23 March, 2010

உபுன்டு LTS-னா என்ன?


லக்க.. லக்க ....லக்க லூசிட் லிங்க்ஸ்.

சுதந்திர இலவச மென்பொருள் உபுன்டு லினக்ஸ் ஆறு மாதத்துக்கு ஒரு முறை புதிய Edition ரிலீஸ் செய்யும்.

உபுன்டு தன்னுடைய ஒவ்வொரு புது ரிலீசுக்கும் ஒரு விலங்கின் பெயரை செல்லப் பேராக (Nickname) வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

அடுத்து ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு வரப்போகும் உபுன்டு 10.04-ன் செல்லப்பெயர் (Nickname) லூசிட் லிங்க்ஸ் LTS.

சுருக்கமா "லூசிட்".


ஐ லவ் யூ லூசிட்!

அது என்ன 10.04?

2010-வது வருஷம் 04-வது மாதம்.

அது சரி. LTS என்றால் என்ன?

Long Term Support. பெயரில் LTS என்று இருந்தால் டெஸ்க்டாப் வெர்ஷனுக்கு 3 வருடங்களும், சர்வர் வெர்ஷனுக்கு 5 வருடங்களும் சப்போர்ட் தருவார்கள்.

பேரில் LTS இல்லேன்னா?

சர்வராக இருந்தாலும் சரி. டெஸ்க்டாப்பாக இருந்தாலும் சரி. வெறும் 18 மாதங்கள்தான் சப்போர்ட்.

பேரில் LTS இல்லேன்னா 18 மாதங்களுக்குப் பின் பயன்படுத்த முடியாதா?

முடியும். ஆனால் அதுக்கு அப்புறம் சாப்ட்வேர் & செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்காது. லினக்சே ஆனாலும் அப்டேட்ஸ் இல்லாமல்  பயன்படுத்துவது ரிஸ்க்தான். அதுக்கு லேட்டஸ்ட் ரிலீஸையே பயன்படுத்திக் கொள்ளலாம்.


இப்போதுதான் முதல்முறையாக LTS ரிலீஸ் போடுகிறார்களா?

இல்லை இல்லை. இதற்கு முன் உபுன்டு 6.06 LTS (Dapper Drake), உபுன்டு 8.04 LTS (Hardy Heron) என்று இரண்டு LTS வந்து இருக்கின்றன. இந்த LTS வரிசையில் லூசிட் லின்க்ஸ் 10.04 மூன்றாவது.

எதுக்கு உபுன்டுவை LTS, non-LTS-னு சொல்லி போடறாங்க?

பெரிய பெரிய கம்பெனிகளில் ஆபரேடிங் சிஸ்டத்தின் வெர்ஷனை அடிக்கடி மாற்றிக்கொண்டு இருக்க விரும்ப மாட்டார்கள். (வேறே வேலை இல்லே!). அந்த மாதிரி வாடிக்கையாளர்களுக்கு உபுன்டு LTS மிகவும் தேவையான ஒன்று.

அப்ப உபுன்டு LTS என்னை மாதிரி வீட்டில் ஓசியில் ஓட்டுபவர்களுக்கு பொருந்தாதா?

உபுன்டு LTS ரிலீஸை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதைப்போட்டு குழப்பிக்கக் கூடாது. எத்தனை நாள் சப்போர்ட் என்பதுதான் வித்தியாசம்.

LTS-னு சொல்லி ஏதாவது எக்ஸ்ட்ரா காசுகீசு கேட்பாங்களா?

LTS என்றாலும் non-LTS என்றாலும் இரண்டுமே இலவசம்தான். உபுன்டுவிடம் இருந்து சப்போர்ட் வேண்டும் என்றால் காசு கொடுத்து கான்டிராக்ட் போட்டுக்கொள்ளலாம்.

தற்போதைய ரிலீஸ் கார்மிக் கோலா பெரில் non-LTS
பார்த்ததா ஞாபகம் இல்லையே?

சரிதான். LTS என்றால்தான் பேரில் LTS போடுவாங்க. இல்லேன்னா non-LTS-னு நாமாகவே புரிந்துகொள்ள வேண்டியதுதான்.


எல்லாத்தையுமே LTS-ஆ போட்டுட வேண்டியதுதானே?

