06 September, 2010

உபுன்டுவில் suspend/hibernate கீ disable செய்வது எப்படி?


Note: Applicable only to classic Gnome Version 2.x

தொலைபேசி அழைப்பு வந்ததே என்று கணினியில் இருந்து எழுந்துபோய் பேசிவிட்டு வருவதற்குள், உங்கள் சுட்டியான குட்டிப் பாப்பா நாற்காலிமேல் ஏறி கீபோர்டில் இரண்டு கைகளாலும் தாளம்போடும்போது, தெரியாமல் suspend/ hibernate/ power கீயை தொட்டு கணினியை தூங்கவைத்துவிடுகிறதா?

அப்படியானால் பாப்பா மேல் கோபப்படாமல், அந்த கீகளை உபுன்டு லினக்ஸில் செயலிழக்கச் செய்ய/ செயல்படும் விதத்தை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உபுன்டு லினக்ஸ் டெஸ்க்டாப்பில் இருந்து Alt + F2 கீகளை ஒரே நேரத்தில் சேர்த்து இயக்கவும். Run Application விண்டோ வரும்.


அதில் gconf-editor என்று டைப் செய்து Run பட்டன் கிளிக் செய்யவும்.


Configuration Editor விண்டோ திறக்கும்.


அதில் Apps > Gnome-Power-Manager > Buttons வரை கிளிக் செய்து சென்றால் இந்த விண்டோ வரும்.


வலது பக்கத்தில் இருக்கும் கட்டத்தில் (Pane) இருக்கும் ஒவ்வொரு என்ட்ரியையும் கிளிக் செய்யும்போது அதன் Key Documentation கீழே இருக்கும் கட்டத்தில் இப்படி தெரியும். (The action to take when the system suspend button is pressed. Possible values are "suspend", "hibernate", "interactive", "shutdown" and "nothing".)


உதாரணத்திற்கு, suspend கீயை செயலிழக்க வைக்க முதலில் அந்த என்ட்ரியை Name column-மில் கிளிக் செய்து செலக்ட் செய்துவிட்டு, வலது பக்கத்தில் இருக்கும் value column-மில் இருக்கும் அதற்குரிய என்டிரியை டபுள் கிளிக் செய்து nothing என்று டைப் செய்து மாற்றி சேமிக்கவும்.


இப்படி..


Configuration Editor விண்டோவை உடனே மூடிவிடலாம். ஏனென்றால் தனியாக save ஆப்ஷன் கிடையாது. ரீஸ்டார்ட் கூட செய்யத்தேவையில்லை. தைரியமாக இப்போது suspend கீயை அழுத்திப்பார்த்தால் கணினி தூங்காது.

Suspend/hibernate அழுத்திய பிறகு என்ன செய்வது என்று கணினி நம்மை கேட்கவேண்டும் என்றால், interactive செட் செய்யவும். அப்போது கணினி இப்படி கேட்கும்.


லேப்டாப்பை மூடும்போது அது ஏசி மின்சாரத்தில் ஓடிக்கொண்டு இருந்தால் என்ன செய்யவேண்டும் ? பேட்டரியில் ஓடிக்கொண்டு இருந்தால் என்ன செய்யவேண்டும்? என்பதையும் நாம் இந்த வழியில் செட் செய்துகொள்ளலாம் (Possible values are "suspend", "hibernate", "blank", and "nothing").

"என் புருஷனே இன்னும் குழந்தையாத்தான் இருக்காருங்க. அவரும் இந்தமாதிரி எதனா செஞ்சிடுராரு" என்று சலித்துக்கொள்ளும் மனைவிகளுக்கும் இந்த கட்டுரை உதவும்.

.

27 Comments:

வடுவூர் குமார் said...

க‌டைசி குத்து தான் சூப்ப‌ர்.

MANIKANDAN said...

இது பயன் உள்ள தகவல் சார் !

சூர்யா ௧ண்ணன் said...

//அலெக்ஸா ரேங்க் 1 லட்சத்தை உடைத்தெறிந்த மாவீரர் சூர்யா கண்ணனுக்கு வாழ்த்துகள்!//

ஆஹா! மிக்க நன்றி நண்பரே!

MANIKANDAN said...

helpful information to me

Jayadeva said...

தெரியாமத்தான் கேட்கிறேன், இந்த Lock Screen-ஐப் போட்டுட்டா, திரும்ப வந்து போட்டாத்தானே திறக்கும்? குழந்தை என்ன பண்ணுனாலும் ஒன்னும் ஆகாதுதானே? அது சுலபம் இல்லியா?

suthanthira-ilavasa-menporul.com said...

//வடுவூர் குமார் said...க‌டைசி குத்து தான் சூப்ப‌ர்.//

நன்றி வடுவூர் குமார். இது எல்லா வீட்டிலேயும் நடப்பதுதானே.

suthanthira-ilavasa-menporul.com said...

//MANIKANDAN said...இது பயன் உள்ள தகவல் சார் !//

நன்றி மணிகண்டன்.

suthanthira-ilavasa-menporul.com said...

//சூர்யா ௧ண்ணன் said...//அலெக்ஸா ரேங்க் 1 லட்சத்தை உடைத்தெறிந்த மாவீரர் சூர்யா கண்ணனுக்கு வாழ்த்துகள்!// ஆஹா! மிக்க நன்றி நண்பரே!//

You deserve it!.

suthanthira-ilavasa-menporul.com said...

//Jayadeva said...தெரியாமத்தான் கேட்கிறேன், இந்த Lock Screen-ஐப் போட்டுட்டா, திரும்ப வந்து போட்டாத்தானே திறக்கும்? குழந்தை என்ன பண்ணுனாலும் ஒன்னும் ஆகாதுதானே? அது சுலபம் இல்லியா?//

ஆமாம்! ஆனா எனக்கு அந்த சமயத்திலே பல்ப் எரியனுமே?!

