27 October, 2010

XP-க்கு ஆப்பு! இது நாட்டாமை தீர்ப்பு!! + கூடுதல் I.T செய்திகள்


மைக்ரோசாஃப்ட் விண்டோசின் அடுத்த ரிலீஸ் "விண்டோஸ் 8" 2012-ஆம் வருடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் 7 2009-ல் வந்தது. அதை வைத்து பார்த்தால், இனிமேல் சுமார் மூன்று/நான்கு  வருடங்களுக்கு ஒரு முறை புது விண்டோஸ் ரிலீஸ் செய்ய மைக்ரோசாப்ட் திட்டம் போட்டு உள்ளதாக தெரிகிறது.

விண்டோஸில் எட்டு போட்டு மைக்ரோசாஃப்ட் ஷொட்டு வாங்குமா? குட்டு வாங்குமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


XP-க்கு ஆப்பு. இது நாட்டாமை தீர்ப்பு.

இனிமேல் விண்டோஸ் XP-யை புது கணினியோடு pre-install செய்து விற்கக்கூடாது என்று மைக்ரோசாப்ட் கணினி தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக சொல்லிவிட்டது.  விஸ்டாவில் இருந்த பல பிரச்சனைகளால், மைக்ரோசாப்ட் XP-யை அப்படியே விட்டுவைத்திருந்தது.


விண்டோஸ் 7தான் வரலாற்றிலேயே அதிக வேகமாக விற்பனையாகும் ஆபரேடிங் சிஸ்டம் என்று பெயர் வாங்கியுள்ளது.

ஒரு நொடிக்கு 7½ லைசென்ஸ்கள் விற்பனை ஆகிறது என்று, வேறு உருப்படியான வேலை இல்லாதவர்கள் கணக்கு போட்டு சொல்லி இருக்கிறார்கள். 

பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ் வந்து  7½ பிடிக்காமல் இருந்தால் சரி.


சீகேட் உலகின் முதல்  3 TB (External) ஹார்ட் டிஸ்க்கை விற்பனைக் கொண்டுவந்துவிட்டது. TB என்றால் Terabyte. இதில் 120 High Definition சினிமா படங்கள் அல்லது 1500 வீடியோ கேம்களையும் சேமித்து வைக்க முடியும்.


கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு 12 வயசு பையன் அலெக்ஸ் மில்லர்,  ஃபயர்பாக்சில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டுபிடித்து மொசில்லா பெளண்டேஷனிடமிருந்து 3000 டாலர் வெகுமதி வாங்கிவிட்டான். நம்ம பசங்களும் இருக்காங்களே!


லேட்டஸ்டாக ஆப்பிள் வெளியிட்ட மேக்புக் ஏர்  கணினிகளில்  வழக்கமாக சேர்க்கப்படும் அடோபி ஃபிளாஷ் மென்பொருள் இல்லை.  ஆனால் மேக்கில் அடோபி ஃபிளாஷ் வேலை செய்வதை ஆப்பிள் தடுக்கவில்லை. அதனால் மேக் பயனர்கள் தாங்களாகவே ஃபிளாஷை டவுன்லோடு செய்து நிறுவிக்கொள்ளலாம்.


சுமார் 8.3 சதவீதம் சந்தை பங்கு உள்ள மேக் ஓஸ் X ஆபரேடிங் சிஸ்டத்தின் அடுத்த வெர்ஷன் 10.7 "Lion" என்று பெயரிடப்பட்டுள்ளது.

Mac OS X-ன் அனைத்து வெர்ஷன்களின் பெயர் பின்வருமாறு:

 10.0 Cheetah
 10.1 Puma
 10.2 Jaguar
 10.3 Panther
 10.4 Tiger
 10.5 Leopard
 10.6 Snow Leopard
 10.7 Lion


.

12 Comments:

Tamil Blog said...

