04 June, 2010

ATM-ல் தமிழைத் தொடுவோம்!


நாம் கோவிலுக்கு தினமும் போகிறோமோ இல்லையோ, ஏ.டி.எம்முக்கு அடிக்கடி போவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறோம். நாலைந்து பேர் வரிசையில் இருந்தால் முடிந்தவரை என் வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு அடுத்த ஆளுக்கு வழி விடுவதிலேயே கவனம் இருக்கும். இதனாலேயே பலமுறை திரையில் தமிழ் இருந்தாலும், ஆங்கிலத்திலேயே வேலையை முடித்துவிடுவேன்.

தற்செயலாக இதைப்பற்றி ஒரு கருத்து என் மனதில் வந்தது. தமிழ் எனது தாய்மொழியாக இருந்தும் ஏன் நான் ஆங்கிலத்தை பயன்படுத்தி பணம் எடுக்கிறேன். தமிழை திரையில் தொட்டு பணம் எடுக்க ஏன் தயக்கம் என்று?

ஆங்கிலம் சரியாக தெரியாதவர்கள் வேறுவழி இல்லாமல் தமிழைத் தொட்டுதான் பணம் எடுக்கவேண்டும். தமிழில் வலைப்பூ எழுதும் நானே ஆங்கிலத்தை பயன்படுத்துகிறேனே என்று வெட்கப்பட்டேன். தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட ஆங்கிலத்தை பயன்படுத்தி பணம் எடுக்கிறார்களே என்று மனவேதனைப்பட்டேன்.

பிறகு பழக்கவழக்கத்தில் சிலமுறை ஆங்கிலத்தை தொட்டுவிட்டாலும், இப்போது அதிகபட்சம் தமிழை மட்டுமே திரையில் தொட்டு பணம் எடுக்கிறேன்.

ஆரம்பத்திலேயே தமிழ் ஏ.டி.எம்மில் இருந்திருக்குமா என்றால் சந்தேகமே. யாரோ போராடி தமிழை ஏ.டி.எம்மிற்கு கொண்டு வந்து இருப்பார்கள். அப்படி போராடி வந்திருக்கக்கூடிய தமிழை உதாசீனப்படுத்துவது நமக்கு அழகா?

ஏ.டி.எம்மில் ஆங்கிலம் மட்டும் இருந்தால் பரவாயில்லை. ஏ.டி.எம்மில் தமிழ் இருக்குமாம். ஆனால் பயன்படுத்த மாட்டார்களாம்.

இப்போது இருக்கும் தமிழைக்கூட யாரும் பயன்படுத்தவில்லை என்று ஏ.டி.எம்மில் இருந்து தமிழை எடுத்துவிட்டால், என்ன செய்வார்கள்? அப்போதுதான் மானமே போச்சுன்னு பதிவுமேல் பதிவு எழுதி குவித்து தமிலிஷில் நூறு ஓட்டு வாங்கி, தவறு நம்மேல் இருக்க, யார்யாரையோ காறித்துப்பி "கடமை"யை செய்த திருப்தி அடைவார்களா?

கடந்த 50 வருடங்களாக தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. டெலிபோன், செல்போன், மொபைல், டிவி, வீடியோ, டிஷ் டிவி, கம்ப்யூட்டர், ஐபோட், கரண்ட், பஸ், டிக்கட், எஸ்.எம்.எஸ் இப்படி பல ஆங்கில வார்த்தைகள் நமது நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவது தமிழனுக்கு சாதாரணமாக போய்விட்டது.

சுமார் 5000 வருடங்களாக தழைத்து வளர்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மொழிக்கு வேறெந்த காலகட்டத்திலும் இவ்வாறு கடுமையான சோதனை வந்ததில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் புதிய தொழில்நுட்பத்தில் உருவானவையாக இருப்பதால், அதற்கு தமிழ் சொற்களை பயன்படுத்தாமல்/ உருவாக்காமல் நேரடியாகவே அந்த ஆங்கில சொற்களை பயன்படுத்தி தமிழுக்கு துரோகம் செய்து வருகிறோம்.

நாம் இப்போது பிறமொழி சொற்களை கலந்துபேசி தமிழை வேகமாகவே அழித்துக்கொண்டு இருப்பதுபோல், இதுவரை வாழ்ந்த எந்த தலைமுறை தமிழர்களும் செய்திருக்கமுடியாது.

