ஃபோட்டோவை எடிட் செய்து மெருகேற்ற வேண்டும்.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு புரோகிராமை நகலிறக்கம் செய்து, வேலையை முடிக்க நேரம் இல்லை என்பவர்களுக்கு (தூரி)கை கொடுத்த ஆன்லைன் ஃபோட்டோ எடிட்டர் பிக்னிக் வெப்சைட்டை கூகிள், ஏப்ரல் 19, 2012-ஆம் தேதி மூடப்போகிறது.
நினைவுப் பரிசாக, இதுவரை காசு வாங்கிக்கொண்டு கொடுத்த பிரிமியம் வசதிகளை, மூடும் தேதி வரை இலவசமாகவே அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூகிள் சொல்லிவிட்டது.
பிரிமியம் வசதிகளுக்கு காசு கட்டி, சந்தா இன்னும் காலாவதி ஆகாமல் இருப்பவர்களுக்கு மொத்த காசும் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள்.
'அப்படின்னா அதில் நான் வைத்த ஃபோட்டோக்கள் என்ன ஆகும் ' என்று கேட்கும் முன் ஜாக்கிரதை முத்துகள் Picnik Takeout போய் தங்கள் புகைப்பட வண்ணங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது கூகிள் +ல் காப்பி செய்து வைத்துக்கொள்ளலாம்.
பிக்னிக்கின் எதிர்காலம் டார்க்ரூம் மாதிரி இருண்டு போய்விட்டதே நினைப்பவர்களுக்கு ஒரு பளிச் செய்தி. அதன் வசதிகளை கூகிள் ப்ளஸ்ஸில் Creative Kit என்ற பெயரில் சேர்க்கப் போகிறார்களாம்.
அங்கே போய், அது இன்னும் நல்லா டெவலப் ஆனா ஸ்மைல் ப்ளீஸ்னு யாரும் சொல்லாமலேயே நாம் சந்தோஷப்பட மாட்டோமா. என்ன?
காப்பிரைட் படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். அதனால் பிக்னிக் லோகோ பயன்படுத்தவில்லை.
7 Comments:
நிச்சயமா சார்.. நிறைய மாறுதல்களுடன், புதிய வசதிகளுடன் கூகுள் ப்ளசில் இணைக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.. முத்தான எழுத்துக்களைக்கொண்டு தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..பிரபு சார்..!!
பிக்னிக்கின் எதிர்காலம் டார்க்ரூம் மாதிரி இருண்டு போய்விட்டதே நினைப்பவர்களுக்கு ஒரு பளிச் செய்தி. அதன் வசதிகளை கூகிள் ப்ளஸ்ஸில் Creative Kit என்ற பெயரில் சேர்க்கப் போகிறார்களாம்.
இப்பொழுதே அதற்கான முன்னோட்டம் தெரிகிறதே. G+ ல் புகைப்படத்தின் மீது எழுதும் வசதி இருக்கிறது.
\\காப்பிரைட் படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். அதனால் பிக்னிக் லோகோ பயன்படுத்தவில்லை.\\ லோகோவைப் போட்டால் பளிச் என்று ஸ்ட்ரைக் ஆகும் என நினைக்கிறேன் தலைவா.
@தங்கம் பழனி
@Anbarasu Annamalai
நன்றி
@Jayadev Das
காப்பிரைட் வம்பே வேண்டாம்.
All top ten Lists removed.why
All top ten Lists removed.why
பட்டியலில் இருப்பவர்களுக்கு அது தேவைப்படவில்லை.
Post a Comment