08 December, 2009

என்.டி.டி.வி. ஹிந்துவுக்கு மில்லியன் பில்லியன் Thanks!!


நன்றி சொல்லும் நேரமிது!

NDTV Hindu டிவி சேனலில், சென்ற வெள்ளிக்கிழமை (4.12.2009) இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான "Reliance Big TV Byte It" நிகழ்ச்சியில் திரு.சைபர்சிம்மன், கெளதம் இன்ஃபோடெக் திரு. வடிவேலன் இவர்களுடன் என்னையும் பேட்டி எடுத்து வெளியிட்டு இருந்தார்கள்.தமிழ் மொழியில் கம்ப்யூட்டர்/இன்டர்நெட்/மென்பொருட்களைப் பற்றி எழுதும் வலைப்பூக்களைப் பற்றி அறிந்ததும், என்.டி.டி.வி ஹிந்து சேனல் உடனடியாக செயல்பட்டு, சென்னையில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப பதிவர்களைப் பற்றி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றோர், கிராமங்களில் வாழும் மக்கள், இதுவரை கம்ப்யூட்டரை முறையாக கற்க வசதி/நேரம் இல்லாமல் இருப்பவர்கள், இப்படி சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும், தொடந்து நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களால் கணினியை பயன்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.

உதாரணம் : ஆன்லைன் பேங்கிங், ஆன்லைன் டிரேடிங், ஆன்லைன் புக்கிங். ஆன்லைன் தேர்வுகள், இப்படி நிறைய.

கணினிகள் பெரும் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், ஒரு சாதாரண மனிதன் (Lay person) அதை புரிந்துகொண்டு முழுமையாக பயன்படுத்துவதும், எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் சீராக பராமரிப்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

இதற்கான பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து படித்தாலும், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ குறைந்த அளவே தெரிந்துகொள்ள முடிகிறது.

இப்படிப்பட்டவர்கள், நிறைய விஷயங்களை அனுபவத்தில்தான் கற்றுக் கொள்கிறார்கள். “என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் வைரஸ் வந்து டேட்டா அழிந்துவிடுகிறது”. இப்படி புலம்புவர்களை நாம் தினமும் பார்க்கிறோம்.

அதிலும் ஆங்கிலம் சரியாக தெரியாமல் இருப்பவர்களின் நிலைமை மேலும் கடினம்தான். ஏனென்றால் கணினி சம்பந்தமான அதிகபட்ச செய்திகள் இன்டெர்நெட்டில் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அதனால் நிறைய தேவையான விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.

தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் இப்படிப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளன.

தமிழர்கள் இதைப் பற்றி படிக்க, கேள்வி கேட்க, ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள இன்றியமையாத ஊடகமாக (Media) இவை வளர்ந்து வருகின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த வலைப்பூக்களைப் பற்றிய விழிப்புணர்வு, கணினிகளை பயன்படுத்தும் மக்களிடம் குறைவாகவே உள்ளது.

என்.டி.டி.வி ஹிந்து
வின் இந்த நிகழ்ச்சி, இந்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

என்.டி.டி.வி. ஹிந்துவுக்கு மில்லியன் பில்லியன் Thanks.

என்.டி.டி.வி ஹிந்துவின் சரித்ரா பார்த்தசாரதி, பிரதிபா மற்றும் ஒளிப்பதிவாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Youtube-ல் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் மேற்கண்ட வீடியோவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கடைசியாக நான் பார்த்தபோது 3200+ Views!

சக பதிவர்களுக்கு நன்றி தனி பதிவில் வருகிறது.

13 Comments:

Anonymous said...

திரட்டிகள் பற்றியும் சொல்லியிருக்கலாமே ஸார் ?

மாலன்

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

கலக்குங்க தல. கலக்கிட்டீங்க தல.
என்றென்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
டெக்‌ஷங்கர் @ Techshankar

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்குங்க :))

வெங்கிராஜா | Venkiraja said...

Brilliant! Have tweeted about it and blogged it! By the way, you look cool too! Congrats!

கிருஷ்ணா (Krishna) said...

நன்றாக இருந்தது.
உறுத்திய ஒரே விஷயம், நீங்கள் விண்டோஸ் இயங்கு தளம் உபயோகிப்பளராக காண்பிக்கப்பட்டது.
ஏன் லினக்ஸ் ஐ உங்கள் பேட்டியில் முன் வைக்கவில்லை ?

அன்புடன்,
கிருஷ்ணா
http://rvkrishnakumar.blogspot.com/

SUFFIX said...

பாராட்டுக்குள் நண்பரே!!

ரஹ்மான் said...

