23 March, 2009

ட்விட்டரின் வயது இன்று ”3”. நன்று !!!

”ஜவ்வு மாதிரி இழுக்காதே. சொல்ல வேண்டியதை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டுப் போ.”

இந்த அறிவுரையை நாம் பல முறை கேட்டும் இருப்போம். சொல்லியும் இருப்போம்.

அதையே ”அதிகபட்சம் 140 எழுத்துகளுக்குள், இன்டர்நெட்டில் சொல்லவேண்டும்” என்ற இன்னொறு restriction கொடுத்தால் அதுதான் “ட்விட்டர்”.

ட்விட்டர் என்ன என்று கேட்பவரா நீங்கள்? என்னுடைய அடுத்தடுத்த பதிவுகளுக்கு காத்திருங்கள். இந்தப் பதிவு ட்விட்டர் தெரிந்தவர்களுக்கு!

சோஷியல் நெட்வொர்க்கிங் மற்றும் மைக்ரோ-ப்ளாக்கிங் தளமான ட்விட்டருக்கு இன்று ’3’ வயது ஆகிறது.


”விஷயம் அவ்வளவுதானா” என்று கேட்பவர்கள், இந்த பதிவின் முதலிரண்டு வரிகளை திரும்ப படிக்கவும்.

12 March, 2009

Firefox-க்கு program எழுதிய மைக்ரோசாஃப்ட்!

உங்களுக்கே தெரியும். சுதந்திர மென்பொருள் Firefox browser Search Bar-ல் default ஆக கூகிள்தான் இருக்கிறது.

Search bar-ன் down arrow-வை கிளிக் செய்து யாஹூவையோ, விக்கிபீடியாவையோ செலக்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மெனுவில் மைக்ரோசாஃப்டின் search engine http://www.live.com/ இருக்காது.

வேண்டுமென்றால் Address Bar-ல் live.com அடித்து அங்கே போய் தேடலாம். ஆனால் கீபோர்டு ஷார்ட்கட் Control+K பயன்படுத்தினால் cursor நேரா search bar போய் விடும் வசதி இருக்கும்போது எத்தனை பேர் மற்ற search engines போவார்கள்?

இதனால் Firefox பயன்படுத்துபவர்களில் பலர் கூகிளிலும், சிலர் யாஹூவிலும்தான் தேடுகிறார்கள்.

முதலில் அவ்வளவாக கண்டுகொள்ளாத மைக்ரோசாஃப்ட், firefox அதிக சந்தைப் பங்கு பெற்றவுடன் விழித்துக் கொண்டது.


Search engine பிசினஸ் இப்போது ஒரு prestige issue-வாக மாறி விட்டது. Market Share-க்கு ஏற்ப விளம்பர வருமானமும் அதிகரிப்பதால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை.

இப்படியே விட்டால் firefox-ல் இருந்து தன் search engine "live.com" வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமோ, என்று கவலைப்பட்ட மைக்ரோசாஃப்ட், சுலபமாக live.com வர firefox-க்கு வழி செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது.

இதற்காக official-ஆ Microsoft Live Search add-on (extension) புரோகிராம் எழுதியது.

இதை Mozilla Link-ல் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


இதை இன்ஸ்டால் செய்தவுடன், search bar down arrow-வை அழுத்தி live.com செலக்ட் செய்து கொள்ளலாம்.

இப்போ, வெறும் Control+K அடித்தால் live.com தேடல் ரெடி.


போனஸாக, கூகிள் ஸ்டைல் autosuggest-ம் வருகிறது.

யார் நினைத்து இருப்பார்கள். இப்படி firefox-க்கு மைக்ரோசாஃப்ட் addon எழுதும் என்று.

எதிரி வளர்ச்சி அடைத்தாலும், அவனது வெற்றியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பாடத்தை மைக்ரோசாஃப்டிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

09 March, 2009

விட்டுக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! எதை? யாருக்கு?


