02 September, 2016

ஃபயர்பாக்ஸ் உலவியில் செலவழிக்கும் நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி?

இது ஃபயர்பாக்ஸ் உலவி பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம்.

"ஆற்றில் கொட்டினாலும் அளந்துகொட்டு" என்பது பழமொழி.  நாம் எவ்வளவு நேரத்தை ஃபயர்பாக்ஸ் உலவியை பயன்படுத்துவதில் செலவு செய்கிறோம் என்று தெரிந்துகொண்டால் நல்லதுதானே?

அதை தெரிந்துகொள்ள முகவரிப் பட்டையில் (address bar) about:healthreport என்று தட்டச்சிட்டு enter விசையை தட்டவும். வரும் பக்கத்தின் இடது பத்தியில் This Month என்னும் தலைப்பின்கீழ் நிகழ் மாதத்தில் (Current month) இதுவரை எத்தனை மணி நேரம் இந்த உலவியை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று படத்தில் காட்டியவாறு தெரியவரும்.



இதே பக்கத்தை Help -> Firefox Health Report என்று மெனு வழியாகவும் திறக்கலாம்.

இதே பக்கத்திற்கு விசைப்பலகை (Keyboard) குறுக்குவழி (shortcut)

Alt key + H + E



'தான் பெற்ற ஞானம் பெறுக இத்தமிழ் வையகம்' என்று நினைப்பவர்கள் இதை மற்றவர்களுடன் பகிரலாம்.

இந்த மின்னஞ்சல் வரிசைக்கு இலவச சந்தா சேர இந்த சுட்டியை பயன்படுத்தவும்.

https://feedburner.google.com/fb/a/mailverify?uri=suthanthira-ilavasa-menporul
 

31 August, 2016

கூகுள் பிளஸ்சின் இரட்டைப் பத்தி தோற்றத்தை ஒரு பத்தி தோற்றமாக மாற்றுவது எப்படி?

உங்களில் சிலர் "கூகுள் பிளஸ்"சை பயன்படுத்துபவராக இருக்கலாம்.

கூகுள் பிளஸ்சில் என்னை வெறுப்பேற்றும் ஒரு அம்சம் என்னவென்றால், மேசைக்கணினியில் (desktop) பார்க்கும்போது முதலில் அதன் தோற்றம் இரட்டைப் பத்திகளாக (dual column) இருக்கும். இந்தப் படத்தில் அதன் இரட்டைப் பத்தி தோற்றத்தை காணலாம்.



இதனால் அதன் செய்தியோடையை (stream) பார்வையிடும்போது கண்களுக்கு வசதியாக இல்லாமல் எளிதில் சோர்வடையும். மனமும் குழப்பமடையும்.

அப்படி நினைப்பவர்கள், அந்த இரட்டைப் பத்தி தோற்றத்தை ஒரே பத்தி தோற்றமாக மாற்றிக்கொள்ள வழியிருக்கிறது.

1. புதிய கூகுள் பிளஸ்சில் மாற்றுவது எப்படி?

இடதுபுறத்தில் தென்படும் settings-ஐ https://plus.google.com/settings கிளிக் செய்து வரும் பக்கத்தில், Stream என்னும் தலைப்பின் கீழ் Restrict stream to  single-column layout on all screen sizes என்னும் அம்சத்தை செயல்பாட்டிற்கு (On switch)  கொண்டுவரவும்.



இப்போது கூகுள் பிளஸ் ஓடையை refresh செய்து பார்த்தால் ஒரே பத்தியாக தெரியும்.

1. பழைய கூகுள் பிளஸ்சில் (classic version) மாற்றுவது எப்படி?

பழைய கூகுள் பிளஸ்சில் மாற்ற அதன் settings-க்கு செல்லவும்.

https://plus.google.com/settings

அங்கு Accessibility என்ற தலைப்பின் கீழ் Change the presentation of some pages to work better with screen readers and other accessibility tools என்பதன் check box-ஐ சரிகுறியிடவும். (tick). அந்த மாற்றம் உடனே தானாகவே சேமிக்கப்பட்டுவிடும்.



இப்போது கூகுள் பிளஸ் ஓடையை refresh செய்து பார்த்தால் ஒரே பத்தியாக தெரியும்.



* பழைய / புதிய கூகுள் பிளஸ்களுக்கிடையே மாற விரும்புபவர்கள் https://plus.google.com/u/0/ பக்கத்திற்கு சென்று அதன் கீழ் இடது பக்கம் காணப்படும்

1. Back to classic google+

அல்லது

2. Try the new Google+


சுட்டிகளை தேவைக்கேற்ப கிளிக் செய்து மாறிக்கொள்ளலாம்.


back to top