Maintenance-க்கு நிறைய நேரம், ஆள் பலம், பணபலம் தேவை. உபுன்டு அவ்வளவு பெரிய கம்பெனி கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை புது ரிலீஸ் செய்யவே நேரம் சரியாக உள்ளது.எனக்கு LTS, non-LTS எது செட்டாகும்?

அவ்வளவு யோசித்து குழப்பிக்கொள்ள வேண்டாம். உங்கள் கணினியில்/ மடிக்கணினியில் எந்த வெர்ஷன் திருப்தியாக வேலை செய்கிறதோ, அதையே வைத்துக் கொள்ளவும்.

லூசிடுக்கு அடுத்த LTS எப்ப வரும்?

சுமார் 2 வருடங்களுக்கு ஒரு முறை LTS ரிலீஸ் போடுவார்கள்.

உபுன்டு லினக்ஸை இலவசமாக வீட்டிற்கே வரவைக்க
https://shipit.ubuntu.com/ போய் பதிவு செய்யவும்.

இந்த கட்டுரை எழுத பயன்படுத்தியது:

லூசிட் லின்க்ஸ் உபுன்டு 10.04 ஆல்பா 3

System > Preferences >iBus Preferences

Firefox 3.6

13 Comments:

Lucky Limat லக்கி லிமட் said...

Good News Friend.....

இரா.கதிர்வேல் said...

நல்ல பதிவு தலைவா.ரொம்ப நாளாக எனக்கு LTS என்றால் என்ன என்ற சந்தேகம் இருந்துகொண்டு இருந்தது அதை தெளிவுபடுத்தி விட்டீர்கள்.

arulmozhi r said...

தகவலுக்கு நன்றி. இதில் நெருப்புநரி 3.6 உள்ளது போல் ஒபன் ஆபிஸ் 3.2 உள்ளது.

நாளும் நலமே விளையட்டும் said...

நான் உபுண்டு 9.10 பயன் படுத்துகிறேன்.
எனது x சரியாக வேலை செய்யாதது போல் தெரிகிறது,
kile பயன்படுத்துமோது, மற்றும் சில வெப்சைட் பார்க்கும்போது ரொம்ப வேலை செய்வது போல் உள்ளது.
10 .04 எப்படி?

உங்கள் கட்டுரைகள் நன்று. தொடருங்கள் பணி

Anonymous said...

Good one. Ubuntu is best. Be bit careful with server version of 10.04. Causes issues to your MBR

சசிகுமார் said...

நல்ல தகவல் நண்பா, தொடர்ந்து இதுபோல் பல பயனுள்ள பதிவுகளை போடவும்

suthanthira.co.cc said...

//சசிகுமார் said... நல்ல தகவல் நண்பா, தொடர்ந்து இதுபோல் பல பயனுள்ள பதிவுகளை போடவும்
//

நன்றி சசிகுமார். கணினிக்கு தனியாக ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் டாப் டென்னில் நிச்சயம் வந்துவிடுவீர்கள்.

suthanthira.co.cc said...

//Anonymous said...

Good one. Ubuntu is best. Be bit careful with server version of 10.04. Causes issues to your MBR//

தகவலுக்கு நன்றி.

suthanthira.co.cc said...

//KATHIRVEL said...ரொம்ப நாளாக எனக்கு LTS என்றால் என்ன என்ற சந்தேகம் இருந்துகொண்டு இருந்தது அதை தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
..//

நன்றி கதிர்வேல். நீங்களும் லினக்சில் கலக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

suthanthira.co.cc said...

//Lucky Limat லக்கி லிமட் said.. Good News Friend.....
//

நன்றி லக்கி லிமட். உங்களுக்கு நல்ல வேலை அமையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

suthanthira.co.cc said...

//arulmozhi r. said.. தகவலுக்கு நன்றி.//

நன்றி அருள்மொழி.

suthanthira-ilavasa-menporul.com said...

//நாளும் நலமே விளையட்டும் said..kile பயன்படுத்துமோது, மற்றும் சில வெப்சைட் பார்க்கும்போது ரொம்ப வேலை செய்வது போல் உள்ளது.//

புதிய பதிப்புக்கு மாறிப்பாருங்கள். பிரச்சனை தீர வாய்ப்பு உள்ளது. அல்லது LTS பதிப்பிலேயே தொடருங்கள். நன்றி.

Anonymous said...

thanks... it is useful info ...

back to top