Rajkumar said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

சிங்கக்குட்டி said...

பகிர்வுக்கு நன்றி :-)

Saba said...

உங்கள் தகவல்களுக்கு நன்றி.
எனக்கு இரண்டு தகவல்கள் வேண்டும்.
1. உபுண்டு லுசிட் லினக்ஸ்ல் ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ ஃபைல்களை சேர்ப்பது எப்படி?
2. வீடியோ சாட் செய்வது எப்படி?

உதவி செய்யவும்.
நன்றி
சபா

சரவணன்.D said...

என்னை போன்ற லினக்ஸ் பயன்படுத்துவோற்கு இது மிகவும் பயனுள்ள தகவல் சார்!
நன்றி...

suthanthira-ilavasa-menporul.com said...

//கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது//

நன்றி ராஜ்குமார். எனக்கு நேரம் கிடைக்கும்போது இதை ஆராய்கிறேன். நன்றி.

suthanthira-ilavasa-menporul.com said...

//சிங்கக்குட்டி said...பகிர்வுக்கு நன்றி :-)
//

நன்றி சிங்கக்குட்டி.

suthanthira-ilavasa-menporul.com said...

//சரவணன்.D said...லினக்ஸ் பயன்படுத்துவோற்கு இது மிகவும் பயனுள்ள தகவல் சார்! நன்றி...//

நன்றி சரவணன்.

suthanthira-ilavasa-menporul.com said...

//Saba said 1. உபுண்டு லுசிட் லினக்ஸ்ல் ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ ஃபைல்களை சேர்ப்பது எப்படி? 2. வீடியோ சாட் செய்வது எப்படி?//

திரு. சபா அவர்களே. இதை ubuntuintamil.blogspot.com -ல் கேட்கவும். எனக்கு சரியாக தெரியாது.

ந.ர.செ. ராஜ்குமார் said...

//non-tech பதிவுகளை தானாக நீக்கும் வரை டாப்டென் வராது அல்லது அவர்களை சேர்க்கப்போவதில்லை.

உங்கள் வலைபதிவின் ஹைலைட்டை நிறுத்தப் போகிறீர்களா? வருத்தமாக இருக்கிறது.

suthanthira-ilavasa-menporul.com said...

//உங்கள் வலைபதிவின் ஹைலைட்டை நிறுத்தப் போகிறீர்களா? வருத்தமாக இருக்கிறது. //

Non-tech சேர்த்து எழுதினால் சூர்யா கண்ணன், வேலன், பிகேபி இப்படி யார் இருந்தாலும் என் தரவரிசையில் சேர்க்கமாட்டேன். சேர்த்தால் அர்த்தம் இல்லாமல் போய்விடும். இது நிச்சயம்.

suthanthira-ilavasa-menporul.com said...

//ந.ர.செ. ராஜ்குமார் said...வருத்தமாக இருக்கிறது.//

நீங்களாவது non-tech சேர்த்து எழுதாமல் இருக்க வேண்டுகிறேன்.

sethupathy said...

@saba

video chat செய்ய...
http://www.skype.com/intl/en/get-skype/on-your-computer/linux/post-download/

இங்கு சென்று 32bit ubuntu அல்லது 64bit ubuntu உங்களுடையது எதுவோ... அதன் மீது சொடுக்கித் தரவிறக்கிக் கொள்ளவும். (பொதுவாக அனைவருமே 32bit தான் பயன்படுதிதுகிறோம்)

பின்னர் தரவிறக்கப்பட்ட கோப்பின் மீது இருமுறை சொடுக்கி, install package என்பதன் மீது சொடுக்கவும்.
gtalk பயன்படுத்த..


///video fileகளை சேர்க்க///
பிரிக்கப்பட்ட fileகளை சேர்க்க
சாதரணமாக இரண்டு video fileகளை சேர்ப்பது பற்றித் தெரியவில்லை sorry... ஆனால் Avidemuxல் முயற்சித்துப் பார்க்கலாம்.

sethupathy said...

டாப் டென் வாராதா??????????

indliக்குப் பிறகு, எனது வலைபூவிற்கு அதிக நபர்கள் வருவது உங்கள் வலைபூ ranklistல் இருந்து தான்...
மூலம்:- blogger stats...

Jayadeva said...

தற்போது GMail-ல் இருந்தே Test Chat, Voice chat & Video Chat எல்லாம் செய்ய முடியுமே, முயன்று பாருங்களேன்!

Jayadeva said...

//தற்போது GMail-ல் இருந்தே Text Chat, Voice chat & Video Chat எல்லாம் செய்ய முடியுமே, முயன்று பாருங்களேன்!//
[பிழைக்கு மன்னிக்கவும்!] மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.


http://www.google.com/chat/video

suthanthira-ilavasa-menporul.com said...

ஜீமெயில் பற்றிய உங்கள் பதிலுக்கு நன்றி திரு.ஜெயதேவா.

suthanthira-ilavasa-menporul.com said...

//sethupathy said... டாப் டென் வாராதா??????????//

அனைவரையும் தொடர்புகொண்டு நிலைமையை சரிப்படுத்த முயற்சி செய்கிறேன். வரும் வாய்ப்பு அதிகம். நீங்களும் non-tech பதிவு எழுதாமல் இருங்களேன். நன்றி.

suthanthira-ilavasa-menporul.com said...

திரு. சேதுபதிக்கு நன்றி - இத்தள வாசகரின் ஐயத்தை தீர்த்து வைத்ததற்கு.

back to top