17 February, 2012

ஆப்பிளின் "நான் அவனில்லை"


கடந்த வருடம் பிப்ரவரியில்,  சிலிக்கான் வாலி ஜாம்பவான்களோடு நடந்த ஒரு டின்னரில், அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா உள்நாட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கும் எண்ணத்துடன் ஸ்டீவ் ஜாப்பிடம், ' உங்க ஆப்பிள் ஐபோனை  அவுட்சோர்ஸ் செய்யாமல் ஏன் அமெரிக்காவிலேயே தயாரிக்கக்கூடாது?  " என்று வெள்ளந்தியாக கேட்கப்போக,  அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் "அந்த வேலையெல்லாம் போனது போனதுதான்.  திரும்பி வராது' என்று  நாக் அவுட் கொடுத்து நடையை கட்டிவிட்டாராம்.

"ஐபோன் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை ஆகிறது.  ஐபோனை சிறந்த முறையில் வடிவமைப்பதுதான் எங்கள் வேலை. அதை அமெரிக்காவில் உற்பத்தி செய்து அந்நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்ப்பது எங்கள் வேலை இல்லை " என்று விளக்கம் கொடுக்கிறார் ஆப்பிளின் அதிகாரி ஒருவர்.

வேலைகளை அவுட்சோர்சிங் செய்து, கொழுத்த லாபத்தை ருசி காணும்  அமெரிக்க கம்பெனிகள்,  ஓபாமா சொல்வதை அப்படியே செயல்படுத்தி நஷ்டப்படும்  அளவுக்கு 'இளிச்சவாயர்களா' என்ன? 

இருந்தாலும், அமெரிக்காவை விட்டு வெளிநாட்டுகளுக்குப் போய்விட்ட வேலைகளை,  திரும்ப கொண்டு வந்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதே என் இலக்கு  என்று  ஓபாமா (வேறு வழியில்லாமல்) ஓங்கி குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

ஏனென்றால் இது அமெரிக்காவில் தேர்தல் வருடம்!

கொள்ளை லாபம் அடிக்கும் கம்பெனிகள் ஒருபுறம். அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மறுபுறம்.

இந்த நிலையில் ஓபாமா வீசும் இந்த வலையில் புதிய வேலைகள் கிடைக்கிறதோ இல்லையோ,   ஓட்டுகள் கணிசமாக சிக்கலாம். :)

--------------------------------------------------------------------------------------

Related: இந்தியர் விசாக்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டது ஒபாமா ஆட்சியில்தான்!


Photo Copyright Notice
Creative Commons
Except where otherwise noted, content on this site is licensed under a Creative Commons Attribution 3.0 License. Content includes all materials posted by the Obama-Biden Transition project. Visitors to this website agree to grant a non-exclusive, irrevocable, royalty-free license to the rest of the world for their submissions to Change.gov under the Creative Commons Attribution 3.0 License.

http://change.gov/about/copyright_policy

1 Comments:

Jayadev Das said...

அமெரிக்க பிரஜைகள் கேட்கும் கூலியைக் கொடுத்து கட்டுபடியாகாதுன்னுதானே அந்த ஊர் கம்பனிக்காரங்க எல்லா *.*sourcing-உம் பண்ணுறாங்க!! அமேரிக்கா காரன் பொருளாதாரம் எவ்வளவு கீழே போனாலும் சரி, அவனை விட்டுக் கொடுக்காமல் கடன் கொடுத்து தாங்கிப் பிடித்து கொண்டு இருப்பதற்கென்றே பல நாடுகள் இருக்கின்றன, ஏனெனில் அமேரிக்கா பணால் என்றால், இவனுங்களும் சேர்த்து காலியாகிடுவானுங்க.

back to top