28 May, 2013

மென்பொருள் பிரபுவின் கணினி செய்திகள்

WiFi ஸ்டான்டர்ட் 802.11 b/g/n கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அடுத்த தலைமுறை WiFi ஸ்டான்டர்ட் வரப்போகிறது.

அதற்கு 802.11 ac என்று நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள்.

WiFi 802.11 'a'-ன்னு ஒரு ஸ்டான்டர்ட் இருக்கு. ஆனா அது ரொம்ப பழசு.

802.11 'a ' முதல் தலைமுறை
802.11 'b'  இரண்டாம் தலைமுறை
802.11 'g'  மூன்றாம் தலைமுறை
802,11 'n' (Wireless-N) நான்காம் தலைமுறைன்னு வைத்துக்கொண்டால்

802.11 'ac' ஐந்தாம் தலைமுறையாகிறது.

அதனால் அதை 5G WiFi என்றுகூட அழைக்கிறார்கள்.

மொபைல் நெட்வொர்க்கில் 2G, 3G இப்படி எல்லாம் இருந்தாலும் அது வேறே.

மேற்கண்ட இரண்டையும் போட்டு குழப்பிக்கவேண்டாம் ஜி.

---------------------------------------------------------------------------------------

அடுத்த முறை கைபேசியோ, மடினியோ, பலனியோ வாங்கும்போது அதன் feature list-ல் BLE, BTLE இப்படி போட்டு இருந்தால் "என்ன இது புதுசா இருக்கே?" என்று குழம்ப வேண்டாம்.

Bluetooth Low Energy-யைத்தான் இப்படி குறிப்பிடப் போகிறார்கள்.

கிளாசிக் ப்ளூடூத் தொழில்நுட்பத்தைவிட இது குறைந்த  ஆற்றலையே (Energy) பயன்படுத்துமாம்.

இப்படி abbreviation-ஆ போட்டு மக்களை தாக்கவேணாமேன்னு இதற்கு Bluetooth SMART-னு பிராண்ட் பேர் வைத்திருக்கிறார்கள்.

இப்போது பயன்பாட்டில் இருக்கும் ப்ளூடூத் + ப்ளூடூத் லோ எனர்ஜி இரண்டு தொழில்நுட்பங்களிலும் வேலை செய்யக்கூடிய கருவிகளை "ப்ளூடூத் ஸ்மார்ட் ரெடி" என்று அழைக்கிறார்கள். அப்படி வேலை செய்யவேண்டும் என்றால் இதை கவனித்து வாங்கவும்.

புது டெக்னாலஜின்னு சொல்லி ரேட்டை ஏத்திடாம இருந்தா சரி!

அருஞ்சொற்பொருள்

பலனி = பலகை கணினி = Tablet
மடினி = மடி கணினி = Laptop
-----------------------------------------------------------------------------------

கடந்த சில வருடங்களாக மெக்சிகோவை சேர்ந்த எவனோ ஒருத்தன்தான் உலகத்திலேயே பெரிய பணக்காரனாக இருந்தான்.

இப்ப பில் கேட்ஸ் உலகத்திலேயே பெரிய பணக்காரன்  அந்தஸ்தை திரும்ப பெற்றிருக்கிறார்.

மென்பொருள்னா சும்மாவா?
---------------------------------------------------------------------------------------

யாருக்காவது பணம் அனுப்பனுமா?

காசோலையாக எல்லாம்அனுப்பவேண்டாம்.

டாகுமென்ட், போட்டோவை மின்னஞ்சலில் அட்டாச் செய்து அனுப்புறா மாதிரி,  பணத்தையும்  மின்னஞ்சலில் அட்டாச்மென்டா அனுப்புனா போதும்னு கூகுள் சொல்லுது.

அந்த வசதி இப்பவே இல்லை என்றாலும் வரும் காலங்களில் கூகுள் அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறது.

ஒரு விதத்தில் இது எதிர்கால தொழில்நுட்பம்தான்.

-------------------------------------------------------------------------------------
தனது இருபதாவது வயதை தொடும் 'ரூபி கணினிமொழி' இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் தனது வெர்ஷன் 2.0-வை வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

http://www.ruby-lang.org/en/

---------------------------------------------------------------------------------------
ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் விற்றதில்  2013 வருடத்தின் முதல் காலாண்டில் எந்த கம்பெனி எவ்வளவு லாபம் அடித்தது என்று கணக்கு போட்டு பார்த்திருக்கிறார்கள்.

உலக அளவில் வந்த 5.3 பில்லியன் டாலர் லாபத்தில் 95 சதவீதம் சாம்சங்குக்குத்தானாம்.

வெறும் 3 சதவீதம் லாபம்தான் எல்.ஜி கம்பெனிக்கு.

சாம்சங்தான் அடுத்த ஆப்பிளா?
---------------------------------------------------------------------------------

யாராவது USER-க்கு சரியான தமிழ் வார்த்தை கண்டுபிடிங்கப்பா.

சரி. நான் சொல்லும் வார்த்தை பொருந்தி வருதான்னு பாருங்க.

பயணம் செய்பவர் "பயணி"
பயன்படுத்துபவர்  "பயனி"

எப்படி?

---------------------------------------------------------------------------------------
கோ!