இப்போதே தமிழுக்கு இந்த நிலைமை என்றால் அடுத்தடுத்த தலைமுறையில் தமிழை எப்படி பேசப்போகிறார்கள் என்று நினைத்தாலே உயிர் போகிறது.

பத்து மாதம் சுமந்த தாயை மறக்கக்கூடாது. பத்து வருடம் படித்த பள்ளியை மறக்கக்கூடாது என்று சொல்வார்கள்.

தாய் தந்தை மட்டும் இல்லை. நம் பாட்டன், முப்பாட்டன் என்று ஐயாயிரம் வருடங்களாக நமது முன்னோர்களின் நல்லது, கெட்டது, மகிழ்ச்சி, கோபம், ஆசை, பாசம், காதல், காமம் இப்படி அனைத்து உணர்ச்சிகளுக்கும் மொழி வடிவம் கொடுத்து பாராட்டி சீராட்டி வந்த தாய்மொழி தமிழை நன்றி கெட்டு இப்படி மொழிக்கொலை செய்கிறோமே என்று நம்மில் ஒருவராவது, ஒரு கணமாவது மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு தலைகுனிந்து இருக்கிறோமா? தாய்மொழிக்கு துரோகம் செய்பவனை மனிதனாக நினைக்கமுடியுமா?

யாரோ ஒருவர் பொது இடத்தில் தமிழ் மட்டுமே பேசவேண்டும் என்று முயற்சி செய்தால்கூட, அந்த முயற்சியை கிண்டல் செய்யும் கூட்டம் ஒன்று எங்கிருந்தோ கூடிவிடும். இதில் என்ன கேவலம் என்றால் அவர்கள் அனைவருக்கு தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும். தயவு செய்து அந்த தாய்மொழி துரோக கூட்டத்தில் சேர்ந்துவிடாதீர்கள். அவர்களுக்கு சுத்தத் தமிழிலேயே கண்டனம் செய்யுங்கள்.

ஆங்கிலத்தை கலந்துபேசி தமிழை அழிக்க ஆரம்பித்தது இந்த தலைமுறைதான் என்ற அவப்பெயர் நமக்கு தேவையா?

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு கட்டுரை.

49 Comments:

சிவா (கல்பாவி) said...

இதுவரை நான் இது குறித்து யோசித்தது இல்லை இனிமேல் முயற்ச்சிசெய்கின்றேன். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

CP said...

//ஏ.டி.எம்மில் இருந்து தமிழை எடுத்துவிட்டால், என்ன செய்வார்கள்? அப்போதுதான் மானமே போச்சுன்னு பதிவுமேல் பதிவு எழுதி குவித்து தமிலிஷில் நூறு ஓட்டு வாங்கி, தவறு நம்மேல் இருக்க, யார்யாரையோ காறித்துப்பி "கடமை"யை செய்த திருப்தி அடைவார்களா?//

நீங்கள் கூறியது நூத்துக்கு நூறு சரி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக அருமையான பதிவு சாய்தாசன். நானும் யோசித்ததில்லை. இந்தியா வரும் பொழுது பயன்படுத்துகிறேன்.

suthanthira.co.cc said...

//சிவா (கல்பாவி) said...
இதுவரை நான் இது குறித்து யோசித்தது இல்லை இனிமேல் முயற்ச்சிசெய்கின்றேன். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.//

நன்றி சிவா.

suthanthira.co.cc said...

//ச.செந்தில்வேலன் said...
மிக அருமையான பதிவு சாய்தாசன். நானும் யோசித்ததில்லை. இந்தியா வரும் பொழுது பயன்படுத்துகிறேன்.//

நன்றி செந்தில்வேலன்.

suthanthira.co.cc said...

//CP said...

நீங்கள் கூறியது நூத்துக்கு நூறு சரி!//

ஆமாம் சின்னப்பையன். ஏதாவது ஒன்றை இழந்தபிறகுதான் அதன் அருமை தெரியும்.

Santhappan சாந்தப்பன் said...

நானும் யோசித்ததில்லை. இனிமேல் கட்டாயமாக!

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கம் said...

நானும் தங்களைப்போன்று தமிழ் பற்றுள்ளவன் என்றாலும் இதுவரை ஓரிரு முறைதான் தமிழைப் பயன்படுத்தியுள்ளேன். தங்களது இடுகை என்போன்றோரை வெட்கி தலைகுனிய செய்கிறது. இனி கண்டிப்பாக நானும் எங்களது சங்கத்தை சார்ந்தவர்களும் பணபட்டுவாடா இயந்திரத்தை தமிழிலேயே பயன்படுத்துவோம். நன்றி.

