23 September, 2014

பாதி விலை கைபேசி - கற்பனை நாடகம்

மதியூக அமைச்சரே.. நம் நாட்டு பாதி விலை கைபேசிக்கு எதிரி நாட்டில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

பார் புகழும் மன்னா... நம் பாதி விலை கைபேசிக்கு எதிரி நாட்டில் அமோக வரவேற்பு! வரிசை கட்டி, முட்டி மோதி வாங்கிச் செல்கிறார்கள் என்று செய்தி வந்துள்ளது மன்னா!

நான் முன்னே சொன்னதுபோல அந்த கைபேசியில் நம் நாட்டு சர்வர்களுக்கு செய்திகளை சேகரித்து அனுப்பும் வகையில் உளவு மென்பொருட்களை சேர்த்துத்தானே விற்பனைக்கு அனுப்பியிருக்கிறோம்?

அதிலென்ன சந்தேகம் மன்னா? உளவு மென்பொருட்களை சேர்த்துத்தான் அனுப்பியிருக்கிறோம். அது மட்டுமல்ல. நம் நாட்டு கணினி வல்லுநர்கள், மென்பொருளை மாற்றிவிட்டால்கூட கைபேசியின் வன்பொருளே தொடர்ந்து செய்திகளை சேகரித்து அனுப்பும்விதத்தில் இம்ப்ரூவ் செய்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

அப்படியா? பேஷ் பேஷ்.. ஜாடிக்கேற்ற மூடி மாதிரி எனக்கு பொருத்தமான மந்திரியாக திகழ்கிறீர்கள்.

நான் சொன்னபடி பாதிவிலைக்கும் கொடுப்பேன். சொல்லாமல் உளவு மென்பொருளும் சேர்த்துகொடுப்பேன்.

உளவு மென்பொருள் தாங்கிய கைபேசியை எதிரி நாட்டு மக்களுக்கு பாதி விலைக்கு விற்று, அந்த நாட்டு மக்களையும் என் ஒற்றர் படையின் ஓர் அங்கமாக மாற்றிய பெருமை என்னையே சாரும்.

ஹா ஹா ஹா!

3 Comments:

Anonymous said...

பாதி விலை கைபேசி செய்கின்ற அதே வேலையைத் தான் கொள்ளை விலை கைபேசிகளும் செய்கிறது. அதை உங்கள் மதியூக மந்திரி கண்டுகொள்ள மாட்டாரா?

மென்பொருள் பிரபு said...

இந்த கேள்விக்கு அந்த ராஜாதான் பதில் சொல்லவேண்டும்.
ஏழைகளும் அவர் விரிக்கும் வலையில் சிக்கவேண்டும் என்ற 'நல்ல' நோக்கமாக இருக்கலாம்.

Arivoli said...

நல்ல கற்ப​​னை, நம் நாட்டு ​கை​பேசி​க​ளை பயன்படுத்துவ​தே நன்று

back to top