பிறந்த குழந்தைக்கு ஒரு முறைதானே பெயர்சூட்டுவிழா நடத்தமுடியும். ஆனால் உபுன்டுவுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பெயர்சூட்டுவிழா நடத்தி சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு உபுன்டு ரிலீசுக்கும் செல்லப்பேர் வைப்பது அதிகம் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகவே மாறி வருகிறது
இப்பதான் உபுன்டு 10.04 (லூசிட் லிங்க்ஸ்- Lucid Lynx) வந்தாமாதிரி இருக்கு.
அதற்கு அடுத்த உபுன்டு 10.10-க்கு 'மாவெரிக் மீர்கேட்'னு (Maverick Meerkat) எப்பவோ பேர் வைத்து 10.10.10 அன்று (அதாங்க 10 அக்டோபர் 2010) ரிலீஸ் செய்யலாமான்னு யோசித்துக்கொண்டு இருக்காங்க. (நல்லாத்தான் யோசிக்கறாய்ங்க!)
அதுக்குள்ளே உபுன்டு 11.04க்கு செல்லப்பேர் வைத்துவிட்டார்கள். என்ன தெரியுமா?
Natty Narwahl (நாட்டி நர்வால்).
(11.04 = 2011-வது வருடம், 4-ஆவது மாதம்)
நர்வால் ஆர்டிக் துருவத்தில் வாழும் ஒரு திமிங்கலம். யானைக்கு தந்தம் இருப்பதுபோல் இதற்கும் முகத்தில் ஒரு தந்தம் இருக்கும்.
அதைக் கேட்காமலேயே 'நர்வால்' பேரை வச்சா அது பங்கு கேட்டு வரவோபோகுது?
என்னை கேட்டா Naughty Namitha (நாட்டி நமீதா)-னு பேர் வெச்சிருந்தா ரொம்ப டக்கரா இருந்திருக்கும்.
உபுன்டு இன்னும் இளமையா Teenage-லதான் இருக்கு. ஏன்னா நாட்டி நர்வால் அதனோட 14-வது ரிலீஸ்.
நாட்டி நர்வால் ஒரு non-LTS ரிலீஸ். அதாவது அது ரிலீஸ் ஆகும் தேதியிலிருந்து 18 மாதங்களுக்குத்தான் சாஃப்ட்வேர் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ் தருவாங்க.
.

12 Comments:
Thanks for your Info. I am using 10.04 Netbook remix edition.
I installed my Ubuntu Netbook remix 10.04 in my SD memory card (8GB). It is running rapid fast compared to my previous Windows 7 HDD installation.
thanks again
by
TS
////என்னை கேட்டா Naughty Namitha-னு பேர் வெச்சிருந்தா ரொம்ப டக்கரா இருந்திருக்கும்.///
நான் வழிமொழிகிறேன்.. :-P
உபுண்டு அசத்தலை தொடர்ந்து ஒரு அருமையான தகவல் சார் !
உபுண்டு வெளியீடுகளுக்கு வைக்கப் படும் பெயர்கள் பற்றி ஒரு சுவராஸ்யமான செய்தி கேள்விப் பட்டேன். ஒவ்வொரு வெளியீடுட்டுக்கும் [release] ஒரு மிருகத்தின் பெயர் [NAME], பெயர் உரிச் சொல்லோடு [adjective] சேர்த்து வைக்கப் படும் அகர வரிசையில் வைக்கப் படுமாம். [முதல் இரண்டு வெளியீடுகள் மட்டும் விதி விலக்கு!] இதைப் படித்த போது அடடே இதைக் கவனிக்கவே இல்லையே என்று வியப்பாய் இருந்தது. அடுத்த வெளியீடுகளுக்கு O,P,Q ...ETC., போன்ற எழுத்துகளில் பெயர் வைக்கும் போது Microsoft பயன்படுத்திய பெயர்கள் பயன்படுத்தபடாது தவிர்க்கப் படும் என்றும் தெரிகிறது. மேலும் இந்த மிருங்கள் பறவைகள் அத்தனையும் பார்க்க கீழ் கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.
http://www.ubuntu-how-to.com/2010/04/ubuntu-family-tree-version-release.html
//TechShankar said...
Thanks for your Info//
நன்றி TechShankar.
//sethupathy said...////என்னை கேட்டா Naughty Namitha-னு பேர் வெச்சிருந்தா ரொம்ப டக்கரா இருந்திருக்கும்.///
நான் வழிமொழிகிறேன்.. :-P//
நன்றி சேதுபதி. எனக்கு முதலில் அதுதான் முதலில் தோன்றியது.
//MANIKANDAN said...
உபுண்டு அசத்தலை தொடர்ந்து ஒரு அருமையான தகவல் சார் !//
நன்றி மணிகண்டன்.
//Jayadeva said...உபுண்டு வெளியீடுகளுக்கு வைக்கப் படும் பெயர்கள் பற்றி ஒரு சுவராஸ்யமான செய்தி கேள்விப் பட்டேன். இதைப் படித்த போது அடடே இதைக் கவனிக்கவே இல்லையே என்று வியப்பாய் இருந்தது. //
இதைப் பற்றி நான் முன்பே எழுதிவிட்டேன். என் முந்தைய பதிவுகளையும் படியுங்கள். அப்போதுதான் நான் அடுத்தடுத்து எழுதப்போவதை புரிந்துகொள்ளமுடியும். நன்றி.
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/2009/07/910_6530.html
மிகவும் பயனுள்ள தொழில்நுட்ப தகவல்கள் நண்பரே...! உபுண்டு பற்றிய தகவல்களை தங்கள் மூலம் அதிகம் அறிந்துகொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி..!
நன்றி பிரவின்குமார்.
நன்றி.
Good News By S.Krishna
//krishnakumar said...Good News //
நன்றி கிருஷ்ணகுமார்.
Post a Comment