ஜிஎஸ்ஆர் said...

அவசியமான பதிவு நண்பா

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

இரா.கதிர்வேல் said...

நெத்தியடி பதிவு சார்,இனிமேலாவது ATM -ல் தமிழைப்பயன்படுத்துவோம்.தமிழனே தமிழ் மொழியினை ATM-ல் பயன்படுத்தாவிட்டால் வேறு யாரு பயன்படுத்தப்போகிறார்கள்.இதுபோல் தமிழர்கள் அனைவரும் தமிழிலேயே கையெப்பமிடுவோம்.

suthanthira.co.cc said...

//சாந்தப்பன் said...
நானும் யோசித்ததில்லை. இனிமேல் கட்டாயமாக!//

நன்றி சாந்தப்பன். கட்டாயம்தான், காலத்தில் கட்டாயம்.

suthanthira.co.cc said...

//திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கம் said... இனி கண்டிப்பாக நானும் எங்களது சங்கத்தை சார்ந்தவர்களும் பணபட்டுவாடா இயந்திரத்தை தமிழிலேயே பயன்படுத்துவோம். நன்றி.//

இந்த பதிவின் நோக்கம் அதுதானே. நன்றி.

suthanthira.co.cc said...

//ஜிஎஸ்ஆர் said...
அவசியமான பதிவு நண்பா ஞானசேகர்//

நன்றி ஞானசேகர்.

suthanthira.co.cc said...

//இரா.கதிர்வேல் said...இதுபோல் தமிழர்கள் அனைவரும் தமிழிலேயே கையெப்பமிடுவோம்.//

நல்ல யோசனை. இதை வலியுறுத்தி நீங்களே ஒரு பதிவு போடுங்களேன்.

இரா.கதிர்வேல் said...

//இதை வலியுறுத்தி நீங்களே ஒரு பதிவு போடுங்களேன்.//
முயற்சி செய்கிறேன் சார்

Anonymous said...

மனதில் பதிந்த பதிவாக இடம்பிடிக்கிறது @
http://www.sinhacity.com/

கிரி said...

ஷிர்டி சாய்தாசன் கலக்கிட்டீங்க! இதை நான் யோசிக்கவே இல்லை. தமிழை பயன்படுத்த சிரமமாக இருந்ததால்!!! அப்படியே விட்டு விட்டேன் .. இனி முயற்சிக்கிறேன்.. கூடுமானவரை தற்போது ஆங்கில கலப்பை குறைத்துக்கொண்டு உள்ளேன்.. பார்ப்போம்.

நீங்க சீக்ரெட் பாலோயர் முதல்ல சொன்ன மாதிரி ATM தமிழ் பற்றி கூறி அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள் :-)

suthanthira.co.cc said...

கிரி said... கூடுமானவரை தற்போது ஆங்கில கலப்பை குறைத்துக்கொண்டு உள்ளேன்..//

நான்கூட மின்னஞ்சலை ஆங்கிலத்தில் எழுதுவதை மாற்ற வேண்டும்.

கருத்துக்கு நன்றி.

Anonymous said...

தமிழ்  பயன்பாடு குறைவாக இருந்தால் , 
ATM-ல் இருந்து நீக்கபடலாம்.

MANIKANDAN said...

லினக்ஸ் மின்ட் க்கு நன்றி சார் !

மார்கண்டேயன் said...

அன்புடையீர்,
ATM இந்த வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன ?,
ATM center - தானியங்கி பண சேவையகம்,
ATM - தானியங்கி பண சேவை
இதை எழுதாமல் விட்டிருக்கிறீர்கள், உங்கள் மேல் தவறில்லை . . . குறை சொல்வதும் நோக்கமில்லை, இன்றைய நடைமுறை அப்படி, பிற மொழி கலக்காமல் தமிழை பேசவே முடியாது என்ற அறியாமை தான் . . . முயன்று பார்ப்பது சிலரே . . . நீங்கள் முன்வந்திருப்பதனால் கணினி தொழிநுட்பத்தில் பயன்படுத்தப்படும் பதங்களுக்கும் நிகரான தமிழ் சொற்களை வழங்கினால் நன்று . . .
காத்திருக்கிறேன் . .

