என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் முழித்துக் கொண்டு இருந்தேன்.
மீண்டும் ஒரு முறை முயற்சி செய்தபோதுதான் கவனித்தேன். Firefox Search bar-க்கு கீழே Install missing Plugins... என்று படத்தில் இருப்பது போல் ஒரு அறிவிப்பு வருகிறது என்று.

மேலும் அதே லைனின் இடது பக்கத்தில் Additional plugins are required to display all the media on this page என்று இருந்தது.

அதை முதலில் நான் கவனிக்கவில்லை. ஆதலால்தான் அந்த தடுமாற்றம்.
ஏன் அதை கவனிக்கவில்லை என்று யோசித்தபோது காரணம் புரிந்தது.
அந்த அறிவிப்பு மஞ்சள் Background-ல் இருந்தது. சிவப்பு மாதிரி வண்ணம் இருந்தால்கூட உடனே கவனித்திருக்க வசதியாக இருந்திருக்கும். அல்லது Blink ஆகி இருந்தால்கூட உடனே கவனித்து இருப்பேன். Dialog பாக்ஸ் கூட போட்டு இருந்திருக்கலாம். எளிதாக கவனத்தை ஈர்த்து இருக்கும். ஆனால் அப்படி இல்லை.
எப்படி இருந்தாலும் அது Firefox-ன் Usability Issue. உபுண்டுவின் பிரச்சனை அல்ல.

உடனே Do you want to install package 'flashplugin-installer' என்று ஒரு விண்டோ வந்து கேட்டது. Install பட்டனை கிளிக் செய்தேன்.

Password கேட்டு ஒரு விண்டோ வந்தது. Password கொடுத்தேன்.
Installing Software என்று ஒரு விண்டோ வந்தது.

இன்டர்நெட் தொடர்பு இருந்ததால் உடனே டவுன்லோடு செய்ய ஆரம்பித்தது. Details-க்கு முன்னால் இருந்த Arrow-வை கிளிக் செய்தபோது படத்தில் உள்ளவாறு Progress காண்பித்தது. டவுன்லோடு அளவு சுமார் 3.8 MB இருந்தது.

எல்லாம் முடிந்த பிறகு Successfully applied all changes என்றும்

Adobe Flash Player (Installer) Installed என்றும் அறிவிப்பு வந்தது.

இப்போது கூகிள் அனலிடிக்ஸில் Graph வருகிறது.

உபுண்டுவில் நான் செய்த இந்த Installation எளிதாகத்தான் இருந்தது. பிறகு ஏன் லினக்ஸ் User friendly இல்லை என்று சொல்கிறார்கள்? வந்த ஒரு பிரச்னையும் Firefox-ன் குறை. அதை லினக்ஸ் தலையில் கட்டினால் நியாயமில்லை.
இப்போது நிறைய வலைத்தளங்கள் Flash பயன்படுத்துவதால் இந்தக் கட்டுரை உபுண்டுவிற்கு வரும் அனைவருக்கும் பயன்படும்.
இந்த Step-by-step விளக்கம், லினக்ஸ் பற்றி உள்ள தவறான கருத்துகளை ஓரளவாவது குறைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
படங்களை Print Screen key தட்டி சேமித்து GIMP-ல் (GNU Image Manipulation Program) தேவையான பகுதிகளை வெட்டி எடுத்தேன்.




