12 October, 2015

'அப்'பெடுத்து அப்பிக்கோ!

ஒருவர் என்னிடம் கேட்டார்.

"நண்பா.. இந்த இணையவழி பொருள் விற்பனையாளர்கள் நேரடியாக வாங்குபவர்களுக்கு சலுகைகள் தராமல், அவர்களுடைய 'அப்'பை திறன்பேசியில் நிறுவி அதன் வழியாக வருபவர்களுக்கு மட்டும்தான் எல்லா சலுகைகளையும் தருகிறார்கள்?  ஏன்?"

இது நல்ல கேள்வி. மில்லியன் டாலர் கேள்வி என்றுகூட சொல்லலாம். அவர் கேள்வியை எளிதாக கேட்டுவிட்டார். ஆனால் சரியான, அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பதில் கிடைப்பதுதான் கடினம்.

ஆமாம். இணையவழியில் பொருட்களை வாங்கவேண்டுமென்றால் 'இணைய உலவி' (browser) வழியாக வாங்கலாமே.

மேசைக்கணினியில் உலவி இருக்கிறது. மடிக்கணினியில் உலவி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் திறன்பேசியிலேயே உலவி இருக்கிறது.

உலவி வழியாக வாங்கினாலும், அப் வழியாக வாங்கினாலும் காசு கொடுத்துத்தான் வாங்கப்போகிறோம்.  பின் ஏன் அப் வழியாக வருபவர்களுக்கு மட்டும்தான் சலுகை?

விமான நிலையம் போகவேண்டும். கார் வேண்டும் என்று சேவை நிறுவனத்தை தொலைபேசி வழியாக அழைத்தால், "ஐயா, அப் வழியாக கேளுங்கள். கிடைக்கும்" என்று மறைமுகமாக அப் நிறுவும் நிர்ப்பந்தத்தை உருவாக்கும் பதில் வருகிறது.

'அப்' வழியாக வருபவர்களுக்கு இணைய வழியாக வருபவர்களைவிட 10,15 நிமிடங்களுக்கு முன்னாலேயே சலுகைவிலை கொடுக்கப்படும்/ அப் வழியாக வாங்கினால் சில சதவீதம் மேலும் சலுகை விலை என்று மறைமுகமாக அப் நிறுவ நிர்ப்பந்தம்.

'அப்' நிறுவினால் முதல் சவாரி இலவசம்/ சில பண நோட்டுகள் கிரெடிட் என்று ஆசை காட்டப்படுகிறது.

'அப்' நிறுவினால் குலுக்கலில் ஒரு படி உயர்விலை உலோகம்/ மதிப்புமிக்க பரிசுகள் /கேஷ்பேக் இப்படியெல்லாம்கூட ஆசை காட்டப்படுகிறது.

சில இணைய விற்பனையாளர்கள் 'அப்' நிறுவினால்தான் எங்கள் சேவை கிடைக்கும் (App only sale). அதன் நிறுவ இயலாதவர்கள்/ விருப்பமில்லாதவர்கள் பணம் படைத்தவர்களேயானாலும் எங்கள் வாடிக்கையாளராக தேவையில்லை. இப்படியும் ஒரு நிலைப்பாடு.

மேலோட்டமாக யோசித்துப்பார்த்தால், ஒரு நிறுவனத்தின் அப் நிறுவல்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் தன் ஆரோக்கியத்தின் அளவுகோலாக  நினைக்கலாம். அந்த எண்ணிக்கையை காட்டி மேலும் நிதி ஆதாரங்களை திரட்ட முயற்சிக்கலாம்.  அப் நிறுவிய வாடிக்கையாளர்கள் அடிக்கடி பொருள் வாங்க வசதியாக இருக்கும் என்றும் சொல்லலாம்.
 

அப்படியே இருக்கட்டும்.

இருந்தாலும் ஏதோ ஒன்று நெருடுகிறதா இல்லையா?

"என் பொருளை வாங்குகிறீர்களோ, இல்லையோ. முதலில் 'எங்கள் அப்பை' நிறுவுங்கள்" என்பதுதான் அவர்கள் வெளிநோக்கமோ என்று தோன்றுகிறது.  ஏன் அப்படி பெருங்குரலெடுத்து ஓலமிடுகிறார்கள்?

காலை எழுந்ததிலிருந்து படுக்கப்போகும்வரை எல்லா திசைகளிலிருந்தும் 'எங்கள் அப்பை நிறுவுங்கள்' என்று ஒரே அன்புத்தொல்லை. இன்னும் போகப்போக இந்த அன்புத்தொல்லை அதிகமாக வாய்ப்பிருக்கிறதே தவிர குறைய வாய்ப்பில்லை.

நாம் அப் நிறுவிக்கொள்வதில் அவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

அந்த கேள்விக்கு பதில் அந்தந்த 'அப்' நிறுவப்படும்போது அது உங்களிடம் கேட்கும் list of permission-களில் மறைந்திருக்கலாம்.  அந்த permission-களை பொறுமையாக படித்துப்பார்த்தால் அந்தக் கேள்விக்கு பதில் தெரியவரலாம்.

நம்மில் எத்தனை பேர் அந்த permission-களை படித்திருக்கிறோம்.

படிக்காமல் accept கொடுப்பவர்கள்தானே அதிகம்.

அது போதாதா 'அவர்களுக்கு'?


.

23 June, 2015

₹ 99-க்கே டாட் காம் டொமைன் பெயரை வாங்குவது எப்படி?

