ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் உபுன்டு லினக்ஸ், சுமார் 2 வருடங்களுக்கு ஒரு முறை LTS (Long Term Support) ரிலீஸாக வெளிவரும். ஒவ்வொரு முறையும் சர்வர், டெஸ்க்டாப் என்று இரண்டு எடிஷன்கள் கண்டிப்பாக உண்டு.
அதாவது 3 ரிலீஸ்கள் தொடர்ந்து Non-LTS-ஆக வெளிவந்தால் நான்காவது ரிலீஸ் LTS ஆக வெளிவரும்.
LTS என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ள
அந்த வகையில் அடுத்த 12.04 ரிலீஸ் LTS ரிலீஸாக வரப்போகிறது. அதற்கு 'ப்ரெசிஸ் பாங்கோலின்' (Precise Pangolin) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். பாங்கோலின் என்றால் எறும்புத்தின்னி என்று நினைக்கிறேன்.
இது உபுன்டுவின் 16-ஆவது ரிலீஸ்.
இது உபுன்டுவின் நான்காவது LTS ரிலீஸ். இதற்குமுன் 6.06, 8.04, 10.04 ரிலீஸ்கள் LTS-ஆக வெளிவந்தன. (உதாரணமாக 10.04 என்றால் 2010வது வருடம், 04வது மாதம் என்று அர்த்தம்).
உபுன்டு LTS என்றாலே இதுவரை சர்வர் எடிஷனுக்கு 5 வருடங்களும், டெஸ்க்டாப் எடிஷனுக்கு 3 வருடங்களும் சப்போர்ட் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த LTS வெர்ஷனில் இவ்விரண்டு எடிஷன்களுக்கும் 5 வருடங்கள் சப்போர்ட் கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
இதனால் கணினிகளை நிர்வகிப்பவர்களுக்கு வேலை குறையும். 5 வருடங்களுக்கு ஒருமுறை பயன்படுத்துபவர்களுக்கு பயிற்சி கொடுத்தால் போதும். மேலும் டெஸ்க்டாப் வெர்ஷனுக்கு மென்பொருள் தயாரிப்பவர்கள் 3 வருடத்திற்கு ஒரு முறை சப்போர்ட் உள்ள வெர்ஷனுக்கு மாறத் தேவையில்லை.
ஆனால் இதில் ஒரு விஷயம் இருக்கிறது. முதல் 2 வருடங்களுக்குத்தான் சந்தையில் புதிதாக வரும் வன்பொருட்களூக்கு சப்போர்ட் தருவார்கள். அப்புறம் கிடையாது. அப்படின்னா 2 வருடங்களுக்கு பிறகு சந்தையில் அறிமுகமாகும் புதிய வன்பொருட்களுக்கு இந்த ரிலீஸ் ஆதரவு தராது. ஆனால் 5 வருடங்களுக்கும் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு சப்போர்ட் கிடைக்கும்.
இப்போது இருக்கும் வன்பொருளிலேயே கணினியை இயக்குபவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகும் தாராளமாக அதே கணினியை ஓட்டுக்கொள்ளலாம். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அறிமுகமாகும் புதிய வன்பொருள் உள்ள கணினிக்கு மாறினால் அடுத்த/அப்போதைய LTS-தான் பயன்படுத்த வேண்டி இருக்கும்.
LTS ரிலீஸ் என்றால்கூட உபுன்டு இலவசம்தான்.
Picture attribution Piekfrosch
http://en.wikipedia.org/wiki/File:Pangolin_borneo.jpg

18 Comments:
nalla thakaval.. kerelaavil upandu thaan.. ellaa pallikalilum..!
புது கம்பியூட்டர் வந்தா 12.04 ஓடாதா?
//Jayadev Das said... புது கம்பியூட்டர் வந்தா 12.04 ஓடாதா?//
புதுப்புது வன்பொருட்களுக்கு டிவைஸ் டிரைவர் ரெடி செய்து சரியாக வேலை செய்கிறதா? என்பதைப் பார்ப்பதற்கே ரொம்ப சிரமப்படவேண்டும். 14.04 வரை இது சம்பந்தமான பிரச்சனை இல்லை. அதற்கு அப்புறம்தான் பிரச்சனை.
