19 May, 2010

உபுன்டு எட்டு அடி - லினக்ஸ் மின்ட் பதினாறு அடி!!


உபுன்டு லினக்ஸை அடிப்படையாகக் (base) கொண்டு பல லினக்ஸ் distributions வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் லினக்ஸ் மின்ட்.

உபுன்டுவே அழகுதான். அந்த அழகுக்கு அழகு செய்தால்? அதுதான் லினக்ஸ் மின்ட்!

உபுன்டுவை இன்னும் மெருகேற்றி லினக்ஸ் மின்டாக கொடுக்கிறார்கள்

லினக்ஸ் மின்டை பயன்படுத்துவது உபுன்டுவை பயன்படுத்துவது போல்தான் இருக்கும்.

டல்லடிக்கும்  Brown வண்ண default வால்பேப்பரோடு உபுன்டு வரும்போதே அதை தூக்கிப்போட்டுவிட்டு, கண்கவர் default வால்பேப்பரோடு வந்த லினக்ஸ் மின்ட், லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் மனதில் "பச்சக்" என்று ஒட்டிக்கொண்டது.
லினக்ஸ் மின்ட் = 99% உபுன்டு + 1% எக்ஸ்ட்ரா
லினக்ஸ் மின்ட் = உபுன்டு ++
உபுன்டு வாழைப்பழம் - லினக்ஸ் மின்ட் உரித்த வாழைப்பழம் 
உபுன்டு புது பிளாட். லினக்ஸ் மின்ட் fully furnished பிளாட்.
உபுன்டு சாதா மீல்ஸ். லினக்ஸ் மின்ட் ஸ்பெஷல் மீல்ஸ்.
உபுன்டு அழகான பெண். லினக்ஸ் மின்ட் மேக்கப் போட்ட அழகான பெண். 
சிலருக்கு உபுன்டு அருக்காணி. பலருக்கு லினக்ஸ் மின்ட் அழகுராணி.

லினக்ஸை முன்னே பின்னே தெரியாதவங்களுக்கு லினக்ஸை அறிமுகம் செய்யனும்னா, உபுன்டுவுக்கு பதிலா லினக்ஸ் மின்ட் சிடி தரமுடியுமான்னு பாருங்க!

உபுன்டு பயன்படுத்தும்போது, "குறிப்பிட்ட plug-in இன்ஸ்டால் செய்தால்தான் நீ இந்த பக்கத்தை முழுசா பார்க்க முடியும்"னு வலைப்பக்கங்கள் அவ்வப்போது வெறுப்பேத்தும்.

புதியவர்கள் உபுன்டுவில் இதையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று தெரியாமல் ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி முடியை பிய்த்துக்கொண்டு, உபுன்டுவை ஓசியிலே கொடுத்தாகூட வேண்டாம்யான்னு ஓட்டம் எடுப்பார்கள்.


எப்படி சேர்ப்பது என்று தெரிந்தால்கூட அதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு தேடி உபுன்டுவில் சேர்ப்பதற்கு சில பல மணி நேரம்கூட ஆகலாம். அதுக்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்குங்க?

அந்த அனுபவம் லினக்ஸ் மின்டில் குறைவு.

ஏனென்றால் Firefox உலவியில் நமக்கு தேவைப்படும் Realplayer, divx, quicktime, shockwave flash, லொட்டு லொசுக்கு, இத்யாதி இத்யாதி add-on-களை எல்லாம் மின்ட் முதலிலேயே சேர்த்து கொடுத்துவிடுகிறது. நேரம் மிச்சம்.


டிவிடி, எம்.பி3, இத்யாதி கணினியில் பயன்படுத்த எந்த இயங்குதளமாக இருந்தாலும் மல்டிமீடியா codec சப்போர்ட் தேவை.

சில சட்டசிக்கல்களால் உபுன்டு அதை சேர்த்து தருவதில்லை. ஆனால் அதை எல்லாம் சேர்த்து லினக்ஸ் மின்ட் தருகிறது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் லினக்ஸ் மின்ட் பயன்படுத்துவது சட்ட விரோதமாக இருக்கலாம்.

எதைப்போட்டாலும் play பண்ணும்னு ஒரு டிவிடி ப்ளேயர் விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். அந்த concept உபுன்டுவை விட லினக்ஸ் மின்டுக்கே பொருந்தும்.

எது எப்படியோ, லினக்ஸ் விரும்பும் புதியவர்களுக்கு லினக்ஸ் மின்ட் ஒரு வரப்பிரசாதம்தான்.

