பதிவராக வருவதற்குமுன், நயன்தாரா என்ற பெயரில் wiki.pkp.in தளத்தில் பங்கெடுத்துக்கொண்டேன். "கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது. இப்போது என்ன செய்வது?" என்று கவலையோடு தீர்வு தேடி வருபவர்களை துரத்தி துரத்தி "லினக்ஸ் போட்டுக்கொள்ளுங்கள். வைரஸ் வராது" என்று சொல்வது என் வேடிக்கையான வாடிக்கையாக இருந்தது.
அந்த டிவி நிகழ்ச்சி பற்றிய என் அறிவிப்பு அடங்கிய பதிவையும், என்.டி.டி.வி ஹிந்துவுக்கு நன்றி சொன்ன பதிவையும் யூத்ஃபுல்விகடன் தேர்வு செய்து, இந்த செய்தி மேலும் பலரிடம் சென்றடைய உதவிசெய்தது. விகடனுக்கு என் நன்றிகள்.
பிரபல தொழில்நுட்ப பதிவர்கள் அனைவரும், "நாம்தான் அந்த நிகழ்ச்சியில் இல்லையே. ஏன் கண்டுகொள்ள வேண்டும்" என்று நினைக்காமல், அவரவருக்கு பிடித்த விதத்தில் இந்த கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட செயல், மற்ற பதிவர்களுக்கு ஒரு பின்பற்றத்தக்க முன்னுதாரணமாக அமைந்தது.
தமிலிஷிடமிருந்து மின்னஞ்சலில் வாழ்த்துக்கள் வந்தன. இது சம்பந்தமாக பதிவுகள் எழுதியும், வீடியோவிற்கு லின்க் கொடுத்தும் ஆதரவு தெரிவித்த பிகேபி, டிவிஎஸ்50, தமிழ்நெஞ்சம், raafi.com, சைபர்சிம்மன், சூர்யா கண்ணன், கெளதம் இன்போடெக் வடிவேலன், Tamiltech.info கார்த்திகேயன், பதிவுகளுக்கு ஓட்டு போட்டவர்கள் இப்படி அனைவருக்கும் என் நன்றிகள்.
யோசித்துப் பார்த்தால், சமூக நலனுக்காக ஊர்கூடித்தான் ஓரணியாக தேர் இழுத்து இருக்கிறோம் என்று புரியும்.

19 Comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
நல்ல விஷயம்னா நாலு பேர் சேரரதுல என்ன ஆச்சர்யம்..
நன்றி சூர்யா கண்ணன்.
நன்றி கேபிள் சங்கர்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...:-)
நல்ல விஷயம்!
மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
krishna
http://rvkrishnakumar.blogspot.com/
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Wish You very Happy New Year
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் பணி...:))
உண்மை! :)
புத்தாண்டு வாழ்த்துகள்! :)
//ஹாலிவுட் பாலா said... //
வாங்க வாங்க. உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் இந்த வலைப்பூ களையிழந்துபோய் இருந்தது.
நன்றி WebPrabhu
நன்றி அன்புடன் அருணா
நன்றி ரமேஷ்
நன்றி கிருஷ்ணா (Krishna)
நன்றி cheena (சீனா)
நன்றி Kathir
நன்றி TAMIL
நன்றி Subankan
நன்றி Movie Posters
நன்றி பலா பட்டறை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே...! :)
உங்களைப் போன்ற பதிவாளர்கள் தான் எங்களைப் போன்ற வளர்ந்து வரும் பதிவாளர்களுக்கு முன் உதாரணம்.. தொடரட்டும் உங்கள் சேவை...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா...
நன்றி சிவனேசு.
நன்றி வர்மா.
நன்றி 【♫ஷங்கர்..
Post a Comment