சார். நான் Mandriva Linux பயன்படுத்திவந்தேன். இப்போது அக்கம்பெனியை விற்றுவிட்டதாக கூறுகிறார்களே. இனி இலவசமாக மன்ட்ரீவா லினக்ஸ் கிடைக்குமா? வழிசொல்லவும். நன்றி.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் சுவாரஸ்யமான மற்றும் வியக்கவைக்கும் கணினி செய்திகள் அருமை நண்பரே..!! நிறைய தகவல்கள் தங்கள் மூலம் அறிய முடிகிறது. பகிர்வுக்கு நன்றி..!

Jayadeva said...

//XP-க்கு ஆப்பு. இது நாட்டாமை தீர்ப்பு.// என்னுடைய நண்பர்கள் சிலர் Windows 7 நிறுவிப்
பார்த்துவிட்டு விட்டு பின்னர் Windows Xp-கே திரும்ப ஓடிவிட்டனர். ஏன் என்று விசாரித்ததில் Xp-ல் நன்றாக வேலை செய்த AutoCAD போன்ற
மென்பொருட்கள் Windows 7-ல் ஓட வில்லையாம். மேலும் Windows 7 வேகம் குறைவாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அலெக்ஸ் மில்லர், ஃபயர்பாக்சில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டுபிடித்து விட்டான். மாட்டிய ஓட்டை ஒன்று, இன்னும் மாட்டாமல் இருக்கும் ஓட்டைகள் எத்தனையோ தெரியலையே!

TechShankar said...

Cool Post. I bought 2 TB seagate portable hard disk this week. But now seagate released 3 TB.. Ooops! I missed the chance one more time.

Abdul Basith said...

மீண்டும்.. இல்லையில்லை... எப்பொழுதும் போல பயனுள்ள தகவல் சார்...

//Jayadeva said...

Xp-ல் நன்றாக வேலை செய்த AutoCAD போன்ற
மென்பொருட்கள் Windows 7-ல் ஓட வில்லையாம். மேலும் Windows 7 வேகம் குறைவாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.//

நானும் கேள்விப்பட்டேன்.. நான் Windows 7 தான் பயன்படுத்துகிறேன். என்னுடைய லேப்டாப்பில் 3D Max கூட வேலை செய்கிறது. வேகமும் நன்றாகத் தான் உள்ளது. எனக்கு இப்பொழுது XP-யைவிட Windows 7 தான் பிடித்திருக்கிறது.

//அலெக்ஸ் மில்லர், ஃபயர்பாக்சில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டுபிடித்து விட்டான். //

அமெரிக்காவில் இது சாதாரணம். அதற்கு காரணம் அவர்கள் வளரும் சூழ்நிலை..

சரவணன்.D said...

GOOD POST THANKS Mr.PRABHU SIR..

Lucky Limat லக்கி லிமட் said...

இது போன்ற தகவல்களை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்

சசிகுமார் said...

thanks

Rajkumar Ravi said...

//ஒரு நொடிக்கு 7½ லைசென்ஸ்கள் விற்பனை ஆகிறது...
அது அவர்களின் வியாபார உக்தியைக் காட்டுகிறது. அவரவர்க்கு பிடித்த இயக்கச்சூழலை பயன்படுத்த வேண்டியதுதான். இதில் தவறென்ன இருக்கிறது. ஐபோனில் பயன்படுத்தப்படும் ஐ-ஓஎஸ் டெஸ்க்டாப் லினக்ஸ் சந்தையைவிட அதிகம். சர்வரில் லினக்சை அடித்துக் கொள்ள முடியாது.
//ஜெயதேவா சொன்னது..மாட்டிய ஓட்டை ஒன்று, இன்னும் மாட்டாமல் இருக்கும் ஓட்டைகள் எத்தனையோ தெரியலையே!
அப்படியில்லை நண்பரே, திறமூல மென்பொருள் உருவாக்கத்தில் பிழைகள் வெளிப்படையாகத் தெரியும், உடனே களையப்பட்டு விடும். இதைவிட பெரிய பிழை காப்புரிமை மென்பொருளில் இருந்தாலும், அதை மூடிமறைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

தங்கம்பழனி said...

நிறைய தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்த்து. வாழ்த்துக்கள் நண்பரே..!

cheena (சீனா) said...

அன்பின் பிரபு - அரிய தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MANOJ N said...

usefull................. thanks....

back to top