ஆனால் ஒரே ஒரு குறை என்னன்னா, உபுன்டு சிடி வீட்டுக்கு வருவது போல் லினக்ஸ் மின்ட் வராது.**

**இந்த கட்டுரை எழுதும்போது உபுன்டு சிடி இலவசமாக வந்தது. அதன்பின் சில காலம்  காலம் கழித்து அந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

லினக்ஸ் மின்டை டவுன்லோடு செய்ய ... http://www.linuxmint.com/download.php

அனைத்து உபுன்டு பதிவுகளையும் ஒரே பக்கத்தில் பார்க்க ubuntu - உபுன்டு tag கிளிக் செய்யவும்.

50 Comments:

இரா.குமரேசன் said...

நல்ல தகவல்,
அப்ப உபுண்டுவை விட மின்ட் தான் பெஸ்ட்.

சூர்யா ௧ண்ணன் said...

நண்பரே! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றீங்க .. சூப்பர் பயனுள்ள இடுகை..

suthanthira.co.cc said...

//சூர்யா ௧ண்ணன் said...நண்பரே! சூப்பர் பயனுள்ள இடுகை..//

நன்றி சூர்யா கண்ணன்.

suthanthira.co.cc said...

//KUMARESAN said...
அப்ப உபுண்டுவை விட மின்ட் தான் பெஸ்ட்.//

சந்தேகமே வேண்டாம். மின்ட்தான் பெஸ்ட்.

கிருஷ்ணா (Krishna) said...

//

லினக்ஸ் மின்ட் = 99% உபுன்டு + 1% எக்ஸ்ட்ரா

லினக்ஸ் மின்ட் = உபுன்டு ++

உபுன்டு வாழைப்பழம் - லினக்ஸ் மின்ட் உரித்த வாழைப்பழம்

உபுன்டு புது பிளாட். லினக்ஸ் மின்ட் fully furnished பிளாட்.

உபுன்டு சாதா மீல்ஸ். லினக்ஸ் மின்ட் ஸ்பெஷல் மீல்ஸ்.

உபுன்டு அழகான பெண். லினக்ஸ் மின்ட் மேக்கப் போட்ட அழகான பெண்.

சிலருக்கு உபுன்டு அருக்காணி. பலருக்கு லினக்ஸ் மின்ட் அழகுராணி.

//

Good Comparison.

இரா.கதிர்வேல் said...

சார் நல்ல பதிவு ,லினக்ஸ் மின்டைப் பற்றிய இந்த பதிவு அவசியமும் கூட ,
சார் நானும் புதிதாக லினக்ஸைப் பயன்படுத்த விரும்பும் என்னுடைய நண்பர்கள் நிறையப் பேருக்கு Linux Mint ஐ நிறுவிக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய Compaq 515 மாடல் மடிக்கணினுக்கு Linux Mint 5.0(Elyssa) தான் சரியாக இருக்கிறது.Linux Mint -ல் windows ல் நிறுவியிருக்கும் WiFi - Wireless Driver நிறுவிக்கொள்ளலாம்(WiFi டிரைவரை லினக்ஸ் மின்ட் நிறுவிக்கொள்ளவில்லையென்றால்).இது மடிகணினியில் WiFi வழியாக இணையத்தைப் பயன்படுத்தும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

CP said...

நல்ல ஒரு பயனுள்ள பதிவு நண்பரே!

suthanthira.co.cc said...

//இரா.கதிர்வேல் said...
சார் நல்ல பதிவு ,லினக்ஸ் மின்டைப் பற்றிய இந்த பதிவு அவசியமும் கூட ,//

நன்றி இரா. கதிர்வேல்.

suthanthira.co.cc said...

//CP said...
நல்ல ஒரு பயனுள்ள பதிவு நண்பரே!//

நன்றி CP. ஓட்டு போட்டதுக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள்.

suthanthira.co.cc said...

//கிருஷ்ணா (Krishna) said...
//
உபுன்டு சாதா மீல்ஸ். லினக்ஸ் மின்ட் ஸ்பெஷல் மீல்ஸ்.
//

Good Comparison.

நன்றி கிருஷ்ணா!

Lucky Limat லக்கி லிமட் said...

தலைவா,
மின்ட் torrent டவுன்லோட் இல்லையா? இதையும் ட்ரை பண்ண வேண்டியது தான். தகவலுக்கு நன்றி தலைவா

ந.ர.செ. ராஜ்குமார் said...