Recession-னு சொல்லி, மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் 1,400 தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது.

அப்புறம்தான், 25 பேருக்கு settlement-ஆ கொடுத்த பணத்தில், கொடுக்க வேண்டியதை விட தவறாக, சுமார் $200 முதல் $5000-த்துக்கும் மேல் அதிகமாக கொடுத்ததாக கண்டுபிடித்தது.

உடனே அந்த 25 பேருக்கு கடிதம் எழுதி, தெரியாமல் அதிகமாக கொடுத்து விட்டதாகவும், excess பணத்தை திருப்பிக் கொடுத்து விடும்படியும் கேட்டுக்கொண்டது.

இந்த லெட்டரை பார்த்து கடுப்பான ஒரு worker சும்மா இல்லாமல், ஒரு வெப்சைட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

அந்த வெப்சைட், மைக்ரோசாஃப்ட்டிடம் இந்த கடிதம் உண்மைதானா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே தன்னுடைய வலைத்தளத்தில் அந்த கடிதத்தை போட்டுவிட்டது.


விஷயத்தை கேள்விப்பட்ட ஒவ்வொருத்தரும், பலவித reaction கொடுக்க ஆரம்பித்தனர். நான் இணையத்தில் படித்த கமெண்டுகளில் சில....

”மைக்ரோசாஃப்ட்தான் 20 பில்லியன் டாலர் ($20 Billion) பணம் வெச்சு இருக்குதே. அந்த excess பணம் திருப்பி வரலேன்னா கம்பெனியை இழுத்து மூடிட்டா போகப்போறாங்க.”

"அவிங்களே வேலை போச்சேன்னு கஷ்டத்திலே இருக்காங்க. அவங்ககிட்டே போய் நீ வாங்கின பணத்தில் ஒரு amount திருப்பி கொடுடான்னா கொடுமைடா சாமி”

”வேற என்ன நடந்துருக்கும். செட்டில்மெண்ட் கணக்கை Microsoft Excel யூஸ் செய்து போட்டு இருப்பாங்க. அதான் இந்த பிரச்சனை” என்று நக்கல் கமெண்ட் வேறே.
இப்படியெல்லாம், ஒவ்வொருத்தனும் இஷ்டத்துக்கு போட்டுத் தாக்க, கிணறு வெட்ட பூதம் கிளம்புதே என்று யோசித்த மைக்ரோசாஃப்ட், ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு அந்தர்பல்டி அடித்து, excess பணத்தை யாரும் திருப்பி தர வேண்டியதில்லை என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து விட்டது.

இது இப்படி இருக்க, 20 பேருக்கு கொடுக்க வேண்டியதை விட குறைவாக கொடுத்ததாகவும் கண்டுபிடித்து, அவர்கள் கேட்காமலேயே shortage-ஐ கொடுத்து விட்டது. இதற்காக நாம் மைக்ரோசாஃப்ட்டை பாராட்டத்தான் வேண்டும்.

இப்பவாவது பிரச்சனை தீர்ந்துதா என்கிறதை, இன்டெர்நெட்டில் நான் பார்த்த இந்த latest கமெண்ட் பார்த்து முடிவு பண்ணிக்குங்க.

”எல்லாரையும் ஒரே மாதிரி treat பண்ணனும். மத்த 1375 பேர் என்ன பாவம் பண்ணாங்க. அவங்களுக்கும் இதே excess amount-ஐ கூப்பிட்டு கொடுக்கறதுதான் நியாயம்”

08 March, 2009

காசு மிச்சம் செய்ய கூகிளின் புதிய சேவை - Tip Jar !

பாமா விஜயம் திரைப்படத்தில் வரும் ”வரவு எட்டணா, செலவு பத்தணா” பாட்டில், குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்த வேண்டும் என்று பாட்டோடு பாட்டாக சொல்லி இருப்பார்கள்.

