை.

அதே மாதிரி OpenSourceForIndia.Org வலைத்தளத்தை இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து ஆரம்பிக்கும் தருணம் வந்துவிட்டது.  செய்வார்களா?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் இந்த அடிமை மென்பொருள் மோகம்?
இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையுடன்,

+மென்பொருள் பிரபு 

31 Comments:

பொன்மலர் said...

good post.keep it up. thanks for sharing

கிரி said...

விண்டோஸ் மேல செம காண்டுல இருக்கீங்க போல :-)

வடிவேலன் ஆர். said...

சரி விடுங்க கோவம் வேண்டாம் தல நம்மாளுங்க எது சுலபமாக இருக்கோ அதைதான் தேர்ந்தெடுப்பார்கள்

அறிவிலி said...

இன்ஸ்டாலேஷன், யூசேஜ் இன்னும் யூசர் ஃப்ரெண்ட்லியா மாறனுங்க.

இன்னொன்னு இந்தியாவ பொறுத்த வரைக்கும் (பர்ஸனல் யூஸ்) "அந்த" சாஃப்ட்வேர்லாம் கூட ஓபன் சோர்ஸ் மாதிரிதானே..(பைரசி)

அதி பிரதாபன் said...

நானும் மாறலாமான்னுதான் யோசிச்சுட்டு இருக்கேன். ஆனா லினக்ஸ இதுவரை பாத்ததுகூட கிடையாது. ராமைக் கூட்டி ரெண்டு ஓஎஸ்ம் போட்டு முயற்சி பண்ணனும்.

லவ்டேல் மேடி said...

அட உடுங்க ....!! அடைத்த எலக்சன்ல்ல கலைஞர் கிட்ட சொல்லி அதையும் ப்ரீயா குடுக்க சொல்லிபோடலாம்.....

Arul said...

//விண்டோஸ் மேல செம காண்டுல இருக்கீங்க போல :-)///

me too..

suthanthira.co.cc said...

// அறிவிலி said... இன்ஸ்டாலேஷன், யூசேஜ் இன்னும் யூசர் ஃப்ரெண்ட்லியா மாறனுங்க.//

தினம்தினம் லினக்ஸ் improve ஆகிக்கொண்டு இருக்கிறது.

suthanthira.co.cc said...

//கிரி said...

விண்டோஸ் மேல செம காண்டுல இருக்கீங்க போல :-)
//

அப்படி எல்லாம் இல்லை.

suthanthira.co.cc said...

// எவனோ ஒருவன் said... நானும் மாறலாமான்னுதான் யோசிச்சுட்டு இருக்கேன். ஆனா லினக்ஸ இதுவரை பாத்ததுகூட கிடையாது. ராமைக் கூட்டி ரெண்டு ஓஎஸ்ம் போட்டு முயற்சி பண்ணனும்.//

லினக்ஸ் கிட்டத்தட்ட விண்டோஸ் மாதிரியே மாறிக் கொண்டு வருகிறது.

suthanthira.co.cc said...

//Blogger லவ்டேல் மேடி said...
அட உடுங்க ....!! அடைத்த எலக்சன்ல்ல கலைஞர் கிட்ட சொல்லி அதையும் ப்ரீயா குடுக்க சொல்லிபோடலாம்.....//

நல்லா connect செய்யறீங்க.

suthanthira.co.cc said...

பொன்மலர், அருளுக்கு நன்றிகள் பல.

suthanthira.co.cc said...

// வடிவேலன் ஆர். said...
சரி விடுங்க கோவம் வேண்டாம் தல நம்மாளுங்க எது சுலபமாக இருக்கோ அதைதான் தேர்ந்தெடுப்பார்கள்//

சரி. சுதந்திரம் வேண்டுபவர்கள் லினக்ஸ் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

சென்ஷி said...

சிறப்பான பதிவு தலைவா.. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை சாமானியர்களுக்கு ஓப்பன் சோர்ஸ் பற்றிய புரிதல்கள் ரொம்ப கம்மி. ஈசியா எல்லாம் சேர்த்துக் கொடுக்கற விண்டோஸ் பெஸ்ட்டுன்னுதான் எல்லோரும் சொல்றாங்க :)

Anonymous said...

That is called India's second freedam day

பிரவின்குமார் said...

Super Post.
Ur Explanation is very very good.
Keep it up.
Thanks for sharing.

SAKTHI said...

its really nic.. keep it up

SAKTHI said...

its really nic .. keep it up

பா.வேல்முருகன் said...

ஹலோ சாய்....
உங்கள் தளத்துல இருக்கும் பதிவுகள் எல்லாமே சூப்பர்.
நானும் உங்க பாலோயர் ஆயிட்டேன்.

Anonymous said...

Very good post.
I'm thinking how to use Linux.
- Juergen.

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவு :-))

suthanthira.co.cc said...

//சென்ஷி said... ஆனால் இந்தியாவை பொறுத்தவரை சாமானியர்களுக்கு ஓப்பன் சோர்ஸ் பற்றிய புரிதல்கள் ரொம்ப கம்மி.//

அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.

suthanthira.co.cc said...

நன்றி சிங்கக்குட்டி
நன்றி Juergen
நன்றி Vels
நன்றி SAKTHI
நன்றி பிரவின்குமார்

suthanthira.co.cc said...

//Anonymous said... That is called India's second freedam day//

India's Second Freedom Struggle என்று சொல்ல வந்திருப்பீர்கள். அந்தப் போராட்டத்திற்கு நேரம் வந்துவிட்டது.

r.selvakkumar said...

நல்ல சிந்தனை. நானும் இந்த கருத்தை பின்பற்றி எழுதலாமென்றிருக்கிறேன்.

suthanthira.co.cc said...

//r.selvakkumar//

நன்றி செல்வக்குமார்.

Anonymous said...

Linux installation has been easier than windows for years. sounds counter intuitive but true especially with the advent of Ubuntu and its clones. Just boot from the CD and take the defaults(Just keep pressing the enter key :)) and you will have a working installation of Linux in minutes. People prefer windows as it is like a habit.

suthanthira.co.cc said...

//Anonymous said... People prefer windows as it is like a habit.
//

உண்மை,

vino said...

///என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் இந்த அடிமை மென்பொருள் மோகம்?///

பைரசி அழியும் வரை கஷ்டம் தான். அது என்னவோ, hackers 'அந்த' மென்பொருளையே ஹாக் செய்வோம் என்று யாருக்கு எழுதிக் கொடுத்தார்களோ தெரியவில்லை!

Durga said...

Tomorrow Software Freedom Day 18-sept-2010, let we all celebrate. take a look at my friend's blog tamilcpu.blogspot.com

Anonymous said...

//Durga said... take a look at my friend's blog tamilcpu.blogspot.com//

நன்றி துர்கா.

back to top