நான்கு வருடங்களுக்கு முன்பு இலவசமாய் வீடுதேடி வந்த உபுண்டு லினக்சை என் கணினியில் பல முறை நிறுவ முயற்சித்து ஏமாறியிருக்கிறேன். இருந்தும் Fedora, Suse, Mandrake, PCQ Linux, FreeBSD போன்றவற்றை நிறுவி சோதித்துப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதியில் நண்பர் அறிமுகம் செய்து வைத்த Mint மற்றும் Sabayon லினக்ஸ் அடேயப்பா!.
லினக்சின் பெருமைகளையும் அதிலுள்ள பல்சுவை வகைகளையும் பின்னூட்டத்தில் சொல்லிவிட முடியாது, தனி காவியம்தான் எழுத வேண்டும்.

suthanthira.co.cc said...

//ந.ர.செ. ராஜ்குமார் said...
லினக்சின் பெருமைகளையும் அதிலுள்ள பல்சுவை வகைகளையும் பின்னூட்டத்தில் சொல்லிவிட முடியாது, தனி காவியம்தான் எழுத வேண்டும்//

உடனே எழுதுங்கள். நன்றி.

கிரி said...

உபுண்டு பயன்படுத்துபவர்கள் உங்கள் பதிவை படித்தால் கண்டிப்பாக மின்ட் நிறுவி விடுவார்கள் :-)

Ramkumar s said...

super os also a remastered version of ubuntu like linux mint which can be downloaded from
http://hacktolive.org/wiki/Super_OS

suthanthira.co.cc said...

//Lucky Limat லக்கி லிமட் said...தலைவா,
மின்ட் torrent டவுன்லோட் இல்லையா? இதையும் ட்ரை பண்ண வேண்டியது தான்.//

torrent டவுன்லோட் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.
நன்றி லக்கி லிமட்.

Arumugam said...

நான் சமீப காலமாக உபுண்டு பற்றி மற்றவர்களிடம் எடுத்துக் கூறிவருகிறேன். அதோடு அதை தமிழிலேயே இயக்குகிறேன். தாய்மொழியை ஆதரிப்போம்.

சந்திரசேகரன் said...

ஐயா தங்களுடைய வலைப்பூவையை பார்த்த பின்னர் தான் நானும் தங்களைப்போல லினக்ஸ் சார்ந்த வலைப்பூவை எழுத வேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றியது,தங்கள் வலைப்பூவையில் எழுதும் ஒவ்வொரு பதிப்புகளும் அருமையாக இருக்கிறது!

suthanthira.co.cc said...

//கிரி said...
உபுண்டு பயன்படுத்துபவர்கள் உங்கள் பதிவை படித்தால் கண்டிப்பாக மின்ட் நிறுவி விடுவார்கள் :-)//

இந்தப்பதிவின் நோக்கம் நிறைவேறினால் சரி.

நன்றி கிரி.

suthanthira.co.cc said...

//Chandrasekaran said...
ஐயா தங்களுடைய வலைப்பூவையை பார்த்த பின்னர் தான் நானும் தங்களைப்போல லினக்ஸ் சார்ந்த வலைப்பூவை எழுத வேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றியது,//

ஆசைதீர எழுதுங்கள். நாட்டை காப்பாற்றுவோம்.
நன்றி.

suthanthira.co.cc said...

//Arumugam said...
நான் சமீப காலமாக உபுண்டு பற்றி மற்றவர்களிடம் எடுத்துக் கூறிவருகிறேன். அதோடு அதை தமிழிலேயே இயக்குகிறேன். தாய்மொழியை ஆதரிப்போம்.//

நாம் அனைவரும் சேர்ந்து இதை ஒரு இயக்கமாகவே மாற்றுவோம். நன்றி.

suthanthira.co.cc said...

//Ramkumar s said...
super os also a remastered version of ubuntu like linux mint which can be downloaded from
http://hacktolive.org/wiki/Super_OS//

நாம் அனைவரும் உபுன்டு மற்றும் லினக்ஸ் மின்ட் பயன்படுத்துதை standardize செய்துவிட்டால் ஒருவருக்கு ஒருவர் உதவுவது எளிது. லினக்ஸ் மின்டில் பல அனுகூலங்கள் உள்ளன.

sapp said...

நன்றி
லினக்ஸ் மின்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்வது எப்படி. அதை நிறுவுது பற்றி கூறுங்களோன்

suthanthira.co.cc said...

//sapp said...நன்றி லினக்ஸ் மின்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்வது எப்படி. அதை நிறுவுது பற்றி கூறுங்களோ//

எனக்கு ஓய்வு நேரம் குறைவாக இருக்கிறது. முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

ஜெயந்தி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

இரா.கதிர்வேல் said...

