Picture Credit - https://atozofai.withgoogle.com/intl/en-US/ |
தரைபேசி ஒலித்தது.
"மச்சான்! நல்லாயிருக்கீங்களா? என் பையன் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருவது உங்களுக்கு தெரியும். அவனுக்கு இன்னும் சில மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூ வரப்போகுது. அதுலே ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலைக்கு தேர்வாகனும்னா பட்டப்படிப்பு மட்டும் போதாதுன்னு நினைக்கிறேன்."
"அதனால் அவனை இப்போ ஜாப் மார்க்கெட்டில் நல்ல டிமான்டில் இருக்கிற கணினி சம்பந்தமான கூடுதல் பாடத்திட்டங்களில் சேர்த்துடலாம்னு நினைக்கிறேன். நேரத்திற்கு சான்றிதழ் வாங்கி வைத்துக்கொண்டால் நேர்முகத்தேர்வில் உதவும் இல்லையா? ஆனால் எந்த கோர்ஸ்லதான் சேர்க்கறதுன்னு தெரியலை. எந்தெந்த கோர்ஸ் படிச்சா நல்லதுன்னு சொல்லுப்பா. "
பையனுக்கு நல்ல வேலை அமைந்தால் தனக்கு பணி ஓய்வு வருவதற்கு முன் அவனுக்கு திருமணம் செய்துவிடும் திட்டம் இருப்பதாகவும் சொன்னார்.
இணைய யுகத்தில் உலகையே மாற்றப் போகும் அடுத்த தொழில்நுட்பம் Cloud Computing (முகில் கணியம்)-தான் என்று பலர் சொல்லக் கேட்டு நான் அதைப்பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்ததால் Cloud Computing-ஐயே படிக்கலாமென்று அவருக்கு பரிந்துரை செய்தேன்.
Picture Credit - https://atozofai.withgoogle.com/intl/en-US/ |
அவரே சில நாட்களுக்குப் பிறகு தான் மற்றவர்களிடமும் இதைப் பற்றி ஆலோசனை செய்ததாகவும், அப்படி விசாரித்ததில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் Machine Learning படித்தால் நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிய வந்ததால் அந்த படிப்புகளிலேயே தன் மகனை சேர்த்துவிட முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் Internet of Things (IoT) பற்றியும் சொன்னதாக ஞாபகம்.
நானும் இந்த AI & ML பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இருந்தேன். அவர் இப்படி சொன்னவுடன் எனக்கு அவற்றைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அப்போதுதான் இந்த
The A-Z of AI (https://atozofai.withgoogle.com/intl/en-US/) வலைத்தளம் பற்றி தெரியவந்தது.
Picture Credit - https://atozofai.withgoogle.com/intl/en-US/ |
இந்த வலைத்தளம் A-Z ஆங்கில எழுத்துகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சம்பந்தமான topic-ஐ தேர்ந்தெடுத்து அதை சுருக்கமாகவும் எளிதாகவும் விளக்குகிறது.
26 தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒன்றுவிடாமல் படித்த பிறகு AI பற்றிய அடிப்படை புரிதலும் தெளிவும் கிடைத்து Artificial Intelligence-னா இவ்வளவுதானா? என்று நினைக்கவைத்தது.
Picture Credit - https://atozofai.withgoogle.com/intl/en-US/ |
என்னைப் போலவே பலருக்கும் Artificial Intelligence / Machine Learning பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் இருக்கலாம். ஆனால் எங்கே தொடங்குவது என்று தெரியாமல் யோசிப்பவர்கள் தங்கள் தேடலை இந்த வலைத்தளத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.
The A-Z of AI (https://atozofai.withgoogle.com/intl/en-US/)
தேடும் நேரம் மிச்சம்!
தொடர்புக்கு மின்னஞ்சல்