16 December, 2012

எப்படி எல்லாம் வேலை வாங்கறான் பாருங்க!

அவுட்சோர்சிங்கில் பலவிதங்கள் உள்ளன:

Offshoring :  வேலையை வெளிநாட்டுக்கு அனுப்பி முடித்துக்கொள்வது.

Nearshoring :  தூரத்தில் உள்ள வெளிநாடாக இல்லாமல் பக்கத்திலேயே இருக்கும் நாடுகளுக்கு வேலையை அனுப்புவது.

Twoshoring:    இதுல கொஞ்சம். அதுல கொஞ்சம் இருந்தால் நல்லது என்று நினைக்கிற கம்பெனிகள் சொந்த நாட்டில் ஒரு லொகேஷனையும், வெளிநாட்டில் ஒரு லொகேஷனையும் வைத்துக்கொள்வது.

Multishoring:  " ஒரே கூடையில் ஏன் இத்தனை முட்டை" சிந்தனை உள்ளவர்கள் வேலைகளை பல நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யும் வித்தை.

Rightshoring:  எந்த வேலை எங்கே மலிவாக செய்ய முடியுமோ,  அந்த நாட்டுக்கு அந்த வேலை என்று பிரித்துப் பார்த்து பகிரும் புத்திசாலித்தனம்.

In-shoring:  கம்பெனிகள், சொந்த நாட்டில் அவர்களின் செயல்பாட்டுகளை அதிகரித்து அதன்மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை பெருக்கும் போக்கு.

In-sourcing :   (அவுட்சோர்சிங்கிற்கு எதிர்ப்பதம்)  வெளிநாட்டுக்கு போன வேலைகளை மீண்டும் நம் நாட்டிற்கே கொண்டு வருவது.

Homesourcing: அலுவலகத்தில் செய்யும் வேலையை, தொழிலாளியின்  வீட்டுக்கே  கொடுத்து அனுப்புவது.

Unsourcing :  கஸ்டமர் சப்போர்ட்னு கம்பெனியை தேடி வருபவர்களை சோஷியல் நெட்வொர்க்குகளுக்கு அனுப்பி, அங்கே 'வாடிக்கையாளர்கள் நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் பதில் சொல்லி தீர்வு கண்டுகொள்ளுங்கள்' என்று கழண்டுகொள்ளும் சாதுர்யம்.

யாருக்கு எந்த source விருப்பமாக இருந்தாலும்,
எனக்கு பிடிச்சது ஒன்னுதான்.

ஓப்பன்Source!

If you want to add your email subsciption click here.

4 Comments:

இராஜராஜேஸ்வரி said...

nice in formations ...

abd sham said...

nice, thanks for sharing brother

இரா.கதிர்வேல் said...

சார் நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு பதிவு...
அதுவும் அருமையாக...

//யாருக்கு எந்த source விருப்பமாக இருந்தாலும்,
எனக்கு பிடிச்சது ஒன்னுதான்.

ஓப்பன்Source!//

எனக்கு பிடித்ததும் சார்..

தங்கம் பழனி said...

வேலை வாங்குவதில் இத்தனை வழிமுறைகளா?...பதிவின் மூலம் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சார்..!

back to top