//sapp said...
லினக்ஸ் மின்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்வது எப்படி. அதை நிறுவுது பற்றி கூறுங்களோன் //

Linux Mint நிறுவுவது எப்படி என்று மணிகண்டன் அவர்கள் தமிழில் pdf கோப்பாக கொடுத்துள்ளார்.இங்கு (http://kaniniariviyal.blogspot.com/p/redhat-linux-redhat-pdf.html)சென்று தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சந்திரசேகரன் said...

எனது வலைப்பூவையை எழுத ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை அதற்குள் எனது வலைப்பூவின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வளரந்துள்ளது,இந்த வளர்சிக்கு காரணமாக அமைந்த உங்கள் முயற்சிக்கு நன்றி!நன்றி!நன்றி

பொன்மலர் said...

nice post abt ubuntu and mint

suthanthira.co.cc said...

//பொன்மலர் said...
nice post abt ubuntu and mint//

நன்றி பொன்மலர்.

suthanthira.co.cc said...

//சந்திரசேகரன் said...
எனது வலைப்பூவையை எழுத ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை அதற்குள் எனது வலைப்பூவின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வளரந்துள்ளது,இந்த வளர்சிக்கு காரணமாக அமைந்த உங்கள் முயற்சிக்கு நன்றி!//

மகிழ்ச்சி. ஆனால் அதே ஞாபகமாக இருந்து படிப்பை/உடல்நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

suthanthira.co.cc said...

//இரா.கதிர்வேல் said...Linux Mint நிறுவுவது எப்படி என்று மணிகண்டன் அவர்கள் தமிழில் pdf கோப்பாக கொடுத்துள்ளார்//

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி கதிர்வேல்.

suthanthira.co.cc said...

//ஜெயந்தி said...
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html//

நன்றி ஜெயந்தி.

Jayadeva said...

அன்புடையீர், சமீபத்தில் நான் லினக்ஸ் மின்ட் [Linux Mint] எனது கணினியில் நிறுவியுள்ளேன், சூப்பர் ஜெட் வேகம், அழகு, அற்புதம், சொல்ல வார்த்தைகளே இல்லை. உபுண்டு நிறுவினாலும், எதைஎதையோ எங்கெங்கோ தேடிக் கண்டுபிடித்து சேர்த்தாலும், திருப்தியில்லை, லினக்ஸ் மின்ட் மனத் திருதியைக் கொடுத்துள்ளது. என்னைப் போன்ற புதியவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம். தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் நற்ப் பணி தொடரட்டும். K. ஜெயதேவா தாஸ்.

suthanthira.co.cc said...

//Jayadeva said...
அன்புடையீர், சமீபத்தில் நான் லினக்ஸ் மின்ட் [Linux Mint] எனது கணினியில் நிறுவியுள்ளேன், சூப்பர் ஜெட் வேகம், அழகு, அற்புதம், சொல்ல வார்த்தைகளே இல்லை//

நன்றி ஜெயதேவா. எனக்கும் மகிழ்ச்சிதான்.

தமிழில் தகவல் தொழில் நுட்பம் said...

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

rasaiashok said...

அற்புதமான பதிவு

suthanthira.co.cc said...

//rasaiashok said...
அற்புதமான பதிவு//

நன்றி ராசையாஅசோக்.

vino said...

http://1.bp.blogspot.com/_3yKXxlqIqCY/S_N-t8nsbiI/AAAAAAAAA1A/vY8Kg5kXlxY/s320/linux-mint-gloria+suthanthira+ilavasa+menporul.jpg

sexy!!

vino said...

Any official torrent available for Linux Mint?

suthanthira.co.cc said...

//vino said... Any official torrent available for Linux Mint? //

எனக்கு torrent பற்றி தெரியாது. மன்னிக்கவும்.

suthanthira.co.cc said...

//vino said...
http://1.bp.blogspot.com/_3yKXxlqIqCY/S_N-t8nsbiI/AAAAAAAAA1A/vY8Kg5kXlxY/s320/linux-mint-gloria+suthanthira+ilavasa+menporul.jpg

sexy!!

இப்போதாவது மின்ட் பயன்படுத்த விருப்பமா?

Jayadeva said...

