22 October, 2010

நல்ல, கெட்ட, விநோத IT செய்திகள்!

 
ஏலத்துக்கு வந்த Sex.com டொமைன் பெயர் சுமார் $13 மில்லியன் டாலருக்கு விலைபோயுள்ளது.


அக்டோபர் 22 2010 அன்று தன் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விண்டோஸ் 7, இதுவரை சுமார் 240 மில்லியன் காப்பிகள் விற்றுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.


இன்டெர்நெட் செக்யூரிட்டி & ஆன்டிவைரஸ் மென்பொருள் தயாரிக்கும் காஸ்பெர்ஸ்கி லேபின் வெப்சைட் ஹேக் செய்யப்பட்டு, போலி ஆன்ட்வைரஸ் டவுன்லோடு செய்யுமாறு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்த மூன்றரை மணி நேரத்திற்குப்பிறகுதான் இப்படி நடந்துள்ளது என்று காஸ்பெர்ஸ்கிக்கு தெரியவந்ததாம்.  போலீஸ் வீட்லேயே திருட்டா?!


ஆறு வாரங்களுக்கு ஒருமுறை புது வெர்ஷன் வரும் என்று கூகிள் சொல்லி (மிரட்டி?!) இருப்பதாக தெரிகிறது.

இந்த குரோம் தொல்லை தாங்க முடியலே நாராயணா.


2010 வருடம் முடியும்போது  சுமார் 2 பில்லியன் பயனர்கள் இன்டெர்நெட்டை பயன்படுத்துவார்கள் என்று இன்டெர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியன் (ITU) மதிப்பிட்டுள்ளது. அதாவது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு!


யாரு அதிக GHz சிப் போடுறாங்கன்னு இருந்த போட்டி, இப்போ யாரு அதிக Core போடுறாங்கன்னு மாறிஇருக்கு. இந்த போட்டி  ரொம்ப நாளுக்கு நீடிக்காதுன்னு இன்டெலின் எதிரி No.1 AMD சொல்லி இருக்கு. எதிர்காலத்தில் எத்தனை கோர் என்பதைவிட எவ்வளவு efficient என்பதில்தான் போட்டி இருக்குமாம். அப்படி போடு.


கூகிளின் ஆன்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெர்ஷன் 4-க்கு Ice Cream என்று Codename வைத்து இருக்கிறார்களாம். முந்தைய Codenameகள்

Version 1.5       Cupcake,
Version 1.6       Donut,
Version 2.0/2.1 Eclair,
Version 2.2       Froyo (Frozen Yogurt)
Version 3.0       Gingerbread
Version 3.5       Honeycomb
Version 4.0       Ice Creamதென்கொரியா 2012-ஆம் வருடத்திற்குள், தனது மக்களுக்கு 1000 Mbps ( 1 Gbps) வேகமுள்ள ப்ராட்பேண்ட் இணைப்புதர உத்தேசித்துள்ளது. அந்த வேகத்தில் 700 MB உபுன்டு சிடியை ஆறே நொடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம்.


குறைஞ்ச செலவுலே ஒரு செல்போன் பேக்கேஜ் ( voice, text, data) வாங்கறதா இருந்தா எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கு போட்டு பார்த்ததில், அது அமெரிக்கா, கனடாவில் மிக அதிக விலையாகவும், இந்தியா, ஹாங்காங்கில் மிக மலிவாகவும் கிடைப்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

மிஸ்ட் கால் பேக்கேஜ்தான் எல்லா நாட்டுக்கும் ஒரே ரேட்!


இவ்வளவு நாள் extension (add-on) வசதி இல்லாமல் வந்துகொண்டு இருந்த ஓபெரா (Opera) உலவி, அதன் அடுத்த வெர்ஷன் 11-லிருந்து அவற்றை சப்போர்ட் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது.


கூகிள் ஆன்ட்ராய்டுக்கான அடோபி ஃபிளாஷ் பிளேயர் இதுவரை 1 மில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டு இருப்பதாக ZDNet.com மதிப்பிட்டுள்ளது.