Thanks for info
நண்பரே நான் p4 processor 1.5gp ram 3.03ghz intel motherboard என்னுடைய pc உள்ளது ,நான் ubuntu 11.04 install
செய்து உள்ளேன் ,அதில் cllasic no effect மட்டும் வேலை செய்கிறது . மற்ற ஆப்சன் வேலை செய்வதில்லை ஏன் ?
லினக்ஸ் மின்ட் இன்ஸ்டால் செய்தல் ஸ்க்ரீன் ப்ளிக்க்ரிங் ஆகிறது எதனால் என்று கூறவும் .
நன்றி
ராமசந்திரன்
நன்றி @ மதுரை சரவணன், பொன்மலர்.
@ ramachandran
உங்கள் கணினியில் தனியாக கிராபிக் கார்டு உள்ளதா?
இல்லையென்றால் மதர்போர்டில் உள்ள கிராபிக் கார்டையே இயங்குதளம் பயன்படுத்திக்கொள்ளும்.
உபுன்டு 11.04ல் உள்ள யூனிட்டி இன்டெர்பேசுக்கு கிராபிக் கார்டு ஓரளவு லேட்டஸ்டாகவும் வலிமை வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் மதர்போர்டு கிராபிக் கார்டுக்கு தேவையான பவர் இல்லை என்று தெரிகிறது. அதனால்தான் கிளாசிக் மட்டுமே வேலை செய்கிறது.
யூனிட்டி இன்டர்பேஸ் வேண்டுமானால் முடியும். அதற்கு சாப்ட்வேர் சென்டரில் போய் யூனிட்டி 2D தேடிப்பிடித்து நிறுவிக் கொள்ளவும். அது உங்களுக்கு நன்றாக வேலை செய்யும். நானே யூனிட்டின் 2D தான் பயன்படுத்துகிறேன்.
அதை நிறுவிய பிறகு லாகவுட் செய்து லாகின் ஸ்க்ரீனில் யூனிட்டி 2டி செலக்ட் செய்து லாகின் செய்து பயன்படுத்துங்கள்.
லினக்ஸ் மின்டில் ஏன் பிரச்சனை என்று தெரியவில்லை. என்னை கைபேசியில் தொடர்புகொண்டால் நல்லது.
தகவலுக்கு மிக்க நன்றி..!!
நன்றி நண்பர் பிரபு
ராமசந்திரன்
sir do not play in mosear baer dvd in vlc player ubundu 11.04,why pls help me
thans
ramachandran
//ramachandran said...
sir do not play in mosear baer dvd in vlc player//
மேலும் சில விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டால்தன் பதில் கூறமுடியும். என்னை என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
நண்பரே நமது நண்பர் சூர்யகண்ணன் தளம் புதிய முகவரியில் (sooryakannan.blogspot.com) சென்றால் அது அவருடைய
hack செய்யப்பட பழைய தளத்திற்கு செல்கிறது ,எதனால் என்று கூற முடியுமா ,
நன்றி
ராமசந்திரன்
@ ramachandran. சூர்யா கண்ணனின் hack செய்யப்பட்ட பழைய தளம் மீட்கப்பட்டுவிட்டது. அதனால் இனிமேல் suryakannan.blogspot.com பயன்படுத்துங்கள்.
நன்றி நண்பர் பிரபு
ராமசந்திரன்
தற்போது உபுண்டு 11.10 பயன்படுத்துகிறேன்..
நல்ல தகவல்!
நல்ல தகவல்...
நன்றி நண்பரே!!
தற்போது பயன்படுத்தும் உபுண்டு 11.10 வே கொள்ளை அழகு.. அதன் அடுத்த பதிப்பு?
//ஆளுங்க (AALUNGA) said...
11.10 வே கொள்ளை அழகு.. அதன் அடுத்த பதிப்பு?//
ப்ரெசைஸ் பாங்கோலின் - இன்னும் அழகு கூடும். நன்றி.
நன்றி @ பொன்மலர் & தங்கம்பழனி & மதுரை சரவணன்.
தங்களுடைய வலையை பார்தவுடன் தான் லினக்ச்- உபுண்டு பற்றி தெரிந்துகொண்டேன்.அதைப் பற்றி அடிப்படையிலிருந்து தெரிந்து கொள்ள நான் என்ன புத்தகம் படிக்கலாம், அல்லது எப்படி என்பதை எனக்கு தெளிவுபடுத்தவும்.
Post a Comment