தலைவா,

வணக்கம், ஒரு மகிழ்ச்சியான செய்தி! எங்கள் அலுவலகத்தில் எங்கள் GM முடைய -[Top Boss!]-புது கணினியில் லினக்ஸ் மின்ட் இன்று நிறுவிவிட்டேன். [Dell system, 2 GB RAM, Core 2 Duo Processor, 320 GB Hard Disk, Windows 7 Pre-Installed, Not used fresh PC]. எடுதுக்கய்யா, இந்த புது கணினியை, நான் உன்னை நம்புறேன், என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கோன்னு நம்பி குடுத்தாரு. அரை மணி நேரத்துல மின்ட் நிறுவிக் கொடுத்தேன்.மிண்டோட இயக்கத்த பத்து அசந்துட்டாரு. Boss-க்கு மிக்க சந்தோஷம், மன நிறைவு.

எங்க அலுவலக நண்பர்கள் இன்னும் இரண்டு பேர் வீட்டுல மின்ட் நிறுவிக் கொடுத்திருக்கேன். ஆனா ஒருத்தன், OSD [Obsessive Compulsive disorder]-ல கஷ்டப் படுறவன், தன்னையே நம்பாதவன், போட்ட கையெழுத்தே தன்னுடையதா, சரியா போட்டிருக்கேனான்னு ஒரு மணி நேரம் செக் பண்ணுவான். அந்த கிராதகன், இன்னும் நம்ப மாட்டேங்கிறான், கணினிக்கு வெளியே Flash Drive-வுல வச்சி இயக்கட்டுமான்னு இன்னும் கேட்டுகிட்டே இருக்கான், வைரஸ் உண்டாக்குற Windows-ஐ கணினியில நிருவியிருக்குற, ஆனா வைரஸ் எதுவுமே வராம இருக்குற லினக்சை கணினிக்கு வெளியே வச்சு இயக்குறேன்னு சொல்லுறியே, என்னடா உன்னோட Logic-குன்னு காரி மூஞ்சிட்டு, ஒளிஞ்சுபோடா நாயின்னு சொல்லிட்டேன்.

PUGAZH said...

sir,
i have download linux mint- 9 32bit version, and write it as iso image in a dvd. when i try to install it or use it as a live cd a message appears " kernal image has an error". can i repair this iso image? or any free linux mint 9 dvd is available? please help me. i like to install linux mint 9 in sun oracle virtual box as guest OS. thank you. My E-mail id is jdonhcdm@yahoo.com

Anonymous said...

//vino said... Any official torrent available for Linux Mint?//

இதோ

http://www.linuxmint.com/torrent/linuxmint-9-gnome-cd-i386.iso.torrent

Anonymous said...

// Jayadeva said... வைரஸ் உண்டாக்குற Windows-ஐ கணினியில நிருவியிருக்குற, ஆனா வைரஸ் எதுவுமே வராம இருக்குற லினக்சை கணினிக்கு வெளியே வச்சு இயக்குறேன்னு சொல்லுறியே, என்னடா உன்னோட Logic//

ஹா ஹா ஹா

Anonymous said...

//PUGAZH said...can i repair this iso image?//

உங்களுக்கு எப்படி சரி செய்வது என்று மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.

//any free linux mint 9 dvd is available//

நான் ஒரு சிடி அனுப்பி வைக்கிறேன். தொடர்பு கொள்ளவும். நன்றி.

Thiagarajan said...

Good Comparison, I am a linux Mint fan for the past few years. i also prefer puppy linux,

PAATTIVAITHIYAM said...

I have installed linux mint. I cannot use nhm writer for tamil unicode. How to use tamil bamini unicode in linux mint. Please help

Menporul Prabhu said...

Please install ibus and ibus-m17. logout first and login again. now load ibus. from there you can select tamil input methods.contact email for further details. menporul.prabhu@gmail.com

PRAKASH said...

உபுண்டு அல்லது லினக்ஸ் மின்ட் நிறுவினால் அதில் டொங்கிள் மூலம் இணையம் இணைப்பு ஏற்படுத்த முடியுமா?, என்னுடைய கணணி பெரும்பாலும் இணையம் மூலம் தகவல் தொடர்புகளிற்கு தான் பயன்படுத்தி வருகின்றேன். பேஸ்புக் மெசஞ்சர், ஸ்கைப் போன்றவை உபுண்டு, லினக்ஸ் மின்ட் இயங்குதளங்களில் இயக்க முடியுமா?. வெப்கம் இயக்க முடியுமா? இப்படி நிறைய சந்தேகங்கள் இருக்கு. ஏற்கெனெவே உபுண்டுவை இரட்டை இயங்குதளங்களாக நிறுவினேன். ஆனால் அதில் டொங்கிள் மூலம் இணைய தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் அகற்றி விட்டேன். தயவு செய்து விளக்கம் தரவும் நண்பரே.

back to top