ஒரு கம்பெனியின் வலிமையை எடைபோட பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மார்கெட் கேப்பிடலைசேஷன்.
முதலில் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் என்றால் என்ன? என்று பார்ப்போம்.
ஒரு பங்கின் சந்தை விலையை, அந்த கம்பெனி வெளியிட்டுள்ள மொத்த ஷேர்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் வரும் தொகைதான் மார்க்கெட் கேப்பிடலைசேஷன். சுருக்கமாக மார்க்கெட் கேப்.
மார்கெட் கேப் = ஒரு பங்கின் விலை x மொத்த பங்குகளின் எண்ணிக்கை.
ஆப்பிள் கம்பெனியின் ஷேர் சக்கை போடு போட்டுகொண்டு இருக்கிறது.
2012 பிப்ரவரி 10ஆம் தேதி நாஸ்டாக் சந்தை மூடும்போது ஒரு ஆப்பிள் ஷேர் $493 ஆக இருந்தது. மார்க்கெட் கேப் கணக்கு போட்டால் $460 பில்லியன் வருகிறது.
அன்றைய தேதியின் மைக்ரோசாப்ட் மார்கெட் கேப்பையும், கூகிளின் மார்கெட் கேப்பையும் ஒருசேர கூட்டினால்கூட அது ஆப்பிளின் மார்கெட் கேப்பை தொட முடியவில்லை.
கூகிள் மார்கெட் கேப்......................$197 பில்லியன்கள்
மைக்ரோசாப்ட் மார்கெட் கேப்............$256 பில்லியன்கள்
மொத்தம்....................................$453 பில்லியன்கள்
ஆப்பிள் மார்கெட் கேப் மட்டும்......$460 பில்லியன்கள்
அரசு நடத்தாத கம்பெனிகளில் அதிக மார்கெட் கேப் உலக அளவில் ஆப்பிளுக்குதான். ஆயில் கம்பெனி எக்சனுக்கு இரண்டாவது இடம்தான் ($397 பில்லியன்கள்).
பில்லியன் = 10^9
டிரில்லியன் = 10^12
1000 பில்லியன் = 1 டிரில்லியன்.
மார்கெட் கேப்பில் அரை டிரில்லியன் டாலர்களை தொடப்போகும் முதல் தனியார் கம்பெனியாக ஆப்பிள் சாதனை படைக்கப்போகிறது.
மார்கெட் கேப்பை வைத்துப் பார்த்தால் பிளாக்பெர்ரி தயாரிக்கும் ரிசர்ச் இன் மோஷன் கம்பெனியைவிட ஆப்பிள் சுமார் 50 மடங்கு பெரியது.
இன்றைய விலை:
ஆப்பிள்
கூகிள்
ஃமைக்ரோசாப்ட்
பங்கு சந்தைகளில் "எது மேலே போகிறதோ கீழே வந்தே தீரவேண்டும்" என்று சொல்வார்கள். (What goes up must come down).
அந்த விதிக்கு ' ஆப்பிள்' மட்டும் ஒரு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?
பின்குறிப்பு: இந்த கட்டுரை வெளியிடும் நேரத்தில் ஆப்பிளின் ஒரு பங்கின் விலை $500-ஐ தாண்டி விட்டது.

3 Comments:
ஒரு கம்பனியின் சொத்து மதிப்புக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா....??? ஏனெனில், மைக்ரோசப்டு தானே இருப்பதிலேயே பணக்கார கம்பனி என்று சொல்கிறார்கள்????
//ஒரு கம்பெனியின் வலிமையை எடைபோட பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மார்கெட் கேப்பிடலைசேஷன். //
சொத்து மதிப்பு வேறு. மார்க்கெட் கேப்பிடலைசேஷன் வேறு.
மார்கெட் கேப் பங்குசந்தையில் அந்த பங்கின் அன்றைய மதிப்பை வைத்து கணக்கிடப்படுகிறது.
சொத்து மதிப்பு அவ்வாறு கணக்கிடப்படுவதில்லை.
மார்கெட் கேப் முதலீட்டாளர்கள் அந்த கம்பெனியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. அவ்வளவே!
விரிவான விளக்கங்களும், தகவல்களும் அருமை ! பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !
Post a Comment