உதாரணமாக, “வாடகை சோபா இருபது ரூபா, விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா.

இப்போது recession என்று பூச்சாண்டி காட்டி, ஆட்குறைப்பு, சலுகைக்குறைப்பு என நம் கையில் புரளும் பணத்தை வெகுவாக குறைத்து விட்டார்கள்.

இந்த சமயத்தில்
, கையில் இருக்கும் பணத்தை மாசக் கடைசி வரை ஜவ்வு மாதிரி நீட்டிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பலர் இருக்கின்றனர்.

அடுத்த மாசம் சம்பளம் வர வரைக்கும்தானேன்னு நீங்க கேட்கறத்துக்கு முன்னாடி, அடுத்த மாசம் வேலையிலே இருப்போமான்னு முதல்ல கேட்டுக்குங்க.

ஏன் இவ்வளவு பில்ட்-அப்?

நம்ம கூகிள் Tip Jar -ன்னு ( http://www.google.com/tipjar) ஒரு புதிய சேவையை ஆரம்பித்து இருக்கிறது.

வீட்டில், அலுவலகத்தில், ஷாப்பிங்கில் என்று எங்கே, எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்ற மற்றவர்களின் ஐடியாக்களை தெரிந்து கொள்ளவும், உங்களுடைய ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளவும், ஒரு பயனுள்ள தளமாக விளங்க முயற்சிக்கிறது.

உங்களுக்கு உபயோகமான சேமிப்பு ஐடியாக்களுக்கு ஓட்டு போட்டு அதன் popularity-ஐ ஏற்றலாம், அல்லது பிடிக்காதவற்றுக்கு Negative ஓட்டு போட்டு குறைக்கலாம்.

பார்த்ததில் என் ஃபேவரிட் “சுதந்திர மென்பொருளை பயன்படுத்துங்கள்
. காசு மிச்சம்!!

இப்ப இருக்கிற பொருளாதார மந்த நிலைக்கு இந்த சேவை தேவைதான்.

அலர்ட்!!

நீங்க கொடுக்கிற ஐடியாக்களை
, ஒரு பைசா கொடுக்காமல் கூகிள் பயன்படுத்திக் கொள்ள அதற்க்கு உரிமை இருக்கிறதாம்.

தேடித் தேடிப் பார்த்தேன்
. BETA வார்த்தையே காணோம்.

சந்தேகமாக இருக்கிறது
. நீங்களே சொல்லுங்க.

BETA -ன்னு ஒரு வார்த்தை இல்லேன்னா, அது உண்மையாலுமே கூகிள் சேவைதானா?

06 March, 2009

ரூ.125/-க்கு விண்டோஸ் 7 Beta உங்களுக்கு வேணுமா? இப்ப ரொம்ப ஈசிங்க.


”விண்டோஸ் 7 beta இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்” என்று மைக்ரோசாஃப்ட் சொன்னாலும் சொல்லுச்சி. அப்பத்திலேயிருந்து அதே நினைப்பு.

வெறும் 1 GB பிராட்பேண்ட் பிளானை வெச்சிக்கிட்டு விண்டோஸ் 7 beta டவுன்லோடு செய்யனும்னு நினைச்சா முடியுமா?

அடடா ? முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு மாசத்திற்கு மட்டும் ”அன்லிமிடெட் டவுன்லோடா” பிளானை மாத்தி இருக்கலாமேன்னு வருத்தப்பட்டேன்.

என்னை கடுப்பேத்தனும்னே, Windows 7 பற்றி இன்டர்நெட் ஃபுல்லா ஆஹா! ஓஹோ!ன்னு ரிவ்யூ வேறே.

இதுக்குள்ளே, Beta டைம் முடிஞ்சி RC (அதாங்க Release Candidate Stage) ரெடியான பிறகுதான்னு அடுத்து டவுன்லோடுன்னு சொல்லிட்டாங்க.