24 Comments:

Jayadeva said...

//Version 1.5 Cupcake,
Version 1.6 Donut,
Version 2.0/2.1 Eclair,
Version 2.2 Froyo (Frozen Yogurt)
Version 3.0 Gingerbread
Version 3.5 Honeycomb
Version 4.0 Ice Cream//

சாப்பாட்டு ராமன்களுக்கு Appealing-ஆக இருக்கும் பேரா தெரியுதே!

//அந்த வேகத்தில் 700 MB உபுன்டு சிடியை ஆறே நொடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம்.// தரவிறக்கம் செய்யும் கணினி வேகம் மட்டுமே இந்த நேரத்தை முடிவு செய்யுமா? Server கணினியின் வேகம் ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டாமா? [உதாரணத்துக்கு, எவ்வளவு வேகமான கணினி இணைப்பு இருந்தாலும், IRCTC இணைய தளம் காலை 8:00 AM முதல் 9:00 AM வரை திறப்பதே இல்லையே!!]

Abdul Basith said...

அனைத்தும் படித்திராத செய்திகள். பயனுள்ளதாகவும் இருந்தது. உங்கள் உழைப்புக்கு நன்றி சார்..!

சரவணன்.D said...

Good Post Thanks Sir....

கிரி said...

காஸ்பெர்ஸ்கி லேபின் செம காமெடி! :-)

க்ரோம் னா சும்மாவா!

இப்படிக்கு க்ரோம் சிங்கப்பூர் ரசிகர் மன்றம் :-)

ஸ்ரீ.... said...

தேவையான செய்திகளை சுவையாகத் தந்திருக்கிறீர்கள் நண்பரே!

ஸ்ரீ....

Lucky Limat லக்கி லிமட் said...

அருமையான தகவல்கள் நண்பரே...

Anonymous said...

.nandri solla varthai illaamal thavikkum, ungal rasikanul oruvan !

Anonymous said...

//Jayadeva said... Version 4.0 Ice Cream// சாப்பாட்டு ராமன்களுக்கு Appealing-ஆக இருக்கும் பேரா தெரியுதே!//

சரியா சொன்னீங்க. நான்கூட பிரியாணிராமன்தான்.

பிரவின்குமார் said...

மிகவும் சுவாரஸ்யமான மற்றும் புதுமையான தகவல்கள் நண்பரே..!

Anonymous said...

////அந்த வேகத்தில் 700 MB உபுன்டு சிடியை ஆறே நொடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம்.// தரவிறக்கம் செய்யும் கணினி வேகம் மட்டுமே இந்த நேரத்தை முடிவு செய்யுமா? //

கனினியின் அதிக வேகம் மட்டுமே உதவாது.

//Server கணினியின் வேகம் ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டாமா? //

Server கணினி, ISP கணினி, நெட்வொர்க் வேகம், modem வேகம், Peak traffic time இப்படி நிறைய ifs and buts இருக்கின்றன. நான் சொன்னது theoretical maximum.

//[உதாரணத்துக்கு, எவ்வளவு வேகமான கணினி இணைப்பு இருந்தாலும், IRCTC இணைய தளம் காலை 8:00 AM முதல் 9:00 AM வரை திறப்பதே இல்லையே!!] //

இதற்கு அவர்கள்தான் சரியான பதில் சொல்லமுடியும்.

Anonymous said...

//Abdul Basith said...அனைத்தும் படித்திராத செய்திகள். பயனுள்ளதாகவும் இருந்தது.//

நன்றி Abdul Basith.

// உங்கள் உழைப்புக்கு நன்றி சார்..!//

என் தூக்கம் போச்சே...:'(

Anonymous said...

//சரவணன்.D said... Good Post Thanks Sir....//

நன்றி சரவணன்.

Anonymous said...

