16 June, 2011

நோக்கியாவிற்கு ராயல்டி. ஆப்பிள் சம்மதம்!



கையில் சுத்தி வைத்திருப்பவனுக்கு பார்ப்பது எல்லாம் ஆணி மாதிரியே தெரியுமாம்.

நோக்கியா நிறுவனம், தனக்கு சொந்தமான பேடன்ட் தொழில்நுட்பங்களை ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் அனுமதியில்லாமல் பயன்படுத்துவதாக கடந்த 2009-ஆம் ஆண்டு கோர்ட்டில் கேஸ் போட்டது. பதிலடியாக ஆப்பிளும் அதே மாதிரி குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி எதிர்வழக்கு போட்டது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ஆப்பிள் நிறுவனம் நோக்கியாவின் பேடன்ட்களை லைசன்ஸ் வாங்கி பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.

இதன் விளைவாக ஆப்பிள் இனிமேல் தான் விற்கும் ஒவ்வொரு ஐபோன், ஐபேடிற்கும் நோக்கியாவிற்கு ஒரு தொகை கொடுக்கவேண்டி இருக்கும்.

இதைத்தவிர, 2007-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை விற்ற அத்தனை ஐபோன், ஐபேடுகளுக்கும் 'லம்ப்பாக' ஒன்டைம் செட்டில்மெண்ட் செய்ய இருக்கிறது.  எவ்வளவு தொகை கைமாறுகிறது என்று 'ரகசியம்'.

ஆப்பிளை வழிக்கு கொண்டுவந்த நோக்கியா, இத்தோடு திருப்தி அடையாமல் அடுத்து மற்ற போட்டியாளர்களையும் குறிவைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இனிமேல் கூகிள் ஆன்ட்ராய்ட், சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இதெல்லாம் நோக்கியாவின் பார்வையில் ஆணிகளாக தெரிந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.




Giriblog.Com கிரி

ஆன்லைனில் 'சுதந்திர மென்பொருள் டாட் காம்' வாங்கலாம் என்று முடிவுசெய்தபோது அதற்கு தேவைப்பட்ட கடனட்டை/பற்றுஅட்டை என்னிடம் இல்லை.  கிரியை உதவிக்கு அணுகியபோது,  இது சம்பந்தமான விஷயங்களை எனக்கு தெளிவுபடுத்தியதோடு,  தன் அட்டையை பயன்படுத்தி டாட் காம் வாங்கவும் உதவினார்.  அவருக்கு என் நன்றிகள்.


.
back to top