DVD-யோட எவன்னா கெடைச்சா, போட்டு ஜமாய்ச்சிடலாம்னு நெனச்சா, ஒருத்தனும் மாட்டலே.


இன்னிக்கி ராத்திரி சும்மா chip.in போய் பார்த்தபோது பயங்கர ஷாக். மார்ச் 2009 Chip Magazine issue-வோட வர DVD-யிலே விண்டோஸ் 7 பீட்டாவும் இருக்குன்னு போட்டு இருந்தது.

Chip India Magazine March 2009 Issue DVD Contents

எனக்கு தெரியவே தெரியாதுங்க. இதுவரைக்கும் யாரும் சொல்லவும் இல்லே. இனிமே விடிஞ்ச பிறகுதான் வாங்க முடியும்.

சரி. என்னை மாதிரி விண்டோஸ் 7 beta மேலே ஏக்கமா இருந்தவங்களுக்கும் இந்த செய்தி தெரிஞ்சா பயன்படுத்திப்பாங்களேன்னு ”ஆந்தை கணக்கா!!” இந்த அர்த்த ராத்திரியில் பதிவு அடிக்கிறேன்.

ஹாவ்.. கொட்டாவி வருது. நாளைக்கு பார்க்கலாம்.

Good Night.

கொசுறு
----------

இந்த பதிவு எழுதுவதின் நோக்கமே, “Issue sold out" என்று கடைக்காரன் சொல்றதுக்கு முன்னாடியே, நம்ம ஆளுங்க Chip Magazine மார்ச் 2009 Issue-வை அப்படியே அமுக்கிடனும்ற நல்ல எண்ணம்தான்.

MRP Rs.125/-தான். பார்வையாளர் கருத்தில் ஒருத்தர் Rs.150/-க்கு விக்குதுன்னு சொல்றார். அது Black Market ரேட் போல.

விண்டோஸ் 7 beta-வை ஆகஸ்ட் முதல் தேதி வரை legal-ஆ பயன்படுத்திக்கலாம்.

ஹய்யா! இன்னும் 5 மாசம் இருக்கு.

03 March, 2009

20 கோடி வெப்சைட்டுகளை தாண்டி அசுர வளர்ச்சியில் இன்டர்நெட்!!


”ஒரு கோடி சன்லைட், ஒரு கோடி மூன்லைட் ”

என்று பாடிக்கொண்டே வந்த என் மனைவியை இடைமறித்து, இனிமே

“ஒரு கோடி சன்லைட், 20 கோடி வெப்சைட்,
எல்லாமே சேர்ந்த இதுதானே என் நெட்”


என்று பாடனும் என்றேன்.

உங்களுக்கு விஷயமே தெரியாதா?

இங்கிலாந்தைச் சேர்ந்த ”நெட்கிராஃப்ட்” (Netcraft Ltd.) என்ற இன்டர்நெட் சேவை நிறுவனம் தனது ஃபிப்ரவரி 2009 சர்வேயில், இன்டர்நெட்டில் மொத்தமாக சுமார் 20 கோடி வெப்சைட்டுகள் செயல்படுவதாக தெரிவித்து இருக்கிறது.


முக்கியமான செய்தி என்னவென்றால், ஒரே மாதத்தில் 3 கோடி வெப்சைட்டுகள் புதிதாக வந்துள்ளன. இதுலே, சைனாவின் பங்கு மட்டும் 2 கோடி. ஒரே மாதத்தில் 16% jump.

”எண்ணிக்கையில் என்ன சார் இருக்கு? குறைவா இருந்தாலும் தரமா, பயனுள்ளதா இருந்தா போதாதா ?” என்று கேட்கிறீர்களா?

அதுவும் சரிதான்.

10,000 Patents குவித்த மைக்ரோசாஃப்ட் !!

மைக்ரோசாஃப்ட் 10,000 அமெரிக்க பேடன்ட்டுகள் (கண்டுபிடிப்பு உரிமம்) வாங்கிக் குவித்துள்ளது.

