சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கோபைலட் போன்ற செயற்கை நுண்ணறிவு (சுருக்கமாக செய்யறிவு) chatbot-களுக்கு போட்டியாக perplexity.ai வந்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறது.
என்விடியா தலைவர் ஜென்சென் ஹூவாங் (Jensen Huang) ஒரு பேட்டியில் தான் perplexity.ai பயன்படுத்துவதாக கூறியிருந்தார்.
அவரே பயன்படுத்தும் அளவு அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அதை பயன்படுத்திப் பார்த்தேன். கேட்ட கேள்விகளுக்கு ஓரளவு திருப்தியாக பதில் கொடுக்கிறது.
எதை ஆதாரமாகக் கொண்டு இப்படி பதில் கொடுக்கிறது என்பதற்கு source links தருகிறது. நாம் கேட்ட கேள்விகளை வைத்து அடுத்து என்னென்ன கேள்விகளை கேட்கலாம் என்றும் ஆலோசனை கொடுக்கிறது. இதனால் ஒரு விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது.
Perplexity.ai CEO பெயர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ்.
எந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்