22 December, 2014

அமேசான் இந்தியாவில் கடைவிரிக்கும் மைக்ரோசாஃப்ட்!

அமேசான் இந்தியாவில் மைக்ரோசாப்ட் கடை!

இந்தியாவை குறிவைத்து ஏற்கெனவே ஒரு இணைய விற்பனை தளத்தை மைக்ரோசாஃப்ட் http://www.microsoftstore.com/store/msin/en_GB/home என்னும் முகவரியில் நடத்தி வருகிறது. ஆனால் அந்தக் கடையில் விண்டோஸ் 8, விண்டோஸ் ஆபீஸ், விஷூவல் ஸ்டூடியோ போன்ற மென்பொருட்களையே விற்றுவருகிறது.

இன்றைய நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மென்பொருட்களை உருவாக்குவதில் மட்டும் ஈடுபடாமல், வன்பொருட்களையும் (hardware) திறம்பட வடிவமைத்து விற்கிறது. மைக்ரோசாஃப்ட் தன் வன்பொருட்களை இந்தியாவில் தன் பெயரிலேயே அதிகாரபூர்வமாக விற்க இதுவரை எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை.

இப்போது திடீரென மைக்ரோசாஃப்ட், மின்வணிக நிறுவனமான அமேசான் இந்தியாவுடன் கூட்டுச்சேர்ந்து அமேசான்.இன்னில் அதிகாரபூர்வ மைக்ரோசாஃப்ட் ஸ்டோரை புதியதாக திறந்திருக்கிறது.

இதில் விண்டோஸ் 8.1, எம்.எஸ் ஆபீஸ் போன்ற மென்பொருட்கள் மட்டும் இல்லாமல், எக்ஸ்பாக்ஸ் ஒன், எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டு சாதனங்கள், விண்டோஸ் கைபேசிகள், விண்டோஸ் மடிக்கணினிகளும், துணை சாதனங்களான (accessories) மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் மெளஸ், வயர்லெஸ் கீபோர்டுகள், வெப்கேமரா,  அரட்டை அடிக்க உதவும் ஹெட்செட்டுகளும், மைன்கிராஃப்ட் போன்ற பிரபல விளையாட்டுகளும் விற்பனைக்கு அணிவகுத்து நிற்கின்றன.

புதிய கடை என்றால் அறிமுக சலுகைகள் இல்லாமலா? கைபேசிகளுக்கு தள்ளுபடி விலை, இலவச விளையாட்டுகள்,  இலவச டெலிவரி - இப்படி இந்த புதிய மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் விழாக்கோலம் பூண்டு மக்களை சுண்டியிழுக்கிறது.

அமேசான் இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரின் முகவரி:

http://www.amazon.in/b?ie=UTF8&node=5449926031

-------------------

விக்ரம் புதுசா ஒரு கடை திறக்கப்போறானாம். அதுக்கு என்ன பேர் வெச்சிருக்கான்னு அவன்கிட்டேயே கேட்கலாமா?
 
 

RSS feed-ல் இந்தப் பதிவை படிப்பவர்கள் மேற்கண்ட காணொளியை பார்க்க இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.  https://www.youtube.com/watch?v=NAiibYzgdaQ

மென்பொருள் பிரபுவின் கூகுள் பிளஸ் பக்கம் மென்பொருள் பிரபு - Google+
விக்ரம் பிரபுவின் கூகுள் பிளஸ் பக்கம் https://plus.google.com/113763916242717395158/posts

0 Comments:

back to top