11 February, 2014

கூகுள் பிளஸ்ஸின் What's Hot and Recommended பிளஸ்களை நிறுத்துவது எப்படி?


கூகுள் பிளஸ் ஓடையில் (plus.google.com) இடையிடையே What's Hot and Recommended பிளஸ் வந்து வெறுப்பேற்றும்.  நீங்கள் பலரை நிழலாடுவதாக இருந்தால் (Follow) ஒவ்வொரு 10,20 பிளஸ்களுக்கு ஒருமுறை இது வந்துவந்து போகும்.

அதுகூட பரவாயில்லை.  பல சமயம் வந்த செய்தியே திருப்பி திருப்பி வந்துபோகும். இதை வராமல் செய்தால் சிறிதளவாவது நிம்மதி கிடைக்கும்.

இந்த  பிளஸ்ஸின் வலது மேல் மூலையில் தெரியும் சிவப்பு நிற சின்னத்தின்மேல் மெளஸ் கர்சரை நிறுத்தவும்.  ஒரு செய்தி வரும்.
 

அதில் உள்ள What's Hot சுட்டியை கிளிக் செய்யவும். அது https://plus.google.com/explore/ பக்கத்திற்கு செல்லும்.


அங்கு படத்தில் காட்டப்பட்டுள்ள பல்சக்கரத்தை கிளிக் செய்யவும்.



அதில் வரும் மெனுவில் Show posts in Home Stream-க்கு ஆரம்பத்தில் வரும் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.

இப்போது உங்கள் கூகுள் பிளஸ் ஓடையில்
What's Hot and Recommended வராது.

பிறகொரு நாள் அது திரும்பி வேண்டும் என்று நினைக்கும்போது https://plus.google.com/explore பக்கத்திற்கு போய் அதே பல்சக்கரத்தை கிளிக் செய்து What's Hot and Recommended முன்னால் டிக் போட்டுக்கொள்ளவும்.



1 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து விட்டேன்... நன்றி...

back to top