நண்பர் ஒருவர் தனக்கென்று ஒரு .com வாங்கவேண்டும். யாரிடம் வாங்கலாம்? என்று ஆலோசனை கேட்டிருந்தார். நான் எனக்கு வாங்கி சில வருடங்களாகிவிட்டதால் இப்போது நிலவரம் என்ன? என்று தெரியவில்லை. தேட ஆரம்பித்தேன்.

அப்படி தேடியதில் தற்போது இந்தியாவில் இருந்து .com வாங்கினால் முதல் வருடத்திற்கு வெறும் ரூ.99/-க்கே கீழ்க்கண்ட இரண்டு பேர் கொடுப்பதாக தெரியவந்தது (Offer).

     1. in.godaddy.com

     2. bigrock.in

இன்னும் வேறு சிலரும் இந்த சலுகையைத் தருவதாக தோன்றுகிறது. சொல்லத் தேவையில்லை. இது குறுகிய கால சலுகையாகத்தான் இருக்கும். சலுகையில்லாமல் முதல் வருடத்திற்கே சுமார் 10+ USD கொடுக்கவேண்டியிருக்கும்.

இந்த மாதிரி .com அல்லது .in பெயர்களை domain name என்று சொல்வார்கள். மேலும் பல extensions-களுடன் டொமைன் பெயர்கள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விலையாக இருக்கலாம்.

இந்த மாதிரி டொமைன் பெயர்களை வாங்கிக்கொண்டால் அதை பிளாக்கருடன் இணைத்துக்கொள்ளலாம். நான் அப்படித்தான் செய்தேன். அல்லது சொந்தமாகவும் host செய்துகொள்ளலாம்.

பிறகு வருடாவருடம் என்ன Renewal Rate-ஓ அதை தொடர்ந்து கொடுத்துவரவேண்டும். சில நிறுவனங்கள் முதல் வருடம் குறைவாக கொடுப்பதாக ஆசை காண்பித்துவிட்டு அடுத்தடுத்த வருடங்களுக்கு 12 to 15 டாலர்களை Renewal Rate-ஆக விலையைக் கூட்டி நிர்ணயித்து சரிகட்டிவிடுவார்கள். அதனால் முதல் வருடத்திற்கு 99 ரூபாய்களே கொடுத்து வாங்கினாலும் அடுத்தடுத்த வருடங்களுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டியிருக்கும் என்று இப்போதே கேட்டுக்கொள்ளவேண்டும்.

இப்போது அந்த 99 ரூபாய் சலுகைக்கு திரும்பி வருவோம்.
நேரடியாக போய் வாங்கினால் அந்த சலுகை கிடைக்காது.

என்ன செய்யவேண்டும் என்றால் கூகுளில் domain name purchase in India இப்படி ஏதாவது தேடவேண்டும். அப்படி தேடினால் அந்தப் பக்கத்தில் வரும் விளம்பரங்களில் இந்த 99 ரூபாய்கள் சலுகை குறிப்பிடப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து போனால்தான் உங்களுக்கு 99 ரூபாய் சலுகை கிடைக்கும்.

மேலும் சில தகவல்கள்.

     • புதிய வாடிக்கையாளர்களுக்குத்தான் இந்த சலுகை.

     • வெளிநாட்டில் இருந்து முயற்சிப்பவர்களுக்கு அவர்களின் வெளிநாட்டு ஐ.பி முகவரியை கண்டுபிடித்து சலுகை மறுக்கப்படலாம்.

     • 99 ரூபாய் டொமைன் பெயருடன் தேவையில்லாத சேவைகளையும் shopping cart-ல் அவர்கள் சேர்த்துவிடுவார்கள். டொமைன் பெயரைத்தவிர மற்றவற்றை நீங்கள் நீக்கிவிடவேண்டும்.

     • டொமைன் உரிமையாளர் யார்? என்று யார் தேடினாலும் உங்கள் முகவரி அவர்களுக்கு காண்பிக்கப்படும். அப்படி தெரிந்தால் தேவையில்லாத பிரச்சனை என்று நீங்கள் நினைத்தால் privacy protection என்ற சேவையை சேர்த்து தேர்வு செய்துகொள்ளவேண்டும். அதற்கு வருடாந்திர சேவைக்கட்டணம் தனி.

     • பணம் கொடுப்பதற்குமுன் 99 ரூபாய்தான் காண்பிக்கிறதா என்பதை பலமுறை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

இப்படி டொமைன் பெயரை வாங்குவது பெரிய விஷயமில்லை. அதை கைநழுவிபோய்விடாமல் காப்பாற்ற வேண்டும். Blogger வழியாக டொமைன் பெயர்களை வாங்கியவர்களில் சிலர் autorenew வைக்காமல் அதை இழந்திருக்கலாம்.

உங்களுக்கு மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் என்னை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்.

நன்றி.
மென்பொருள் பிரபு
mynameisprabhu@outlook.com

20 January, 2015

ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பத்தி

An excerpt from the book "Go Kiss the World" by Mr. Subroto Bagchi.


The marginal person is important

"In my life, I have understood that trying to please your boss is not beneficial in the  long run. For the boss who expects you to curry favour, no gift is big enough; he will always think of it as his entitlement.  On the other hand, if you are considerate towards your juniors, those below you, greet them with a pat, a smile or a nice word, you will be remembered for a lifetime.  In exchange, they will walk to the end of the world for you. So, do not waste your time trying to please the big bosses. Focus on the little people. In a harshly competitive world, that may sound counter-intuitive. But believe me, when you focus on the small folk, you create a constituency that no boss can ever ignore."

 Available in Amazon.in and Flipkart.com

back to top