இது தமிழ் பட சினிமா இல்லை.

'Go' கூகுள் டெவலப் செய்துள்ள ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்மிங் லேங்வேஜ்.

அதன் 1.1 வெர்ஷன் ரிலீஸ் ஆகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு http://golang.org/
--------------------------------------------------------------------------------------

லினக்ஸ் பயன்படுத்துவது கடினம் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளுவதுதான்.

யூ.கே.ஜி படிக்கும் என் மகன் விக்ரம் உபுன்டுதான் பயன்படுத்துகிறான்.

உபுன்டு சாஃப்ட்வேர் சென்டருக்கு அவனே போய் கேம்ஸ் இன்ஸ்டால் செய்கிறான்.

ஃபயர்பாக்ஸ் ஓப்பன்செய்து ஃபேஸ்புக் போய் கேம்ஸ் விளையாடுகிறான்.

க்ரிட்டா (Krita - Painting program) + TuxPaint-டில் வரைகிறான்.

லாகின், ஷட்டவுன், லாகவுட் எல்லாம் அவனே.

உபுன்டுவின் யூனிட்டி இன்டர்பேஸ் முதலில் எனக்கு பிடிக்கவில்லை.  ஆனால் என் மகன் அதை லாவகமாக பயன்படுத்துவதை பார்த்தபின் என் கருத்தை மாற்றிக்கொண்டேன்.

நாலேமுக்கால் வயது பையனுக்கு எளிதாக இருப்பதை கடினம் என்று சொல்லும்முன் வளர்ந்தவர்கள் யோசிக்கவேண்டும்.

---------------------------------------------------------------------------------------
பி.எஸ்.என்.எல் பில் தொகை அஞ்சல் வழியாக  வீட்டிற்கு வருவதற்கு முன்பே இங்கே தெரிந்துகொள்ளலாம்.

http://billchn.bsnl.co.in/publicbill.php

---------------------------------------------------------------------------------------
+velumani D.  originally shared:

மனைவி சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருப்பது என்பது நெட்டில் Terms and conditions படிப்பது போன்றது. புரிகிறதோ, இல்லையோ 'I agree' தான்!

# நல்லாத்தான் இருக்கு...............

---------------------------------------------------------------------------------------
+saravana Saran originally shared

---------------------------------------------------------------------------------------
உபுன்டுவின் அடுத்த ரிலீஸ் 13.10-க்கு 'சாசி சலமான்டர்'  (Saucy Salamander) என்று செல்லப்பெயர் வைத்திருக்கிறார்கள்.

சலமான்டர் பல்லிவகைகளில் ஒன்று.

http://en.wikipedia.org/wiki/Salamander

-----------------------------------------------------------------------------------

திடீரென ஒரு ஞானோதயம்.

ATM-ல் தமிழைத் தொடுவோம்! எழுதிய நானா என் கூகுள்+ profile பெயரை ஆங்கில எழுத்துகளில் +Menporul Prabhu  என்று வைத்திருக்கிறேன் என்று.

Menporul Prabhu-வை +மென்பொருள் பிரபு என்று தமிழ் எழுத்துகளில் மாற்றிவிட்டேன்.

உங்களில் பலருக்கு தமிழ் தாய்மொழியாக இருக்கலாம். உங்கள் கூகுள்+ profile பெயரை ஆங்கில எழுத்துகளிலிருந்து தமிழ் எழுத்துகளுக்கு மாற்றிவிடுங்களேன்.

தமிழுக்கு நம்மால் இதைக்கூட செய்யமுடியாதா?

------------------------------------------------------------------------------------

RomCom எனும் ஆங்கில வார்த்தை இப்போது அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அது Romantic Comedy-யின் சுருக்கம்தான்.

------------------------------------------------------------------------------------

Mob frenzy-க்கு சரியான தமிழ் வார்த்தை குழுவெறி என்று வைத்துக்கொள்ளலாமா?

#அருஞ்சொற்பொருள்
------------------------------------------------------------------------------------
+jayachandran jai orignally shared the photo

------------------------------------------------------------------------------------

புலி, சிங்கம், யானைன்னு எல்லா விலங்குகளின் பெயரையும் வியாபார பொருட்களுக்கு பெயர்வைத்து லாபம் சம்பாதிப்பவர்கள், அந்தந்த விலங்குகளுக்கு ராயல்டி கொடுக்கவேண்டும்.

தனி மனிதன்  புகைப்படத்தை பொருட்களின் பெயராகவோ, விளம்பரத்திலோ பயன்படுத்தினால் அனுமதி இல்லாமல் எப்படி என் புகைப்படத்தை பயன்படுத்தலாம் என்று கேட்கமாட்டார்களா?

இவர்களுக்கு ஒரு நியாயம், வாயில்லாத விலங்குகளுக்கு ஒரு நியாயமா?

விலங்குகள் பெயரை வைத்து பேர் வாங்கிவிட்டு அந்த விலங்குகளுக்கு ஒரு வேளை சோறாவது போட்டிருப்பார்களா?

இது விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சும் செயலாக தெரியவில்லையா?

விலங்குகளின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.

------------------------------------------------------------------------------------
மணமகளே மணமகளே வா வா

back to top