மார்கண்டேயன் said...

அருமையான தகவல் தொகுப்புகள் . . . மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . . . தொடருங்கள் உங்கள் இணைய சேவையை

suthanthira.co.cc said...

//Anonymous said...
மனதில் பதிந்த பதிவாக இடம்பிடிக்கிறது @
http://www.sinhacity.com//

நன்றி.

suthanthira.co.cc said...

//Anonymous said...
தமிழ் பயன்பாடு குறைவாக இருந்தால் ,
ATM-ல் இருந்து நீக்கப்படலாம்.//

அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.
நன்றி.

suthanthira.co.cc said...

//MANIKANDAN said...
லினக்ஸ் மின்ட் க்கு நன்றி சார் !//

சுட்டி கொடுத்ததை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

suthanthira.co.cc said...

//மார்கண்டேயன் said...
அருமையான தகவல் தொகுப்புகள் . . . மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . . . தொடருங்கள் உங்கள் இணைய சேவையை//

நன்றி மார்கண்டேயன்.

suthanthira.co.cc said...

//மார்கண்டேயன் said...ATM இந்த வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன ?, ATM center - தானியங்கி பண சேவையகம், ATM - தானியங்கி பண சேவை//

நன்றாக இருக்கிறதே. பணமரம் என்றுகூட அழைக்கலாம். நன்றி.

suthanthira.co.cc said...

//மார்கண்டேயன் said...கணினி தொழிநுட்பத்தில் பயன்படுத்தப்படும் பதங்களுக்கும் நிகரான தமிழ் சொற்களை வழங்கினால் நன்று . . . காத்திருக்கிறேன் ..//

ஒன்றிரண்டு வார்த்தைகளை கண்டறிந்து வைத்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது அறிவிக்கிறேன்.

நன்றி.

suthanthira.co.cc said...

////மார்கண்டேயன் said...
ATM இந்த வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன ?,
இதை எழுதாமல் விட்டிருக்கிறீர்கள் //

அதையும் தமிழிலேயே எழுதி இருக்கலாம். ஆனால் நிறைய பேர் சுத்தத் தமிழை பார்த்து, படிக்காமல் ஓடிவிடுவார்கள். நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது. அதனால்தான் தவிர்த்துவிட்டேன்.

arulmozhi r said...

நன்றி. நல்ல பதிவு. sbi customer care தொலைபேசியில் பேசினால் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள்.கிராமபுற பகுதியில் இருக்கும் பெரும்பாலான மக்கள் atmல் தமிழை உபயோகபடுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் atm உபயோகப்படுத்துகிறார்கள். எனவே தமிழை எடுத்துவிடுவார்கள் என்ற பயம் வேண்டாம். ஆனால் atm இயங்குவது windows serverல் தான். indian bank atmகளிலும் இந்த விண்டோஸை பயன்படுத்துகிறார்கள்.

Saran R said...

//////////////////////////////////
இப்போது இருக்கும் தமிழைக்கூட யாரும் பயன்படுத்தவில்லை என்று ஏ.டி.எம்மில் இருந்து தமிழை எடுத்துவிட்டால்
///////////////////////////////

சரியாக சொன்னீர்கள்...

suthanthira.co.cc said...

//arulmozhi r said...
நல்ல பதிவு. //

நன்றி அருள்மொழி.

suthanthira.co.cc said...

//Saran R said...சரியாக சொன்னீர்கள்...//

நன்றி சரன்.

Anonymous said...

Thank you for your message. I don't know how type in Tamil. When ever I am using ATM in India I am Using Tamil. But I never thing to tell my friends to do the same. Now I copy your message and your web link to my friends. This is my Acknowledge.

Vimalan

suthanthira.co.cc said...

//Vimalan said...Thank you for your message. //

நன்றி விமலன்.

Anonymous said...

கணினி கவசம்

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

Anonymous said...

//Anonymous said...கணினி கவசம் //

சாமி பாட்டை இப்படி ரீமிக்ஸ் செய்து இருக்கவேண்டாம். எவ்வளவோ வேறு பாடல்கள் இருக்கின்றனவே.

சரவணன்.D said...

