உங்கள் ஆன்ட்ராய்டு திறன்பேசியின் (Smartphone) பேட்டரி ஒவ்வொரு சார்ஜுக்கும் இடையே (மேற்கண்ட வீடியோவில் வரும் Duracell Bunny மாதிரி) நீடித்து உழைக்க இப்படி செய்து பார்க்கலாம்.
எந்தவொரு App-ஐ இன்ஸ்டால் செய்தாலும், அதன் இரண்டு செட்டிங்குகள் default-ஆக பேட்டரி சார்ஜையும், அதன் ஆயுளையும் (lifespan) தீர்த்துக்கட்டும் விதமாக இருக்கும்.
அவை:
1. Mobile data - Allow background data usage
2. Battery - Unrestricted or Optimised.
இதை மாற்ற முதலில் திறன்பேசியின் குறிப்பிட்ட App-ன் செட்டிங்குக்கு செல்லுங்கள்.
Mobile data - Allow background data usage செட்டிங்கை "ON"-லிருந்து "OFF" என்று மாற்றிவிட்டால் அந்த App-ஐ நீங்கள் foreground-ல் பயன்படுத்தும்போது மட்டும்தான் மொபைல் டேட்டா தொடர்பு செயல்படும். மற்ற நேரங்களில் கைபேசி அதற்கு முயற்சிக்காது. அதனால் அந்த அளவுக்கு பேட்டரி சார்ஜ் சேமிக்கப்படும். பேட்டரி சார்ஜ் அதிக நேரம் நிற்கும்.இதில் ஒரு குறை என்னவென்றால், வாட்சப்புக்கு இந்த மாதிரி செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மெசேஜ் வந்திருந்தாலும், வாட்சப்பை திறந்து பார்க்கும்போதுதான் மெசேஜ் உள்ளே வரும். இது சரிப்பட்டு வராவிட்டால், வாட்சப் தவிர மற்ற முக்கியமில்லாத App-களுக்கு இந்த ஐடியாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இரண்டாவதாக...
Battery - Unrestricted or Optimised என்று இருப்பதை "Restricted" என்று மாற்றிவிட்டால், அந்த App-ஐ நீங்கள் பயன்படுததும்போது அதன் இஷ்டத்திற்கு பேட்டரி திறனை பயன்படுத்தாமல், குறைந்த அளவே பயன்படுத்தும். அதனால் அந்த அளவுக்கு பேட்டரி சார்ஜ் சேமிக்கப்படும். பேட்டரி சார்ஜ் அதிக நேரம் நிற்கும்.
இந்த இரண்டு எளிய செட்டிங்குகளையும் திறன்பேசியின் அதிகபட்ச App-களுக்கு மாற்றிவிட்டால், அடிக்கடி சார்ஜ் போடும் தேவை குறையும். பேட்டரி ஆயுளும் (lifespan) நீடித்து வரும்.
இது உங்களுக்கு சரிப்படவில்லையெனில் பழையபடி மாற்றிக்கொள்ளலாம்.
பழைய திறன்பேசி மாடல்களில் இம்மாதிரி வசதி இல்லாமல் இருக்கலாம்.
-----------------------------
சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் |
திருக்கோவிலூர் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் தபோவனம் மகாகும்பாபிஷேக அழைப்பிதழ் ( 16.06.2024 ஞாயிற்றுகிழமை )
https://gnanananda.org/gnanananda/
https://gnanananda.org/photo-gallery/
https://gnanananda.org/video-gallery/
https://gnanananda.org/dinasari-vazhipadu/
----------------------------------------------------
Gnananda Tapovanam address:
On the Tirukoilur Tiruvannamalai Bus route near Kuladeepamangalam, Tamil Nadu 605756.
Phone No - 75983 65175 / 75983 75175
Email Address - office@gnanananda.org