//கிரி said... காஸ்பெர்ஸ்கி லேபின் செம காமெடி! :-) //

அப்ப விண்டோஸ்?

//க்ரோம் னா சும்மாவா! இப்படிக்கு க்ரோம் சிங்கப்பூர் ரசிகர் மன்றம் :-)//

குரோமில் பல பிரச்சனைகள் இருப்பதாக கருதுகிறேன். எனக்கு பயர்பாக்ஸ்தான் சரிப்படும். இப்படிக்கு

சுதந்திர பயர்பாக்ஸ் அகில உலக தமிழர் ரசிகர் மன்றம்.

Anonymous said...

நன்றி கிரி.

Anonymous said...

//ஸ்ரீ.... said... தேவையான செய்திகளை சுவையாகத் தந்திருக்கிறீர்கள் நண்பரே! ஸ்ரீ....//

நன்றி ஸ்ரீ.

Anonymous said...

//Lucky Limat லக்கி லிமட் said... அருமையான தகவல்கள் நண்பரே...//

நன்றி லக்கி லிமட்.

Anonymous said...

//Anonymous said... .nandri solla varthai illaamal thavikkum, ungal rasikanul oruvan ! (நன்றி சொல்ல வார்த்தை இல்லாமல் தவிக்கும் உங்கள் ரசிகனுள் ஒருவன்) //

நன்றி பெயரிலி.

கிரி said...

//குரோமில் பல பிரச்சனைகள் இருப்பதாக கருதுகிறேன். எனக்கு பயர்பாக்ஸ்தான் சரிப்படும். இப்படிக்கு

சுதந்திர பயர்பாக்ஸ் அகில உலக தமிழர் ரசிகர் மன்றம்//

உங்க ஃபயர்பாக்சை எங்க க்ரோம் விரைவில் மிஞ்சப்போகிறது பாத்துட்டே இருங்கள் :-) ஏற்கனவே என்னோட Google Analytics ல் ஃபயர்பாக்சை க்ரோம் வேகமாக நெருங்கி கொண்டு இருக்கிறது ;-)

விரைவில் க்ரோம் தான் உலவியில் பட்டையை கிளப்பப்போகிறது.

இரா.கதிர்வேல் said...

சுவையான தகவல்

MANIKANDAN said...

அடேங்கப்பா ! அந்த டப்பா os , சுமார் 240 மில்லியன் காப்பியா !

Abdul Basith said...

//குரோமில் பல பிரச்சனைகள் இருப்பதாக கருதுகிறேன். எனக்கு பயர்பாக்ஸ்தான் சரிப்படும்.//

எனக்கும் தான். க்ரோமை விட ஃபயர்பாக்ஸில் இணைய பக்கங்கள் எளிதில் load ஆகிறது. நான் இணைய தொடர்புக்கு பயன்படுத்துவது ஏர்செல் Gprs.

//சுதந்திர பயர்பாக்ஸ் அகில உலக தமிழர் ரசிகர் மன்றம்.//

நானும் ஒருவன்.

//கிரி said...
என்னோட Google Analytics ல் ஃபயர்பாக்சை க்ரோம் வேகமாக நெருங்கி கொண்டு இருக்கிறது//

என்னுடையதில் ஃபயர்ஃபாக்ஸ் 44% - க்ரோம் 25%

A.Hari said...

Hi prabhu,

Great collection of news.BTW, I have samsung galaxy phone with Version 2.0/2.1 Eclair. It is really amazing experience.

Nice to know that u are going to post frequently.

A.Hari

ம.தி.சுதா said...

அருமையான தகவல்கள்...

Rajkumar Ravi said...

//சுதந்திர பயர்பாக்ஸ் அகில உலக தமிழர் ரசிகர் மன்றம்...
அடியேனும் அன்பு உடன்பிறப்பு (ர.ர)
ஆண்ட்ராய்ட் செய்திகள் மனம் கவர்ந்தது. இனம் இனத்துடன்தானே சேரும்.

back to top