//ATM-ல் தமிழை தொடுவோம்//
மிக தாமதமாக படிக்கிறேன் நல்ல பதிவு சார்! நான் ATM-ல் ஆரம்பத்திலிருந்து தமிழையே பயன்படுத்துகிறேன் சார்.
மற்றவர்களும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன் நன்றி சார்.

arun said...

உண்மையிலேயே உன்னதமான கட்டுரை. பிறமொழி அறிந்த உங்களைப் போன்ற தமிழர்கள் கூறினால்தான் அரைகுறை அறிந்த தமிழ் ஆங்கிலேயர்கள் நன்கு உணர்வார்கள். என்போன்ற எளியோர் கூறினால் எடுபடாது (தமிழாசிரியர்கள்)நான் தற்செயலாக உங்கள் கட்டுரையைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி. கணிணி தொடர்பான கட்டுரைகளை (தமிழில் ஆங்கில தமிழ்க் கலைச்சொற்களுடன்) வரவேற்கின்றேன்.

நிர்மல் said...

இழுத்து வைத்து செவிட்டில் அறைந்தது போன்ற உங்கள் பதிவை வரவேற்கிறேன் ... இனி தமிழிலேயே பணம் எடுக்கிறேன் நண்பரே ....

நன்றி

புருனோ Bruno said...

//கடந்த 50 வருடங்களாக தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.

டெலிபோன் -தொலைபேசி
செல்போன், மொபைல், - செல்லிடப்பேசி, சுருக்கமாக செல்பேசி
டிவி - தொலைக்காட்சி,
வீடியோ - கானொளி,
டிஷ் டிவி - வட்டு தொலைக்காட்சி,
கம்ப்யூட்டர் - கணிப்பொறி - சுருக்கமாக கணினி, ஐபோட் - இது வர்த்தக பெயர், இதை மாற்ற வேண்டாம்,
கரண்ட் - மின்சாரம்,
பஸ் - பேரூந்து,
டிக்கட் - பயணச்சீட்டு,
எஸ்.எம்.எஸ் - குறுஞ்செய்தி

இப்படி பல ஆங்கில வார்த்தைகள் நமது நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவது தமிழனுக்கு சாதாரணமாக போய்விட்டது.

--

புருனோ Bruno said...

இது தவிர

ஜிமெயில், ப்ளாக்கர் போன்ற சேவைகளை பயன்படுத்தும்போது தமிழ் இடைமுகத்தை (interface) பயன் படுத்த வேண்டும்

Settings - Language சென்று மாற்றிக்கொள்ளலாம்

புருனோ Bruno said...

அப்புறம்

தா.ப.வ

தானியங்கி பணம் வழங்கி தெரியுமா

எனது 2009 இடுகையை பாருங்கள் :) :)தானியங்கி பணம் வழங்கியில் ஏமாறாமல் இருக்க இந்த இடுகையை பாருங்கள் :) :)

புருனோ Bruno said...

தானியங்கி பணம் வழங்கி - Automated Teller Machine - ATM
செலவட்டை - Debit Card
கடனட்டை - Credit Card
தொடர் படவில்லை / படவில்லைத்தொகுப்பு / வில்லைக்காட்சி - slide show

யோவ் said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

பலே பாண்டியா said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

sariyana sattai adi

guru said...

நானும் இதுவரை தமிழை ஏடிஎம்மில் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தேன்..ஏனென்றால் நான் இதுவரை தமிழை பயன்படுத்துவதில் கெளரவம் பார்த்து வந்தேன்..
நன்றாக உரைக்கும் படி சொல்லியிருக்கிறீர்கள்..
இனிமேல் தமிழை பயன்படுத்த முயற்சிக்கிறேன்...

ஆளுங்க (AALUNGA) said...

எனக்குத் தெரிந்து 2008 இல் இருந்து தான் தானியக்க வங்கி இயந்திரம் (ATM) தமிழில் உரையாடத் துவங்கியது..

அன்றிலிருந்து இன்று வரை (இருந்தால்) தமிழில் தான் அதனைப் பயன்படுத்துகிறேன்.

இதன் மூலம் அடிக்கடி என் நண்பர்களின் கேலிப்பேச்சுக்கு ஆளாவது வழக்கம்.. ஆனால், அதனைப் பொருட்படுத்துவது இல்லை..

ஒரு சந்தேகம்.... SBT, SBM போன்ற வங்கிகளின் தமிழக கிளைகளிலும் தமிழைச் சேர்ப்பது இல்லை.. இது ஏனோ??

back to top