06 June, 2012

லினக்ஸ் கிண்டுவது எப்படி?

கதை கேளு கதை கேளு
லினக்சோட கதை கேளு

படம் பாரு படம் பாரு
லினக்ஸ் கெர்னல் படம் பாரு

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள். அப்படியென்றால் ஒரு வீடியோ?

லினக்ஸ் வளர்ச்சிக்காக செயல்படும் லினக்ஸ் பெளண்டேஷன் (லாபநோக்கமற்ற அமைப்பு), லினக்ஸ் உருவாகும் கதையை ஒரு அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.


அந்த யூட்யூப் வீடியோவின் சுட்டி இதோ..

http://www.youtube.com/watch?v=yVpbFMhOAwE

லினக்ஸ் என்பது ஒரு ஆபரேடிங் சிஸ்டம் என்று அறியப்பட்டாலும், அதன் முக்கிய பகுதியை லினக்ஸ் கெர்னல் (kernel) என்று சொல்வார்கள்.

ஒரு கட்டிடம் கட்டும்போது அஸ்திவாரம் மட்டும் போட்டுவிட்டு அதை கட்டிடம் என்று சொல்லமுடியாது. அதேபோல் லினக்ஸ் கெர்னல் மட்டுமே லினக்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் ஆகிவிடாது.

அதனுடன்  கிராபிகல் டெஸ்க்டாப், டிவைஸ் டிரைவர்கள், அப்ளிகேஷன்ஸ், இப்படி இன்னும் நிறைய சேர்த்தபிறகுதான் அதை நாம் ஆபரேடிங் சிஸ்டமாக பயன்படுத்த முடியும்.

பொதுவாக லினக்ஸ் கெர்னலை அடிப்படையாக பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டங்களை லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன்ஸ் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது.  உதாரணம்: உபுன்டு, லினக்ஸ் மின்ட், டெபியன், ரெட் ஹேட்.

லினக்ஸ் கெர்னலை மட்டும் குறிப்பிடும்போது லினக்ஸ் என்றும், லினக்சை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆபரேடிங் சிஸ்டங்களை GNU/லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன்ஸ் என்றும் சொல்வதுதான் சரி.

லினக்ஸ் போன்று மேலும் பல சுதந்திர மென்பொருள் கெர்னல்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஃப்ரீ பி.எஸ்.டி (FreeBSD).

-----------------------------------------------

நான் எழுதிய சிறுகதை படித்தீர்களா?

வசீகரன் Vs. சிட்டி (Sci-Fi Thriller)

----------------------------------------------

தமிழ்மொழியில் வரும் எந்த ஒரு கணினி இதழையும் நான் காசு கொடுத்து வாங்கி படிப்பதில்லை.  எனக்கு தேவையான எல்லாமே இணையத்தில் கிடைத்துவிடுகிறது.

காசு மிச்சம்.

.

4 Comments:

new-gadgets-hot said...

Proud of using Linux as my operating system

அன்பை தேடி,,அன்பு said...

பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

mani said...

gnu/linux is always awesome...

saravana bhavan said...

லினக்ஸ் ஒரு அருமையான ஆபரடிங் சிஸ்டம். நான் உபயோகிப்பது லினக்ஸ் மின்ட் 12 . இந்த சிஸ்டம் மூலம் நான் விண்டோஸ் சிஸ்டத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய முடிகிறது. லினக்ஸ் நம் தமிழ் மகள்கள் மதியில் சென்றடைந்து எல்லோரும் பயன் பெற வேண்டும் என்பதே என் பேராசை.

back to top