
லினக்ஸ் பயன்படுத்த 100 காரணங்கள் தொடரை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
1. லினக்ஸ் இலவசமா? ஆமாங்க ஆமாம்.
2. லினக்ஸ் Install செய்தபிறகு வைரஸ் வருமா? வரவே வராது, வரவும் முடியாது! ஆன்டி வைரஸ் தேவையே இல்லை. போயிந்தி, போயே போச்சி, It's gone, சொலகாசே. (அந்த கால அம்ருதாஞ்சன் விளம்பர பாணியில் படிக்கவும்).
3. ஒரு முறை டவுன்லோட் செய்துவிட்டு 1000 Copies கூட எடுத்துக்குங்க. தடையே இல்லை.
4. நீங்கள் ஒரு லினக்ஸ் குறுவட்டை சட்டத்தை எந்த விதத்திலும் மீறாமல் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் தைரியமாக வினியோகிக்கலாம்.

5. லினக்ஸ் இன்ஸ்டால் செய்யும்போது அதை activate செய்ய தேவையே இல்லை.
6. சீரியல் எண் கேட்காது. கேட்கவே கேட்காதுன்றேன்!
7. கள்ள நகல் எடுத்து பயன்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு இருக்காது. (இது காசு கொடுத்து வாங்கற நல்லவங்களுக்கு பொருந்தாது).
8. அடுத்த வெர்சன் லினக்ஸ் வந்தா அப்கிரேடு செய்ய காசு கொடுக்க வேணாம். (ஐ! இது ரொம்ப நல்லா இருக்கே)
PKP.IN இல் வந்த ஒரு பதிவை ஒரு நாளிதழ் அப்படியே காப்பி அடித்து போட்டது என்று சொல்கிறார்கள் . அப்படி எந்த ஒரு தின, வார, மாத, வருட, நூற்றாண்டு மலர் இந்த தொடரை போட நினைத்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும். தொடரும்.......