2008ஆம் வருடம் சுமார் 2,000 பேடன்ட்டுகள் வாங்கியுள்ளது.

அப்போ பேடன்ட் வாங்கறதுலே தலைவர் யாருங்கோ? என்றால் அது மைக்ரோசாஃப்டா?

ம்ம்ம்ம்... அதுதான் இல்லை. அந்த பெருமை IBMஐத்தான் சாரும்.


மொத்தத்தில் IBMதான் உலகிலேயே அதிக பேடன்ட் வைத்துள்ள நிறுவனம்.

சத்தமே இல்லாமல் 2008ஆம் வருடம் மட்டும் 4000 அமெரிக்க ”கண்டுபிடிப்பு உரிமங்களை” அள்ளியது.

அப்போ பேடன்ட் வாங்கறதுலே, தலைவரு திமிங்கலம் ..........”IBM”தானுங்கோ.

01 March, 2009

பிரச்சனை உங்க பக்கமா? கூகிள் பக்கமா?

போன வாரம் செவ்வாய்க்கிழமை, கூகுளின் ஜீமெயில் திடீர்னு உடம்பு சரியில்லாமல் முடியாம சுமார் 3 மணி நேரம் படுத்துகிச்சி.

ஜீமெயில் பயன்படுத்துகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருவதாலோ என்னவோ, அய்யாவுக்கு லோடு தாங்க முடியலே போல இருக்கு.


ஜென்டில்மேனா "ஸாரி" சொன்ன கூகிள், காசு கொடுத்து ஜீமெயில் பயன்படுத்துபவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதாக ஒத்துக்கொண்டது .

பின்னே சும்மாவா. ஜீமெயில், 99.9 சதவீதம் சேவையில் பிரச்சனை வராது. இல்லேன்னா பணம் வாபஸ்ன்னு கேரண்டி கொடுத்துதானே காசு வாங்குச்சி.

இந்த கேரண்டி “கூகிள் அப்ஸ்” (Google Apps) package-லே இருக்கும் கூகிள் கேலண்டர், கூகிள் டாக்ஸ், கூகிள் Talk போன்ற மற்றதுக்கும் பொருந்தும்.

நம்மள மாதிரி ஓசியில் ஜீமெயில் பயன்படுத்துறவங்களுக்கு refund இல்லீங்ணா! ஹிஹி!

அது மட்டும் இல்லாமே, என்னை மாதிரி ”ஜீமெயில் வரலையே, ஜீமெயில் வரலையேன்னு” கீ போர்டுலே F5 கீயே உடைஞ்சு போற அளவுக்கு அடிக்கடி refresh செய்து பார்த்தவங்க வயித்தெரிச்சலை இனிமேலாவது கொட்டிக்கக் கூடாதுன்னு ஒரு “கூகிள் சர்வீஸ் ஸ்டேடஸ் பக்கம்” ஒன்று ஆரம்பித்து இருக்கிறது.


இதுலே போய் பார்த்தால் பிரச்சனை யார் பக்கம்னு க்ளீனா தெரிஞ்சிடும். அப்புறம் எதுக்கு F5 (Refresh) க்கு கொட்டு கொட்டு.

இதுதான் சமயம்னு ”ஜீமெயில் லேப்ஸ்” கண்டுபிடிப்பான ”ஆஃப்லைன் ஜீமெயிலை” பயன்படுத்தலாமேன்னு கூகுளோட யோசனை வேறே.

அது பயன்படுத்தினால் கனக்‌ஷன் இருக்கோ இல்லியோ, மெயில் அடிச்சு outboxலே போட்டு வெச்சுக்கலாம். கனக்‌ஷன் வந்தவுடனே தானா மெயில் ஆயிடும்.

அது வேணும்னா ஜீமெயிலே Settings -> Labs போய் enable பண்ணிக்குங்க.


வரட்டுமா!!
back to top