வாழ்த்துக்க, மற்றும் நன்றிகள்

WebPrabu said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!! உங்களின் இந்த பேட்டிகள் உங்களுக்கு மிகபெரிய புத்துணர்ச்சியாகவும்,சக பதிவர்களும் சாதிக்க தூண்டுகூலாகவும் மற்றும் பல சிறந்த பதிவர்களை நிச்சயம் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. கண்டிப்பாக தமிழ் வலைத்தளங்களை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களிடம் விரைவில் சென்றடைய நாம் அனைவரும் பாடுபட்டு வெற்றியை விரைவில் கொண்டாடுவோம். உங்கள் சேவை இன்னும் மாறுபட்டு ஒளிர என் வாழ்த்துக்கள்.

Lucky Limat லக்கி லிமட் said...

வாழ்த்துக்கள் நண்பரே ...

Muhammad Ismail .H, PHD, said...

// நன்றாக இருந்தது.
உறுத்திய ஒரே விஷயம், நீங்கள் விண்டோஸ் இயங்கு தளம் உபயோகிப்பளராக காண்பிக்கப்பட்டது.
ஏன் லினக்ஸ் ஐ உங்கள் பேட்டியில் முன் வைக்கவில்லை ? //

@ கிருஷ்ணா,

க்னூ/லினக்ஸ் எனும் கோட்பாடை வைத்துக்கொண்டு கூப்பாடு வேண்டுமானால் போடலாம். வலைப்பூவில் இடுகையிட்டு ஹிட் வாங்கலாம். ஆனால் அதைக்கொண்டு டெஸ்க்டாப் உபயோகிப்பாளர்களுக்கு ஒரு வாய் சாப்பாடு போட இயலாது. இது நிதர்சனமான உண்மை. தற்போது அதன் வீச்சு செர்வர்களில் தான் அதிகம். டெஸ்க்டாப்களில் முழுமையாக வருவதற்கு 21 December 2012 ஆகிவிடும்.

@ பிரபு,

அப்ப அனைவரையும் சர்வ ரோக நிவாரணியாக 'லினக்ஸ் மின்ட்' உபயோகப்படுத்த சொல்லி போட்ட இடுகையெல்லாம் M$ விண்டோஸ் வித் பத்ரியின் NHM ரைட்டர்ல தானா? என்னக்கொடுமை பிரபு இது? படிக்கிறது இராமாயாணம், இடிக்கிறது பெருமாள் கோயில்ங்கற மாதிரி, அண்ணன் ரசீது கதவுகளின் (பில் கேட்ஸ்) ஓசி பிரியாணி (பைரேட்ட் விண்டோஸ்) சாப்பிட்டுகிட்டே அதைப்பற்றியே புகாரா? கொஞ்சம் நன்றியோட நடந்திருக்கலாம் !!! எனக்கு இந்த திருக்குறள்கள் தான் நினைவுக்கு வருகிறது.


" எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு.
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்க்கு "

பிறகு மற்றவர்களுக்கு சொல்வது ஒன்று, தனக்கென செய்வது வேறொன்று என்ற கொள்கைக்கு ...

" சொல்லுதல் யார்க்கும் எளிய. அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் "

வேறென்னத்தை சொல்ல ?

Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com

சிங்கக்குட்டி said...

பாராட்டுக்கள் நண்பரே :-)

goma said...

நானும் கவனித்தேன் தமிழ் வலைப்பூ பற்றிய பேட்டியை.
அந்த சமயம் பரிச்சியம் இல்லாததால் சக பிளாகர் என்ற முறையில் பார்த்தேன்
இல்லத்தரசிகளில் 90 விழுக்காடு ,அயல் நாட்டிலிருக்கும் குழந்தைகளோடு பேசுவதற்கும் ,வெப் கேமராவில் பேரக் குழந்தைகளைக் கண்டு ரசிக்கவும் எவ்வளவு கணினி அறிவு வேண்டுமோ அந்த லிமிட் வரை தெரிந்து கொள்கிறார்கள்.மேற்கொண்டு அறி அத்தனை ஆவல் காட்டுவதில்லை.
விழுப்புணர்ச்சி கொண்டு வந்தால் நல்லதா இல்லையா என்பது, அந்தந்த குடும்ப சூழ்நிலையைப் பொருத்து இருக்கிறது

arulmozhi r said...

@Mohammad Ismail
லினக்ஸ் பற்றி நீங்கள் சொல்வதை ஏற்க இயலாது. இன்று பல நிறுவனங்களிலும் வீட்டு கணினியிலும் மற்றும் கல்லூரிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Polytechnic and engineering கல்லூரிகளிலும் open source பற்றிய பாட பிரிவுகள் உள்ளன.விசாரித்துப் பாருங்கள் தெரியும்.21.12.2012 விண்டோஸிற்கு வேண்டுமானால் வரலாம். ஆனால் லினக்ஸிற்கு வராது.

back to top